Header image alt text

கட்சித்தாவல்கள் கூட்டமைப்பின் ஒற்றுமையை கேள்விக்குள்ளாக்கும்-புளொட் தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி விசேட செவ்வி-

D.Sithadthan M.P,.புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கும் செயற்­பா­டுகள், கூட்­ட­மைப்­பினுள் கட்­சித்­தா­வல்கள், வெளிநாட்டுச் சந்­திப்­புக்கள், தென்­னி­லங்­கையின் மாறாத நிலைப்­பா­டுகள், பிராந்­திய, சர்­வ­தேச நாடு­களின் ஆட்­சி­மாற்­றத்தின் பின்­ன­ரான நிலைப்­பா­டுகள் தொடர்­பாக தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­யான தமிழ் மக்கள் விடு­தலைக் கழ­கத்தின் (புளொட்) தலை­வரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன் வழங்­கிய செவ்­வியில்,

தீர்வு விட­யத்தில் அதி­யுச்ச கோரிக்­கை­க­ளையே முன்­வைக்­க­வேண்டும். கட்­சித்­தா­வல்கள் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் ஒற்­று­மையை கேள்­விக்­குள்­ளாக்கும் ஆபத்­துள்­ளது. அத­னைத்­த­டுக்­க­வேண்­டிய பொறுப்பு கட்­சித்­த­லை­மை­க­ளுக்கே உள்­ளது. முன்னாள் ஜனாதிப­திக்கு பெரும்­பான்­மை­யி­னத்­தினுள் காணப்­படும் ஆத­ரவு, தெற்கு நிலை­மைகள் ஆகி­ய­வற்றை புதிய அர­சாங்­கமும் கவ­னத்தில் எடுத்தே தனது செயற்­பா­டு­களை கருத்­து­க்களை முன்­வைக்கும் என்­பதை ஆரம்­பத்­தி­லி­ருந்தே சிந்­தித்­துக்­கொண்­டிருந்தேன். அதே­நேரம் தமது நலன்­க­ளுக்­காக பிராந்­திய, சர்­வ­தேச தரப்­புக்கள் எம்மைப் பலி­கொ­டுப்­ப­தற்கு தயங்­க­மாட்­டாது என்­பதை உணர்ந்து கொள்­ள­வேண்டும் எனக் குறிப்­பிட்டார். அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு, Read more

பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களுடன் அரசியல் ஆர்வலர்கள் கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)

20160214_185732_resizedபுளொட் தலைவரும் யாழ், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் யாழ். கந்தரோடையில் அமைந்துள்ள இல்லத்தில் 14.02.2016 அன்று சமகால அரசியல் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வழமையாக நடைபெற்று வருகின்ற இத்தகைய கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாகவே 14.02.2016 அன்று கந்தரோடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலுக்கு அரசியல் ஆர்வலர்கள் பலரும் அழைக்கப்பட்டிருந்தார்கள். யாழ். பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் திரு. குமாரவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின்போது

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், அரசியல் ஆர்வலர்களும் சமகால அரசியல் தொடர்பில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. Read more

சேதமடைந்த காக்கைதீவு மீன்சந்தையின் நிலைமைகளை சீர்செய்ய பா.உ த.சித்தார்த்தன் நடவடிக்கை-(படங்கள் இணைப்பு)

20160217_130241_resizedயாழ். காக்கைதீவு மீன்சந்தையானது மிகவும் சேதமடைந்த நிலையில், மக்களின் பாவனைக்கு ஒவ்வாத வகையில் மிகவும் தரம் குறைந்த நிலையில் உள்ளது.

இந்த நிலைமை தொடர்பில் பாவனையாளர்களும் விற்பனையாளர்களும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களிடம் தெரிவித்த முறைப்பாட்டிற்கமைய

நேற்று (17.02.2016) அங்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் அவர்கள் மேற்படி மீன் சந்தையை சீரமைப்பது தொடர்பாக அம்மக்களுடன் கலந்து பேசியதுடன்,

இப்பிரச்சினையினை வலிதெற்கு பிரதேச சபை செயலாளரின் கவனத்திற்கு கொண்டுவந்து இப் பிரச்சினையினை நிவர்த்தி செய்யும்படி கேட்டுக்கொண்டார். Read more

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜெர்மன் ஜனாதிபதியுடன் சந்திப்பு-

6576ஜெர்மனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டு ஜனாதிபதி ஒக்கீம் கொக்கை சந்தித்து உத்தியோகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். பர்லீனிலுள்ள பெல்வியு மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஜெர்மன் ஜனாதிபதி அமோக வரவேற்பளித்ததாகவும், ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 5 தசாப்த காலமான ஜெர்மனால் இலங்கைக்கு வழங்கப்பட்ட அபிவிருத்திக்கான நிதி உதவி தொடர்பில் தனது இதயபூர்வமான நன்றிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது கூறியுள்ளார். ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தி முன்னோக்கி செல்லும் இலங்கையின் எதிர்காலத்திற்கு தமது அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய அதியுட்ச பங்களிப்பை தாம் பெற்றுக் கொடுப்பதாக இதன்போது ஜெர்மன் ஜனாதிபதி ஒக்கீம் கொக் உறுதியளித்துள்ளமை இங்கு குறிப்பிடக்கூடியது.

ஜேர்மனிலுள்ள இலங்கையர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு-

fdggfயுத்த காலத்தில் ஜேர்மனில் தஞ்சமடைந்த இலங்கையர்களை மீண்டும் தாயகம் திரும்புமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையில் அனைத்து மக்களும் சந்தோஷமாக வாழக்கூடிய ஜனநாயக நாடாக மாற்றப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜேர்மன் சான்சலர் அஞ்சலா மெர்கலுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களை சந்தித்தபோதே, அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். மேலும், ஜேர்மனால் இலங்கைக்கு வழங்கப்படும் அவிவிருத்திக்கான உதவிகள் தொடர்பில் தனது நன்றிகளையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இணைந்து கொண்ட அஞ்சலா மெர்கல், மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையில் ஏற்பட்டுள்ள ஜனநாயக மாற்றம் தொடர்பில் தான் மிகவும் தெளிவாக இருப்பதாக கூறியுள்ளார். அத்துடன் இலங்கையின் எதிர்கால பயணத்துக்கு முடிந்த அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கச்சத்தீவு திருவிழாவிற்கு இராமேஸ்வர மக்களுக்கு மாத்திரமே அனுமதி-

xsdfdfdddகச்சத்தீவு திருவிழாவிற்கு இராமேஸ்வரத்தில் இருந்து மாத்திரமே இந்திய பிரஜைகள் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இராமேஸ்வரத்தை தவிர்ந்து ஏனைய பகுதிகளிலிருந்து கச்சதீவு திருவிழாவிற்கு செல்வோர் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இராமேஸ்வரம் பொலிஸ் துணை கண்காணிப்பாளர் முத்துராமலிங்கம் குறிப்பிட்டுள்ளார். கச்சதீவு திருவிழாவிற்கு இராமேஸ்வரத்தில் செல்வதற்கென 91 படகுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன் , மூவாயிரத்து 500 பக்தர்கள் பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் இடம்பெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது பொலிஸ் துணை கண்காணிப்பாளர் இந்த விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. எதிர்வரும் பெப்ரவரி 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா இடம்பெறவுள்ளது.

ஜோன் கீ எதிர்வரும் வாரத்தில் இலங்கைக்கு விஜயம்-

tytytமூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ எதிர்வரும் வாரம் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக மற்றும் அரசியல் தொடர்புகளை வலுப்படுத்தும் வகையில் இந்த விஜயம் அமையவுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ இலங்கையில் தங்கியிருக்கும் காலப் பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி உள்ளிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினரையும் சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தவுள்ளார். அத்துடன், இலங்கையிலுள்ள வர்த்தக சமூகத்தினரையும் நியூசிலாந்து பிரதமர் சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தவுள்ளார்.

இலங்கைக்கு 14 மில்லியன் யூரோக்கள் நிதியுதவி-

gfhggஇலங்கைக்கு 14 மில்லியன் யூரோக்கள் நிதியுதவி வழங்க ஜேர்மன் இணக்கம் தெரிவித்துள்ளது. ஜேர்மனுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்த நாட்டு தலைவர்களுடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாகவே இந்த, உதவி கிட்டியுள்ளது. ஜேர்மன் – இலங்கைக்கு இடையிலான அபிவிருத்தி ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக, அங்கிருக்கும் எமது விஷேட பிரதிநிதி ஷெகான் பரணகம குறிப்பிட்டுள்ளார். இந்த நிதியில் ஆறு மில்லியன் யூரோ வில்பத்து சரணாலய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகவும், வடக்கு, கிழக்குக்காக நான்கு மில்லியன் யூரோவும், 2.4 மில்லியன் யூரோ சிறிய மற்றும் மத்தியதர தொழிற்துறை முன்னேற்றத்திற்காகவும் மீதமுள்ள 0.6 மில்லியன் யூரோ உள்ளூராட்சி மன்ற மற்றும் பேராசிரியர்கள் போன்றோருக்காகவும் பயன்படுத்தப்படவுள்ளது. அத்துடன் மேலும் ஒரு மில்லியன் யூரோ விஷேட வேலைத்திட்டத்திற்காக வழங்கப்பட்டவுள்ளதாகவும் ஷெகான் பரணகம கூறியுள்ளார். இதேவேளை, ஜனாதிபதியின் ஜேர்மனுக்காக விஜயத்தின் இறுதி நாளான இன்று அவர் வர்த்தகர்களுடன் சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார். இந்த சந்திப்பில் 250 ஜேர்மனிய மற்றும் 32 இலங்கை வர்த்தகர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஸ ஊழல் மோசடி ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்-

mahindaமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பாரிய ஊழல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்றையதினம் மீண்டும் ஆஜராகியுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சுயாதீன தொலைக்காட்சி சேவையில் கட்டணம் செலுத்தப்படாது விளம்பரம் ஒளிபரப்பு செய்தமை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக முன்னாள் ஜனாதிபதிக்கு இன்றும் அழைப்பு விடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெஷில் டி சில்வா குறிப்பிட்டுள்ளார். சுயாதின தொலைக்காட்சியின் முன்னாள் தலைவர் அநுர சிறிவர்த்தன இந்த விடயம் தொடர்பில் தற்போது வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் கூறியுள்ளார். அதிகாரத்தை பயன்படுத்தி அரச நிறுவனங்களுக்கு நட்டத்தை ஏற்படுத்தியுள்ளமை தொடர்பான முறைப்பாடு குறித்தே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பாரிய ஊழல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் லெஷில் டி சில்வா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சேரிப்புற வாசிகளுக்கு புதிதாக 13,000 வீடுகள் அமைக்கத் திட்டம்-

sdsssகொழும்பில் வாழும் சேரிப்புற வாசிகளுக்கு 13,000 புதிய வீடுகளில் குடியமர்த்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது. கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு வேலைத்திட்டங்களின் போது சேரிப் புறத்தில் வாழந்த 5,000 பேர் புதிய வீடுகளில் குடியமர்த்தப்பட்டதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஞ்சித் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார். சிறிய பகுதியில் வாழ்ந்த இவர்களுக்கு 500 சதுர அடி பரப்பிலான வீடுகளை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் சேரிப்புறத்தில் வாழும் 47,000 பேரை புதிய இடத்தில் குடியமர்த்தப்பட வேண்டி உள்ளதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். கொழும்பு நகரின் பொருளாதார பெறுமதி இடங்களில் வாழும் சேரிப்புர மக்கள் நகர அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் என்பவற்றிக்கு இடையூறாக காணப்படுவதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஞ்சித் பெணர்ன்டோ சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்காலத்தில் இவ்வாறானவர்கள் பாரிய சமூக பிரச்சினைகளை எதிர்நோக்க கூடும் என அவர் தெரிவித்தார். எனவே சட்டவிரோதமாக குடியேறி இருக்கும் சேரிப்புற மக்களின் தேவைக்கேற்ப புதிய வீடுகளை பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஞ்சித் பெணர்ன்டோ கூறியுள்ளார்.

மாங்குளம் விபத்தில் ஆறுபேர் காயம்-

ertrtமுல்லைத்தீவு மாங்குளம் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் அறுவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த வான் ஒன்று ஏ-09 வீதி மாங்குளம் பகுதியில் இன்று அதிகாலை வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதுண்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த அறுவர் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். வீதியில் கட்டாக்காலியாக நடமாடிக்கொண்டிருந்த எருமைமாட்டுடன் வான் மோதுண்டு விபத்துக்குள்ளாகாகியிருப்பதாக மாங்குளம் பொலிஸார் குறிப்பிட்டனர். இதில் வவுனியாவைச் சேர்ந்த தெய்வேந்திரம் வாசிகன் (வயது 27), யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வாகன சாரதியான சிறீராஜ்குமார் சந்திரராஜ் (வயது 26), யாழ்ப்பாணம் – நெல்லியடியை சேர்ந்த சுந்தரலிங்கம் ராகவேந்தர் (வயது 26), யாழ்ப்பாணம் நீர்வேலியை சேர்ந்த செல்வராசா ஜசோதரன் (வயது 28), விசுவமடு புன்னைநீராவியைச் சேர்ந்த விக்னேஸ்வரராசா ஜசோதரன் (வயது 30), யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த பரமநாதன் லோகநாதன் (வயது 26) ஆகியோரே படுகாயமடைந்தவர்களாவார். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரனையினை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பலாலி விமானநிலைய விரிவாக்கத்திற்கு முதல்வர் எதிர்ப்பு-

vigneswaranஇந்தியாவின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ள பலாலி விமான நிலையத்தின் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே விக்னேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார். பலாலியில் இருந்து தென்னிந்தியாவுக்கான நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்க வேண்டும் என்ற, பிரேரணையை 2014ம் ஆண்டு வட மாகாண சபை நிறைவேற்றியது. இரு வாரங்களுக்கு முன்னர் இந்தியா மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் பலாலி விமான நிலையத்தை விரிவாக்குவது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தனர். இந்நிலையில், முதலமைச்சரின் இந்த எதிர்ப்பு குறித்து, இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள வட மாகாண கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, பலாலி விமான நிலையத்தின் விரிவாக்கம் மயிலிட்டி மீன்பிடித்துறையை அண்டியுள்ள மக்களின் நலனைப் பாதிக்கும் என்பதாலேயே இவ்வாறு எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். Read more

சரணடைந்தோர் பெயர் விபரங்களை 58ம் படையணி ஒப்படைக்க வேண்டும்-நீதிமன்றம் உத்தரவு-

-0=-இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் தொடர்பான ஆவணத்தை இராணுவத்தின் முல்லைத்தீவு 58ம் படையணி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 58ம் இராணுவ படையணி அதிகாரிகளிடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியல்கள் அந்தப் படையணியின் முகாம் அலுவலகத்தில் இருப்பதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. அதனையடுத்தே, அந்த பெயர்ப் பட்டியல் ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டதாக வழக்கறிஞர் கே.எஸ். ரட்ணவேல் பிபிசியிடம் தெரிவித்தார். அரசாங்கம் அளித்த பாதுகாப்பு மற்றும் பொதுமன்னிப்பு உத்தரவாதத்தை அடுத்து, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் பலர் முல்லைத்தீவு 58- ஆம் படையணி முகாமை சேர்ந்த இராணுவ அதிகாரிகளிடம் சரணடைந்திருந்ததாகக் கூறப்படுகின்றது. ஆனால், அவர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற தகவல் இதுவரையில் இராணுவத்தினராலும் அரசாங்கத்தினாலும் வெளியிடப்படவில்லை. Read more