வவுனியா உமாமகேஸ்வரன் இல்லத்தில் புளொட் காரியாலயம் திறந்துவைப்பு-
வவுனியா மாவட்ட புளொட் காரியாலயங்களில் ஒன்றான கோவில்குளம், உமா மகேஸ்வரன் வீதி, உமா மகேஸ்வரன் இல்லத்தில் அமைந்துள்ள அலுவலகம்
புனருத்தாபனம் செய்யப்பட்ட நிலையில் மக்கள் செயற்பாடுகளுக்காக எதிர்வரும் 14.02.2016 ஞாயிற்றுக்கிழமை அன்றுகாலை 10.00 மணியளவில் திறந்து வைக்கப்படவுள்ளது.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் மேற்படி காரியாலயத்தினை திறந்து வைக்கவுள்ளார்.