பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களுடன் அரசியல் ஆர்வலர்கள் கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)

20160214_185732_resizedபுளொட் தலைவரும் யாழ், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் யாழ். கந்தரோடையில் அமைந்துள்ள இல்லத்தில் 14.02.2016 அன்று சமகால அரசியல் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வழமையாக நடைபெற்று வருகின்ற இத்தகைய கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாகவே 14.02.2016 அன்று கந்தரோடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலுக்கு அரசியல் ஆர்வலர்கள் பலரும் அழைக்கப்பட்டிருந்தார்கள். யாழ். பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் திரு. குமாரவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின்போது

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், அரசியல் ஆர்வலர்களும் சமகால அரசியல் தொடர்பில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. 20160214_185732_resized20160214_185841_resized 20160214_185928_resized