மரண அறிவித்தல்

இனப்பற்றும், தமிழ் மக்களின் அரசியலில் மிகுந்த ஈடுபாடும் கொண்ட இவர் விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் இளைஞர் பேரவையிலும், அதன் பின்னர் காந்தீயம் அமைப்பிலும் தம்மை இணைத்துக்கொண்டு மக்கள் பணியினை ஆரம்பித்தார். அதன் பின்னர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அரசியல் பிரிவிலே (புளொட்) அதன் ஆரம்ப காலம் தொட்டு தீவிர செயற்பாட்டாளராக தொடர்ச்சியாக இயங்கி வந்தார்.
அன்னாரின் இழப்பு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாது தமிழ் மக்களுக்கே ஒரு பேரழிப்பாகும். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களோடு புளொட் அமைப்பினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு, துயரத் தோய்ந்த எமது அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
குறிப்பு – அன்னாரின் பூதவுடல் செட்டிகுளத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, ஞாயிறன்று முற்பகல் 11மணியளவில் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளது. தொடர்புகட்பு : (0773157730 – கோபு)