தமிழில் தேசிய கீதத்துடன் ரெஜினோல்ட் குரே கடமைகள் பொறுப்பேற்பு-

sdfdவடமாகாணத்தின் 5ஆவது ஆளுநராக பதவியேற்றுக் கொண்ட ரெஜினோல்ட் குரே இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். யாழ். கச்சேரி வீதியில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று காலை 10.28 மணியளவில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த கடமைப் பொறுப்பேற்றல் நிகழ்வில், தனது பாரியாருடன் வருகை தந்திருந்த அவரை, வடமாகாண சபை உறுப்பினர்கள் வரவேற்றனர்.

தமிழர் சம்பிரதாய முறைப்படி வரவேற்கப்பட்ட அவர், அலுவலக வாசலில் பால் காய்ச்சியதுடன், தமிழ் மற்றும் சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தேசிய கீதத்தினை தொடர்ந்து, மங்கள விளக்கேற்றல் வைபவம் இடம்பெற்றது. இதில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். அதன்பின்னர் இந்து, பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவ மத தலைவர்களின் ஆசியுடன், சுமார் 10.28 மணியளவில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் முன்னிலையில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க வழக்கிலிருந்து விடுதலை-

shraniமுன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க அவருக்கு எதிராக இடம்பெற்று வந்த வழக்கில் இருந்து விடுதலை பெற்றுள்ளார். தனது சொத்து விபரங்களை சரியான முறையில் வெள?க்காட்டவில்லை எனக்கூறி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை குறித்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இன்றைய விசாரணை நடவடிக்கையின் போது ஷிராணி பண்டாரநாயக்க தரப்பினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்ததன் பின்னர் குறித்த குற்றப் பத்திரிகையை வாபஸ் பெறுவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவித்தது. அத்துடன் நீதிமன்ற கட்டுப்பாட்டில் இருந்த அவருடைய கடவுச்சீட்டையும் விடுவிப்பதற்கு நீதிபதி உத்தரவிட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வட மாகாணத்தின் பல பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லை-

minesவட மாகாணத்தில் மேலும் 63 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் நிலக் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

நாகர்கோயில், முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி மற்றும் கிளாலி ஆகிய பகுதிகளில் நிலக் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டும் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார்.

புலிகளால் 2064 சதுர கிலோமீற்றர் பரப்பளவிற்கு நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தாக இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.இராணுவத்தினர் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் இணைந்து நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை, ஆஸ்திரியா ஜனாதிபதிகள் சந்தித்துப் பேச்சு-

maithripala_sirisenaஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆஸ்த்திரியா நாட்டு ஜனாதிபதி ஹெய்ன் பிஷர் அவர்களை இன்று சந்தித்துள்ளார்.

ஜேர்மனிக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஆஸ்த்திரியா நோக்கி சென்றிருந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆஸ்த்திரியா விஜயத்தின் போது அந்நாட்டு உயர் அரச பிரதிநிதிகளை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரிஸ்ணவியின் சடலம் இன்று அடக்கம்-(படங்கள் இணைப்பு)

ghgggவவுனியாவில் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட மாணவியின் சடலம் இன்று தச்சனாங்குளம் இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதன்போது,மகளிர் அமைப்புக்களால் பேரணியும் முன்னெடுக்கப்பட்டது.

நேற்று மாலை மற்றும் இன்று காலையும் உக்கிளாங்குளத்தில் அமைந்துள்ள அவரது வீட்டில் சடலம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பாடசாலைகளின் மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இதையடுத்து, சடலம் பண்டாரிகுளம் ஊடாக எடுத்துச்செல்லப்பட்டு பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரிக்கு முன்பாக சிறிது நேரம் வைக்கப்பட்டு பின்னர் தச்சனாங்குளம் இந்து மயானத்தில் நல்லடக்கத்துக்காக எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

rrtt fhggg ghggg gggh ghghg ghgghg
666
err rtyt 8798