கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தின் முத்தமிழ் விழா-2016 – (படங்கள் இணைப்பு)
கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட முத்தமிழ் விழா-2016 (சங்கமம் நிகழ்வானது) கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் இன்று (28.02.2016) ஞாயிற்றுக்கிழமை மாலை 3.15மணியளவில் ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்விற்கு பிரதம விருந்தினராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது பிரதிநிதியாக கௌரவ அமைச்சர் சரத் அமுனுகம அவர்கள் கலந்துகொண்டிருந்தார். நிகழ்வின் சிறப்பு விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார். விருந்தினர்கள் கௌரவித்து வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது. தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகிகளின் உரைகள் இடம்பெற்றதையடுத்து பல்கலைக்கழக மாணவ, மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.
அத்துடன் இந்த விழாவிற்கு தமிழகத்திலிருந்து பட்டிமன்றப் புகழ் ராஜா அவர்கள் அழைக்கப்பட்டிருந்ததோடு, ராஜா அவர்களை நடுவராகக் கொண்டு ஆறு பேச்சாளர்களுடன் “சின்னச் சின்னப் பொய்கள் வாழ்க்கைக்கு சுமையே – சுகமே” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்று சின்னச் சின்னப் பொய்கள் வாழ்க்கைக்கு சுமையே என நடுவரால் தீர்ப்பளிக்கப்பட்டது.