கொழும்பில் உயர் தொழில்நுட்ப கற்கை நிறுவனம் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களால் திறந்து வைப்பு-(படங்கள் இணைப்பு)

27.02.2016 colombo ATT office (7)சிங்கப்பூரைத் தலைமையகமாக கொண்டு இந்தியா, வியட்னாம், அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கும் ATT  SYSTEMS (advanced Technology Training Systems Institute) உயர் தொழில்நுட்ப கற்கை நிறுவனம் தனது தளத்தினை இன்று (27.02.2016) இலங்கையிலும் ஸ்தாபித்துள்ளது. இலங்கை மாணவர்களுக்கு அதிநவீன தொழில்நுட்பத்தை கற்றுக் கொடுப்பதோடு வேலைவாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுப்பதே இதன் நோக்கமாகும். இலக்கம் 16, ஹேக்வீதி, பம்பலப்பிட்டி, கொழும்பு-04 என்ற முகவரியில் அமைந்துள்ள மேற்படி நிறுவனத் திறப்புவிழாவில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டு நிறுவனத்தினைத் திறந்துவைத்தார். சிறப்பு விருந்தினராக வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ கந்தையா சிவநேசன் அவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், நிறுவனத்தின் வர்த்தக விரிவாக்க முகாமையாளர் திரு. ஆர்.சுமன்ஜன், நிறுவனத்தின் இலங்கைக்கான இயக்குநர் திரு. எஸ்.சுகிர்தன், நிறுவனத்தின் இலங்கைக்கான செயலாளர் எஸ்.சுதர்மன், பொறியியலாளர் எஸ்.சஞ்ஜீவ் ஆகியோரும், கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் மேற்படி நிறுவனத் திறப்புவிழாவில் கலந்து சிறப்பித்திருந்தனர்.     http://www.attsystemsgroup.com 

27.02.2016 colombo ATT office (4)

27.02.2016 colombo ATT office (1) 27.02.2016 colombo ATT office (2)27.02.2016 colombo ATT office (3)
27.02.2016 colombo ATT office (5)
27.02.2016 colombo ATT office (7) 27.02.2016 colombo ATT office (8) 27.02.2016 colombo ATT office (9)