Header image alt text

தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை-த.சித்தார்த்தன் எம்.பி-

D.Sithadthanநல்லாட்சி அரசாங்கத்திடம் தமிழ் மக்கள் எதிர்பார்த்த விடயங்கள் இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில் உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட்டதன் பின்னர் அவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.

அரசியல் கைதிகள் மீது வழக்குத் தொடர்ந்து அவர்களை விடுவிக்கவேண்டும், அல்லது புனர்வாழ்வளிக்கவேண்டும். ஆனால் எவ்வித முடிவும் இன்றி தடுத்துவைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதுகுறித்து, சட்டமா அதிபருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்துரையாடி வருவதாக தெரிவித்த அவர், தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு கூட்டமைப்பினர் அழுத்தம் கொடுத்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலை மட்டுமன்றி, காணிப்பிரச்சினை, காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினை குறித்தும் அரசாங்கத்திடம் கலந்துரையாடப்பட்டு வருகிறது. எனினும் இவற்றிற்கு இன்னும் தீர்வு கிடைக்கப்பெறவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தின் முத்தமிழ் விழா-2016 – (படங்கள் இணைப்பு)

20160228_152329கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட முத்தமிழ் விழா-2016 (சங்கமம் நிகழ்வானது) கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் இன்று (28.02.2016) ஞாயிற்றுக்கிழமை மாலை 3.15மணியளவில் ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்றது. 

நிகழ்விற்கு பிரதம விருந்தினராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது பிரதிநிதியாக கௌரவ அமைச்சர் சரத் அமுனுகம அவர்கள் கலந்துகொண்டிருந்தார். நிகழ்வின் சிறப்பு விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார். விருந்தினர்கள் கௌரவித்து வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது. தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகிகளின் உரைகள் இடம்பெற்றதையடுத்து பல்கலைக்கழக மாணவ, மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. 

அத்துடன் இந்த விழாவிற்கு தமிழகத்திலிருந்து பட்டிமன்றப் புகழ் ராஜா அவர்கள் அழைக்கப்பட்டிருந்ததோடு, ராஜா அவர்களை நடுவராகக் கொண்டு ஆறு பேச்சாளர்களுடன் “சின்னச் சின்னப் பொய்கள் வாழ்க்கைக்கு சுமையே – சுகமே” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்று சின்னச் சின்னப் பொய்கள் வாழ்க்கைக்கு சுமையே என நடுவரால் தீர்ப்பளிக்கப்பட்டது. Read more

அரசியல் கைதிகள் குறித்த ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் நிலைப்பாடு தவறானது-சித்தார்த்தன் எம்.பி-

D.Sithadthan M.P,.இலங்கையில் அரசியல் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு அளித்த வரலாறு உள்ள நிலையில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அரசியல் கைதிகள் விவகாரத்தை சட்ட ரீதியாக அணுகவேண்டுமெனக் கூறியதனை அரசாங்கம் முன்னிறுத்திப் பேசுவது தவறாகுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

மகஸீன் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அரசியல் கைதிகளை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பார்வையிட்ட பின்னர் அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இலங்கை விஜயத்தின்போது அரசியல் கைதிகள் சட்டரீதியாகக் கையாளப்பட வேண்டுமெனக் கூறியமை தொடர்பாகப் பேசப்பட்டு வருகின்றது. இந்தக் கூற்றை முன்னிறுத்தி அரசாங்கம் பேசுவது மிகப்பெரிய தவறாகும்.

மனித உரிமை ஆணையாளர் சர்வதேச சட்டம் தொடர்பில் பேசுகின்றார். இலங்கையில் 1981 மற்றும் 1989 காலப்பகுதியில் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதுபோல் இந்திய-இலங்கை உடன்படிக்கை மூலம் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். Read more