Header image alt text

ஐ.நா ஆணையாளரின் யாழ் விஜயமும் சந்திப்புகளும்-(படங்கள் இணைப்பு)

dgfgfgஇலங்கைக்கு நேற்று வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹ_சைன் யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் செய்துள்ளார். இதன்பொது வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனை இன்றுகாலை 10மணியளவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது, முதலமைச்சர் விக்னேஸ்வரன், மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. மேலும், முதலமைச்சர் அலுவலகம் முன்பாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் நின்றிருந்த நிலையில் அவர்களையும் ஆணையாளர் சந்தித்துள்ளார். இதேவேளை தமது ஐ.நா ஆணையாளருடனான சந்திப்பு குறித்து வடமாகாண முதலமைச்சர் கருத்துக் கூறுகையில், அரசியல் கைதிகள் விடயத்தில் பொதுமன்னிப்பை விட அவர்களின் வழக்கு விசாரணை சரியான முறையில் முன்னெடுக்கப்பட்டு விடுதலை செய்யப்படுதல் தான் சரியானதாக அமையும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்தார். Read more

ஐ.நா விசேட பிரதிநிதி அடுத்தவாரம் இலங்கைக்கு விஜயம்-

united nationsஐ.நா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்தும் நோக்கில் 11பேர் கொண்ட விசேட செயலணி ஒன்று அரசாங்கத்தால் நியமிக்கப்பட உள்ளது. 2015ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற ஐ. நா மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இணை அனுசரணை வழங்கி இலங்கை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் பரிந்துரைகளை அமுல்படுத்தவே 11 பேர் அடங்கிய விசேட ஆலோசனை செயலணி ஒன்றை இலங்கை அரசாங்கம் நியமிக்க உள்ளது. இந்த விசேட செயலணியின் பணிகளுக்கு உண்மை, நீதி மற்றும் வன்முறைகள் மீள எழாமல் இருப்பது குறித்த ஐக்கிய நாடுகள் விசேட பிரதிநிதி பெப்லே டி கிரிப்பின் ஆலோசனையும் வழங்கப்பட உள்ளது. அடுத்த வாரம் இந்த விசேட பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். Read more

ஓமந்தை, நவ்வி, புளியங்குளம், நெடுங்கேணி வைத்தியசாலைகளுக்கு “புங்குடுதீவு தாயகம்” அமைப்பினால் வைத்தியசாலை பொருட்கள் அன்பளிப்பு- (படங்கள் இணைப்பு)

IMG_4414சுவிசில் உள்ள புங்குடுதீவு மைந்தர்களின் உதவியினால் வன்னிக்கு அனுப்பப்பட்ட “வைத்தியசாலைக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள்” முதற்கட்டமாக கடந்த முதலாம் திகதி (01.02.2016) அன்று வவுனியா பொது வைத்த்யசாலைக்கு வழங்கப்பட்டது நீங்கள் அறிந்ததே. இதன் தொடர்ச்சியாக வவுனியா மாவட்ட பிராந்திய வைத்தியசாலைகளுக்கும் 03.02.2016 அன்று “வைத்தியசாலைக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள்” வழங்கி வைக்கப்பட்டன. தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் வேண்டுகோளிற்கிணங்க, சுவிஸ் “புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகம்” அமைப்பினால் வவுனியா ஓமந்தை, நவ்வி(பாலமோட்டை), புளியங்குளம், நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைகளுக்கு தேவையான ஒருதொகுதி பொருட்களே 03.02.2016 அன்று அன்பளிப்புச் செய்யப்பட்டது.

தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வின் பிரதம அதிதிகளாக வவுனியா நகரசபையின் முன்னாள் நகர பிதாவும், வட மாகாணசபை உறுப்பினருமான திரு ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும், கழகத்தின் ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆகியோர் கலந்து கொண்டு அன்பளிப்பு பொருட்களை வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களிடம் நேரடியாக கையளித்தார்கள்.
Read more