வவுனியா மாணவி படுகொலை: வடக்கில் முழு கடையடைப்பு ஹர்த்தால்
இலங்கையின் வடக்கே, வவுனியாவில் பள்ளி மாணவி ஹரிஸ்ணவி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று கோரி நடத்தப்பட்ட கடையடைப்பினால் வடக்கு மாகாணத்தில் இன்று புதன்கிழமை இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இந்தக் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டது. பாடசாலைகள் இயங்கவில்லை. அரச அலுவலகங்கள், வங்கிகள் என்பன மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இயங்கின. Read more