தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலய மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-(படங்கள் இணைப்பு)
வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி நேற்று முன்தினம் (08.02.2016) அதிபர் திருமதி எம்.எ.மோகன் அவர்களது தலைமையில் வித்தியாலய மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண சபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன் (பவன்) அவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், சிறப்பு விருந்தினர்களாக உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு எம்.என்.யு.என்.சுபசிங்க, மேக்சன் வங்கி முகாமையாளர் திரு ஆர்.சரவணன் ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் திரு ல.யூட் பரதமாறன் ஆகியோரும் கலந்துகொண்டனர். அத்துடன் அயல் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் என பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர். இவ் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிக்கான அனுசரனையை லண்டனில் வசிக்கும் திரு. தர்மலிங்கம் நாகராஜா அவர்கள் வழங்கியிருந்தார்.