ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு பச்சைகுத்து
 
tamilnadu01தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி சென்னையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அவரது உருவப் படத்தை தங்கள் கைகளில் பச்சை குத்திக் கொண்டனர்.

ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.கவினர் பல்வேறு கொண்டாட்டங்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு.இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை வேளச்சேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான அசோக், 668 பேருக்கு பச்சை குத்தும் நிகழ்ச்சியை ஏற்பாடுசெய்திருந்தார்.
ஒரு திருமண மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், பச்சை குத்தும் பணியை மேற்கொள்வதற்கென நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த சுமார் 40 பேர் அழைத்துவரப்பட்டிருந்தனர்.
தன் கையைப் பார்த்து பலரும் ஆசைப்பட்டதால் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாகச் சொல்கிறார் அசோக்.
காலை எட்டு மணிக்குத் துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிகழ்ச்சி அமைச்சர்கள் வருவதற்குத் தாமதமானதால், மதியம் 3.15 மணியளவில் துவங்கியது.
 
முன்னாள் முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் இந்த நிகழ்ச்சியைத் துவக்கிவத்தனர்.
ஆயிரம் பேர்வரை இந்த நிகழ்ச்சியில் பச்சை குத்திக்கொண்டதாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் தெரிவித்தனர்.
668 பேருக்கு பச்சை குத்துவதற்கென திட்டமிடப்பட்டாலும், சுமார் ஆயிரம் பேர் வரை ஜெயலலிதாவின் உருவப் படத்தை தங்கள் கைகளில் பச்சை குத்திக்கொண்டதாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த சட்டமன்ற உறுப்பினர் அசோக் தெரிவித்தார்.

tamilnadu02ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி இப்படி ஆயிரம் பேருக்கு பச்சை குத்திவிடும் எண்ணம் எப்படி வந்தது என இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த வேளச் சேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அசோக்கிடம் கேட்டபோது, தன் கையில் இருக்கும் பச்சையைப் பார்த்து, பலரும் ஆசைப்பட்டதால், இது போன்ற ஏற்பாட்டைச் செய்ததாகக் கூறினார்.
அமைச்சர்கள் வராததால் பச்சை குத்திக்கொள்வதற்கு காலை முதல் காத்திருந்த பெண்கள்.
ஆனால், இது சம்பந்தப்பட்ட தலைவருக்கு பெருமை சேர்க்கும் விஷயமல்ல எம்.ஜி.ஆர். காலகட்டத்திலும் இம்மாதிரி பச்சை குத்துதல் நடந்ததாகவும், அம்மாதிரி குத்திக்கொண்டவர்கள், பிறகு கட்சி மாறியபோது அதனை மறைக்கும் வகையில் சட்டை அணிய வேண்டியிருந்தது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் ஞாநி