சேதமடைந்த காக்கைதீவு மீன்சந்தையின் நிலைமைகளை சீர்செய்ய பா.உ த.சித்தார்த்தன் நடவடிக்கை-(படங்கள் இணைப்பு)

20160217_130241_resizedயாழ். காக்கைதீவு மீன்சந்தையானது மிகவும் சேதமடைந்த நிலையில், மக்களின் பாவனைக்கு ஒவ்வாத வகையில் மிகவும் தரம் குறைந்த நிலையில் உள்ளது.

இந்த நிலைமை தொடர்பில் பாவனையாளர்களும் விற்பனையாளர்களும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களிடம் தெரிவித்த முறைப்பாட்டிற்கமைய

நேற்று (17.02.2016) அங்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் அவர்கள் மேற்படி மீன் சந்தையை சீரமைப்பது தொடர்பாக அம்மக்களுடன் கலந்து பேசியதுடன்,

இப்பிரச்சினையினை வலிதெற்கு பிரதேச சபை செயலாளரின் கவனத்திற்கு கொண்டுவந்து இப் பிரச்சினையினை நிவர்த்தி செய்யும்படி கேட்டுக்கொண்டார். 20160217_130241_resized20160217_125248_resized 20160217_130127_resized