காணாமல் போணவர்களுக்கு காணவில்லை சான்றிதழ் வழங்கப்படும்.-வஜிர அபேவர்தன
காணாமல் போனவர்கள் தொடர்பாக மரண சான்றிதழ்கள் பெற முடியாதவர்கள் உரிமைகளை வெளிப்படுத்துவதற்காக விஷேட சான்றிதழ் ஒன்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் .
உலகில் பல நாடுகளில் அவ்வாறான சான்றிதழ்கள் வழங்கப்படுவதாகவும் அதன்படி அந்த சான்றிதழை ‘காணவில்லை சான்றிதழ்’ என்று அறிமுகப்படுத்துவதாகவும். கொழும்பு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற, பரந்தளவிலான பிறப்பு, இறப்பு, விவாக பதிவாளர்கள் சங்கத்தின் 27வது ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ நிகழ்ந்த துரதிஷ்டவசமான சம்பவங்கள் இதுவென்றும் அவர்களுக்காக இந்த சான்றிதழ்கள் மூலம் உரிமை கிடைக்கும் என்று தான் நம்புவதாகவும். உயிரை மீண்டும் வழங்க முடியாதென்று கூறிய அமைச்சர சிறு உதவிகளை வழங்க முடியும் என்று இங்கு கூறினார்.
அத்துடன் எதிர்காலத்தில் பதிவாளர் துறையை சார்ந்தவர்களுக்கு சீருடை ஒன்றை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
மட்டக்களப்பு குருக்கள்மடம் பகுதியில் பெண்னொருவரின் சடலம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் இருந்து பெண்னொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குருக்கள்மடம் தேவாலயத்திற்கு அருகில் உள்ள காணி ஒன்றில் இருந்தே குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலம் சுமார் 40 வயதுடையதாக இருக்கும் என தெரிவித்த பொலிஸார் இதுவரை அடையாளம் காணப்படவில்லையென தெரிவித்தனர். குறித்த பெண் கொலை செய்யப்பட்டு இப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என தெரிவித்த பொலிஸார் இது தொடர்பான விசாரணை நடைபெற்றுவருவதாக தெரிவித்தனர்.
பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
முஸ்லிம்களுக்கான தனியலகு கோரிக்கையை மறக்கடிக்க முடியாது
இலங்கையின் புதிய அரசியலமைப்பு மூலம் முஸ்லிம்களுக்கான தனி நிர்வாக அலகு ஒன்று உருவாக வேண்டும் என்று கோரிக்கையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் முன்வைத்துள்ளார்.
´முஸ்லிம்களுக்கான தனியலகு´ பற்றி பேசாமல் அரசியல் தீர்வுத் திட்டப் பேச்சுக்களை முன்னெடுப்பது சாத்தியமில்லை என்ற அடிப்படையிலேயே இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாக அவர் கூறினார். Read more