ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு விஜயம்-

Zeid Raad al-Husseinஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செய்யித் ராத் அல் ஹ_ஸைன் இன்று இலங்கைக்கு வருகைதந்துள்ளார். அவர் எதிர்வரும் 10ம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கவுள்ளார். கடந்த ஆண்டு இலங்கை அரசாங்கம் விடுத்த அழைப்பை ஏற்று அவர் இன்று ஆறுபேர் கொண்ட குழுவுடன் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. செய்யித் ராத் அல் ஹ_ஸைனின் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அரச தலைவர்கள் பலருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். அத்துடன் நாளை மற்றும் நாளை மறுதினம் அவர் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் பகுதிகளுக்கும் செல்லவுள்ளார். இதேவேளை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்யித் ராத் அல் ஹ_ஸைனின் யாழ். விஜயத்தின்போது காணாமல் போனவர்களின் உறவுகள் நாளை ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்க ஏற்பாடு செய்துள்ளனர். இதேவேளை ஐ.நா. மனித உரிமைகளுக்கான ஆணையாளர் செய்ட் அல் ஹ_சைன் இலங்கையில் சட்ட ஒழுங்கை வலுப்படுத்தல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பான பல்வேறுபட்ட நடைமுறைச் சவால்கள் மற்றும் சந்தர்ப்பங்கள் தொடர்பாக அனைவருடனும் கலந்துரையாடவுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சந்திப்பு-

tnaதமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜிற்கும் இடையில் இன்று கொழும்பில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இச் சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர். இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இரா.சம்பந்தன், சந்திப்பு திருப்திகரமானதாக இருந்தது. எமது மக்கள் வடக்கு கிழக்கில் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து, விஷேடமாக காணி சம்பந்தமான பிரச்சினை, இராணுவத்தின் அதிக பிரசன்னம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமற் போனவர்கள் விடயம், மீள்குடியேற்றம், வீட்டு வசதி, வடக்கு மீனவர்களின் பிரச்சினை, போன்றவை குறித்து அவரிடம் விரிவாக எடுத்துக் கூறினோம் என்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு-

trtrஇலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால் சிறிசேன ஆகியோருக்கு இடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றுள்ளதுடன் இரண்டு நாடுகளுக்கும் முக்கியமானதாக கருதப்படும் விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன. நாட்டின் நல்லிணக்கத்திற்கும் அபிவிருத்தி நடைவடிக்கைகளுக்கும் முடியுமான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக இதன்போது சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். நல்லிணக்க செயற்பாடுகளுக்கும், பொருளாதார திட்ட யோசனைகளுக்கும் இந்திய அரசு வழங்கிய ஆதரவிற்கு இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது நன்றியினை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

அமைச்சர் மஹிந்த அமரவீர இந்தியாவிற்கு விஜயம்-

mangalaமீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக இந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன. இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜின் அழைப்பின் பரில் அவர் எதிர்வரும் சில தினங்களில் இந்தியா செல்ல இருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விஜயத்தின்போது இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படுகின்ற மீனவர்கள் சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி தீர்வைப் பெற்றுக்கொள்ளவும் எதிர்பாக்கப்படுகிறது. நேற்று இடம்பெற்ற இந்து-இலங்கை ஒன்றிணைந்த ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் மீனவர் பிரச்சினை குறித்து பேசப்பட்டுள்ளதுடன் அதற்கு தீர்வு பெற்றுக்கொள்ன இருதரப்பும் ஒப்புக்;கொண்டிருப்பதாக தெரியவருகின்றது.

12 இலக்கங்களை கொண்ட தேசிய அடையாள அட்டை அறிமுகம்-

NIC12 இலக்கங்களைக் கொண்ட புதிய தேசிய அடையாள அட்டை நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. 16வயதை பூர்த்தி செய்துள்ள இலங்கை பிரஜைகள் அனைவரும் ஆட்பதிவு திணைக்களத்தில் தம்மை பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள வேண்டும். இதுவரையில் 9 இலக்கங்களும், ஆங்கில எழுத்தும் கொண்ட அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டு வந்தன. இந்த அடையாள அட்டைகளில் உள்ள 9 இலக்கங்கள், நான்கு பாகங்களாக பிரிக்கப்படும். இதன்படி முதல் பாகத்தில் உள்ள இரண்டு எண்கள், நபரின் பிறந்த ஆண்டை குறிக்கும். இரண்டாம் பாகத்தில் உள்ள 3 இலக்கங்கள் குறித்த நபர் பிறந்த ஆண்டின் ஜனவரி மாதம் 1ம் திகதி முதல், அவரது பிறந்த தினம் வரையில் உள்ள நாட்களின் எண்ணிக்கையை குறிக்கும். அத்துடன் மூன்றாம் பாகத்தில் உள்ள 3 இலக்கங்கள் குறித்த நபரின் பால்நிலை குறித்த தகவலை கொண்டிருக்கும். Read more