Header image alt text

போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் மகாநாடு -கொழும்பு

இலங்கை போரால் பாதிக்கப்பட்ட பெண்களின் சங்கத்தின் மகாநாடு இன்று (26.02.2016) காலை குறித்த சங்கத்தின் தலைவர் திருமதி.விசாகா.தர்மதாச தலைமையில் கொழும்பு யூனியன் பிரதேச பகுதியில் அமைந்துள்ள கஜிக் கில்ட்டன் கொட்டலில் இடம் பெற்றது. இந்; நிகழ்வில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெண் பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர். இந்; நிகழ்வில் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி.விஜயகலா.மகேஸ்வரன், வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன், நல்லூர் பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் திருமதி.கோமதி.இரவிதாஸ் உட்பட பல அரசியல் பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர். இவ் நிகழ்வின் போது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன், அவர்கள் 16 அம்சங்கள் மற்றும் சீர்திருத்த கோரிக்கைகளை போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் சங்க தலைவி திருமதி.விசாகா.தர்மதாச அவர்களிடம் ஒப்படைத்தார். அங்கு ஒப்படைக்கப்பட்ட கோரிக்கைகள் வருமாறு. Read more

யாழ். பல்கலை: புதிய ஆடைக் கட்டுப்பாட்டு அறிவித்தலால் சர்ச்சை
 
jaffna campusயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்கும் மாணவர்கள், ‘கலாசாரத்தை’ பேணும் வகையில் உடை அணிந்து வரவேண்டும் என்று விடுக்கப்பட்ட அறிவித்தல் மாணவர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்கள் முகச்சவரம் (க்ளீள் ஷேவ்) செய்திருக்க வேண்டும், ரீசேட் அணியக் கூடாது, மாணவிகள் வெள்ளிக்கிழமைகளில் சேலை அணிந்து வரவேண்டும் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் கலைப்பீட அறிவித்தல் பலகைகளின் ஊடாக தெரிவிக்கப்பட்டதாக மாணவர்கள் கூறுகின்றனர்.

இந்த அறிவிப்புகள் தம்மைக் கட்டுப்படுத்துவதாக உள்ளதாக மாணவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

யாழ். பல்கலைக்கழக கலைத்துறை மாணவர்களின் உடை மற்றும் அவர்களின் கலாசார பண்பாடு தொடர்பிலும் பல்கலைகழகத்திலும் சமூகத்திலும் வெளிப்பட்ட கரிசனையை அடுத்து, கலைப்பீட ஆசிரியர்கள் மட்டத்தில் இந்த விடயம் கலந்துரையாடப்பட்டதாக கலைப்பீடாதிபதி பேராசிரியர் ஞானகுமாரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இது கட்டாய விதிமுறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதுடன், முஸ்லிம் மாணவர்கள் உட்பட யாரையும் வற்புறுத்தும் நோக்கம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், பெண்களை சேலை அணியச் சொல்லி விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடு என்று சமூக ஊடகங்களில் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து கருத்து தெரிவித்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் சிவகாந்தன் தனுஜன், மாணவிகள் வெள்ளிக்கிழமைகளில் சேலை கட்டி வருவதை மாணவ பிரதிநிதிகள் ஏற்றுக் கொண்டபோதிலும் பிற கட்டுப்பாடுகள் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறினார்.

மாணவிகளை மாத்திரம் சேலை கட்டி வருமாறு கூறுவதை ஆணாதிக்க நடைமுறையாகக் கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.

மாணவிகள் தரப்பில் கருத்து வெளியிட்ட யாழ் பல்கலைக்கழக மாணவி டினோஷா ராஜேந்திரன், கிழமையில் ஒருநாள் சேலை அணிவது தொடர்பில் மாணவிகளிடம் எவரும் கலந்தாலோசிக்கவில்லை என்று கூறினார்.

மாற்றுக் கட்சிகளின் முன்னாள் எம்.எல்.ஏக்கள் அ.தி.மு.கவில் சேர்ந்தனர்

jayalalitha_with_ex_mlasதே.மு.தி.க., பாட்டாளி மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பத்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயலலிதாவைச் சந்தித்து அ.தி.மு.கவில் சேர்ந்தனர். நீண்ட காலமாகவே 10 பேரும் சட்டமன்றத்தில்அ.தி.மு.கவுக்கு ஆதரவாகச் செயல்பட்டுவந்தனர்.

தே.மு.தி.கவைச் சேர்ந்த பாண்டியராஜன், அருண் பாண்டியன், சுந்தர்ராஜன் உள்ளிட்ட எட்டுப் பேர், பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா. கலையரசு, புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி ஆகிய பத்துப் பேரும் இன்று அ.தி.மு.கவில் இணைந்ததாக அக்கட்சியின் செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.

2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்குத் திராவிடர் கழகம் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து 29 இடங்களில் வெற்றிபெற்றது. தமிழக சட்டமன்றத்தில் பிரதான எதிர்கட்சியாகவும் இருந்தது.

ஆனால், சில ஆண்டுகளிலேயே தே.மு.தி.கவைச் சேர்ந்த 8 சட்டமன்ற உறுப்பினர்கள் அ.தி.மு.கவுக்கு ஆதரவாக செயல்பட ஆரம்பித்தனர். இருந்தபோதும், அவர்கள் தே.மு.தி.கவிலேயே நீடித்தனர்.

இந்த நிலையில், தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் கடந்த வாரம் முடிவடைந்த நிலையில், இவர்கள் அனைவரும் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து, தமிழக சட்டப் பேரவையில் தே.மு.தி.கவின் எதிர்க்கட்சி அந்தஸ்து பறிபோனது. அதேபோல, பா.ம.க., புதிய தமிழகம் கட்சியின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்தனர். இவர்கள் பத்து பேரும் தற்போது முறைப்படி அ.தி.மு.கவில் இணைந்துள்ளனர்.

ஆசிய பசிபிக் கடலில் கடற்படை வல்லமையை அதிகரிக்கும் ஆஸி; சீனா கோபம்
 
australia_navyஆசிய பசிபிக் பிராந்தியத்தில் தனது கடற்படையின் வல்லமையை பலப்படுத்தும் ஆஸ்திரேலியாவின் திட்டத்திற்கு சீனா கோபத்துடன் பதில் அளித்துள்ளது.

இந்தத் திட்டத்தால் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறியுள்ள சீன வெளியுறவு அமைச்சு, ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு இது எதிர்மறையானது என்றும் கூறியுள்ளார்.
பிராந்தியத்தில் ஒரு ஆயுதப் போட்டியை காண விரும்பவில்லை எனவும் சீனா கூறியுள்ளது.

அடுத்த பத்தாண்டுகளில், 140 பில்லியன் டாலர் நிதியை பாதுகாப்புக்காக செலவிடவுள்ளதாக ஆஸ்திரேலியா அறிவித்திருந்தது.
பிராந்தியத்தில் அதிகரித்துவரும் சவால்களை எதிர்கொள்ள, தனது நீர்மூழ்கி கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப் போவதாகவும் ஆஸ்திரேலிய அரசு தெரிவித்திருந்தது.

தெற்கு மற்றும் கிழக்கு சீனக் கடற்பரப்பில் நிலவும் பதற்ற சூழ்நிலையையே இந்த அறிவிப்பு வெளிப்படுத்தியுள்ளது.

ஐரோப்பாவுக்குள் படையெடுத்து வரும் அகதிகள் தடுக்கப்படுவது ஏன்?

refugeesஆஸ்திரியாவில் நடக்கும் குடியேறிகள் விவகாரம் குறித்த மாநாட்டுக்கு, தனக்கு அழைப்பு விடுக்கப்படாததை அடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் வரும் குடியேறிகளை தடுக்கத் தான் தவறிவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை கிரேக்கம் நிராகரித்துள்ளது.

இத்தோடு தொடர்புடைய இன்னொரு நிகழ்வாக கடந்த வாரம் தன் எல்லை ஊடாக வரும் குடியேறிகளின் எண்ணிக்கைக்கு ஆஸ்திரியா ஒரு கட்டுப்பாட்டை விதித்தது.

இது சட்டவிரோதமானது என்று ஐரோப்பிய ஆணைக்குழு எச்சரித்திருந்தது. ஆனாலும் ஐரோப்பா வரும் ஆப்கான் குடியேறிகள் பல இடங்களில் தடுக்கப்படுகிறார்கள். Read more

வவுனியா மாணவி படுகொலை: வடக்கில் முழு கடையடைப்பு  ஹர்த்தால்

north_jaffnaஇலங்கையின் வடக்கே, வவுனியாவில் பள்ளி மாணவி ஹரிஸ்ணவி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று கோரி நடத்தப்பட்ட கடையடைப்பினால் வடக்கு மாகாணத்தில் இன்று புதன்கிழமை இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இந்தக் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டது. பாடசாலைகள் இயங்கவில்லை. அரச அலுவலகங்கள், வங்கிகள் என்பன மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இயங்கின. Read more

செய்யாத குற்றத்திற்காக சிறையில் இருக்கின்றோம் – நளினி
 
nalini‘எங்களின் கைகள் யாருடைய ரத்தத்தினாலும் நனைக்கப்படவே இல்லை’  இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள கைதிகளான தாங்கள் யாரும் குற்றம் ஏதும் செய்யாதவர்கள் என்று நளினி கூறியுள்ளார்.

ஒருநாள்-பரோலில் வெளியில் வந்திருந்த நளினி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

‘எங்கள் கைகள் யாரையும் கொலைசெய்யவில்லை…25 வருஷங்கள் அப்பாவிகளான நாங்கள் சிறையில் இருக்கிறோம்’ என்றும் கூறினார் நளினி. Read more

ஹரிஸ்ணவியின் கொiயைகண்டித்து வவுனியா மற்றும் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டங்கள்

vavuniastudentrapedemoவவுனியாவில் ஹரிஸ்ணவி என்ற 13 வயது மாணவி வீட்டில் தனிமையில் இருந்த போது இனந்தெரியாதவர்களினால் பாலியல் குற்றம் புரியப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வவுனியா மற்றும் கிளிநொச்சி நகரங்களில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.
 
ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதிக்கப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதியும், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யவும் கோரினார்கள். Read more

காணாமல் போணவர்களுக்கு காணவில்லை சான்றிதழ் வழங்கப்படும்.-வஜிர அபேவர்தன

Wajiraகாணாமல் போனவர்கள் தொடர்பாக மரண சான்றிதழ்கள் பெற முடியாதவர்கள் உரிமைகளை வெளிப்படுத்துவதற்காக விஷேட சான்றிதழ் ஒன்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் .

உலகில் பல நாடுகளில் அவ்வாறான சான்றிதழ்கள் வழங்கப்படுவதாகவும் அதன்படி அந்த சான்றிதழை ‘காணவில்லை சான்றிதழ்’ என்று அறிமுகப்படுத்துவதாகவும். கொழும்பு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற, பரந்தளவிலான பிறப்பு, இறப்பு, விவாக பதிவாளர்கள் சங்கத்தின் 27வது ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ நிகழ்ந்த துரதிஷ்டவசமான சம்பவங்கள் இதுவென்றும் அவர்களுக்காக இந்த சான்றிதழ்கள் மூலம் உரிமை கிடைக்கும் என்று தான் நம்புவதாகவும். உயிரை மீண்டும் வழங்க முடியாதென்று கூறிய அமைச்சர சிறு உதவிகளை வழங்க முடியும் என்று இங்கு கூறினார்.

அத்துடன் எதிர்காலத்தில் பதிவாளர் துறையை சார்ந்தவர்களுக்கு சீருடை ஒன்றை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

மட்டக்களப்பு குருக்கள்மடம் பகுதியில் பெண்னொருவரின் சடலம்
 
Untitledமட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் இருந்து பெண்னொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குருக்கள்மடம் தேவாலயத்திற்கு அருகில் உள்ள காணி ஒன்றில் இருந்தே குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலம் சுமார் 40 வயதுடையதாக இருக்கும் என தெரிவித்த பொலிஸார் இதுவரை அடையாளம் காணப்படவில்லையென தெரிவித்தனர். குறித்த பெண் கொலை செய்யப்பட்டு இப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என தெரிவித்த பொலிஸார் இது தொடர்பான விசாரணை நடைபெற்றுவருவதாக தெரிவித்தனர்.

பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

முஸ்லிம்களுக்கான தனியலகு கோரிக்கையை மறக்கடிக்க முடியாது
 
pasheerஇலங்கையின் புதிய அரசியலமைப்பு மூலம் முஸ்லிம்களுக்கான தனி நிர்வாக அலகு ஒன்று உருவாக வேண்டும் என்று கோரிக்கையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் முன்வைத்துள்ளார்.

´முஸ்லிம்களுக்கான தனியலகு´ பற்றி பேசாமல் அரசியல் தீர்வுத் திட்டப் பேச்சுக்களை முன்னெடுப்பது சாத்தியமில்லை என்ற அடிப்படையிலேயே இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாக அவர் கூறினார். Read more

ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு பச்சைகுத்து
 
tamilnadu01தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி சென்னையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அவரது உருவப் படத்தை தங்கள் கைகளில் பச்சை குத்திக் கொண்டனர்.

ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.கவினர் பல்வேறு கொண்டாட்டங்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு. Read more

பொருளாதாரத் தொழில்நுட்பக் கூட்டுறவு ஒப்பந்தம்: இந்தியக் குழு இலங்கை வருகிறது

sri &indiaஇந்தியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட உள்ள பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டுறவு ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள இந்தியத்தூதுக் குழு ஒன்று எதிர்வரும் 4 ஆம் தேதி இலங்கை வருகிறது என, இலங்கைப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை நிகழ்த்திய பிரதமர் ரனில் விக்ரமசிங்க, இலங்கை வரவுள்ள இந்திய தூதுக்குழுவினருடன் பேச்சுக்களை நடத்துவதற்கு உள்ளுர் அமைப்புகளுக்கு வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். Read more

முதலில் உரித்துக்களைக் கொடுங்கள், பின் கலப்புத் திருமணங்கள் நடக்கட்டும்.- வடக்கு முதல்வர்

saranar9வது தேசிய சாரணர் ஐம்போறியினை, யாழ். மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இன்று மாலை 04.30 அளவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்தார்.
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, இந்திய துணைத்தூதுவர் ஆ. நடராஜா, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
சாரணிய மாணவர்களின் சாரணிய கௌரவத்தினை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.
பின்னர் சாரணிய மகுட வாக்கியத்தினை வாசித்து சாரணிய ஐம்போறியினை ஆரம்பித்து வைத்தார்.
இங்கு உரையாற்றிய வடக்கு முதல்வர் தமிழ் மக்களுக்கு கொடுக்க வேண்டிய உரித்துக்களைக் கொடுங்கள், அதற்குப் பின்னர் கலப்புத் திருமணங்கள் நடக்கட்டுமென தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது,
இலங்கை முழுவதிலும் இருந்து சாரணியர்களை அழைத்து வந்து நிகழ்வினை நடாத்துவது முக்கியமான நேரம். அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வந்துள்ள இளம் சாரணியர்கள் ஒன்றிணைந்து எதையும் சாதிக்க முடியுமென்று என்று எடுத்துக்காட்டும் வகையில் சாரணியர் பாசறை நடைபெறுகின்றது.
எமது சகல மக்களும் ஒன்றிணைந்து இந்த நாட்டினை கட்டி எழுப்ப வேண்டுமாயின், சாரணியத்தின் குறிக்கோள்கள் எமக்கு முக்கியமானது.
ஆனால் அண்மையில் வடமாகாண ஆளுநர் குறிப்பிட்டிருந்தார். கலப்புத் திருமணங்கள் மிகவும் அவசியமென்று, கலப்பு திருமணத்தினை எதிர்ப்பவன் அல்ல. எனது இரு மகன்களும் சிங்கள பெண்களையே திருமணம் செய்துள்ளார்கள்.
தமிழ் மக்களுடைய உரித்துக்களைக் கொடுங்கள். சட்ட பூர்வமாக கொடுக்க வேண்டியவற்றினைக் கொடுங்கள். அதன்பின்னர் கலப்புத் திருமணங்கள் நடக்கட்டும் என்றார்.

தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதம்

dgfஇலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் இருவர் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளனர்.
இலங்கையில் கைதிகள் பிரச்சினை பெரும் பிரச்சினையாகவே இருந்து வருகிறது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சிறைகளில் விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் குறித்து நாடாளுமன்றத்தில் செவ்வாய்கிழமை விவாதம் ஒன்றை முன்னெடுக்கவுள்ள நிலையில், இந்த இருவர் தமது போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

அனுராதபுரம் சிறையிலுள்ள இந்த இருவரும் உண்ணாவிரத்ததை மேற்கொண்டுள்ளதை அவர்களின் உறவினர்களும், அரச அதிகாரிகளும் உறுதிப்படுத்தினர்.

உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள இந்த இரு கைதிகளும் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் வைத்து கைது செய்யப்பட்டு, 13 மாதங்கள் ஓமந்தையில் செயற்பட்டு வந்த புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்பே பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் இவர்களைப் பொறுப்பேற்று பூஸா தடுப்பு முகாமுக்குக் கொண்டு சென்றதாக அவர்கள் தரப்பில் கூறுகின்றனர்.

அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் தொடர்ந்து நிறைவேற்றப்படாத காரணத்தாலேயே, இவர்கள் மீண்டும் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என தமிழ்க் கைதிகளின் விடுதலைக்கான செயற்பாட்டாளர்களில் ஒருவராகிய அருட்தந்தை சக்திவேல் கூறுகின்றார்.

சுதந்திரக் கட்சியுடன் இணைய 17 கட்சிகள் விருப்பம். – எஸ்.பி.திஸாநாயக்க

thisaசிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைக்க இதுவரை 17 கட்சிகள் முன்வந்துள்ளன
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைத்து களமிறங்குவதற்கு இதுவரை 17 கட்சிகள் முன்வந்துள்ளதாக, அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (22) ஹட்டன் – லக்ஷபான பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
சிறீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுபடுத்துவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். ஆனால் இந்த கட்சி இரண்டாக பிளவடையக் கூடிய சாத்தியம் கிடையாது. அதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.
எத்தனை அழுத்தங்கள் கொடுத்தாலும் யாராலும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்த முடியாது. பொது தேர்தலில் சுதந்திர கட்சியில் போட்டியிட்ட மாற்று கட்சியினரே இந்த சதி முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.
சுதந்திர கட்சியிலிருந்து என்னை வெளியேற்ற சில விஷமிகள் சதி முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். என்னை அவ்வளவு இலகுவில் வெளியேற்ற முடியாது. நான் ஒருபோதும் வெளியேற மாட்டேன் என்றார்.

ஆப்கானில் தாலிபான்கள் தற்கொலைத் தாக்குதல்:14 பேர் பலி

afghanஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஆறு கால்துறையினர், எட்டு பொதுமக்கள் உட்பட குறைந்தது 14பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்  நாட்டின் வடக்கே பர்வான் மாகாணத்தில் இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இத்தாக்குதலில் பத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். அங்காடி மற்றும் மருத்துவ சிகிச்சை நிலையம் ஒன்றுக்கு அருகில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இத்தாக்குதலுக்கு தாங்களே காரணம் என தாலிபான்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளனர்.
அவர்களை எப்படி மீண்டும் பேச்சுவார்த்தை மேடைக்கு கொண்டுவருவது என்பது குறித்த நான்கு நாடுகள் பங்குபெறும் மாநாடு செவ்வாய்கிழமை தொடங்கவுள்ள நிலையில், திங்களன்று இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் 3-வது நாளாக நடந்த சண்டை முடிவடைந்தது.

kasmirஸ்ரீநகர்: காஷ்மீரில் தொழில் முனைவோர் கட்டிடத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் 3-வது நாளாக நீடித்து வந்த துப்பாக்கிச்சண்டை முடிவுக்கு வந்தது. 48 மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். துப்பாக்கிச் சண்டை முடிந்ததை அடுத்து தீவிரவாதிகள் கைப்பற்றிய கட்டிடத்தை ராணுவத்தினர் சோதனை நடத்தினர்.
கடந்த 20-ம் தேதி ஜம்மு- ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் பாம்போரில் ரிசர்வ் போலீஸ் படையினரை ஏற்றிச்சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் ரிசர்வ் போலீசார் 2 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து அருகில் உள்ள தொழில் முனைவோர் பயிற்சி கட்டிடத்தில் தீவிரவாதிகள் புகுந்த போது கட்டிடத்தில் 100-க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

அவர்களை பாதுகாப்பு படையினர் மீட்கும் முயற்சியில் இளம் ராணுவ அதிகாரி கேப்டன் துஷார் மகாஜன் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பொதுமக்களில் ஒருவரும் பலியானார். ஒரு தீவிரவாதியும் சுட்டுக் கொல்லப்பட்டான்.
இருப்பினும் கட்டிடத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனிடையே பதுங்கி இருந்த தீவிரவாதிகள் மற்ற இரண்டு தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு தீவிரவாதியின் உடல் கிடைத்தது, மற்றொருவனின் உடலை தேடி வருகின்றனர்.

 

சமஷ்டி ஆட்சிமுறை உள்ள நாடுகள் பிரிந்து செல்லவில்லை-வடக்கு முதல்வர்

vigneswaranசமஷ்டி ஆட்சிமுறை நடைமுறையில் உள்ள நாடுகள் பிரிந்து செல்லவில்லை என்று தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அரசியல்வாதிகளே சமஸ்டி என்றால் பிரிவினை என அர்த்தப்படுத்தி வந்துள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

கனடாவில் கியூபெக் என்று பிரஞ்சு மொழி பேசும் மக்கள் வாழும் பிரதேசம் உள்ளதாகவும் அவர்கள் கனடாவை விட்டு பிரிந்து செல்லவில்லை என்றும் வாக்கெடுப்பிலும் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையில் சிறுபான்மை இன மக்களுக்கு உரிமையை கொடுத்தால் பிரிந்துவிடுவார்கள் என்றொரு கருத்து உள்ளதாக கூறிய அவர், சிறுபான்மை மக்களின் உரிமையை கொடுத்துப் பாருங்கள் அவர்கள் உங்களுடன் சேர்ந்திருப்பார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.

நாட்டின் பல பகுதிகளிலும் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு-

2345454வேலையற்ற பட்டதாரிகள் நாட்டின் பல பகுதிகளிலும் இன்று கவனயீர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். கொழும்பில் கடந்த 16ம் திகதி வேலையற்ற பட்டதாரிகள் நடாத்திய ஆர்ப்பாட்டத்தின்போது, பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலை கண்டித்தும், வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரசாங்க நியமனங்களை வழங்கக் கோரியுமே இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தங்களில் பிரச்சினை குறித்து பல தடவைகள் அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த போதிலும் அவை தொடர்பில் இதுவரை எவ்வித சாதகமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஊடக இணைப்பாளர் அநுருத்த ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அக்கரைப்பற்று, காலி, குருநாகல் மற்றும் கண்டி உள்ளிட்ட பல நகரங்களில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இது இவ்விதமிருக்க வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவின் ஆய்வறிக்கை பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு அச்சுறுத்தல்-

dgfயுத்த காலத்தின்போது காணாமல் போனவர்களின் உறவினர்கள் இன்னும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்குவதாக அரசாங்கத்திடமும் மனித உரிமை அமைப்புகளிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வாளர்கள் என்று கூறிக் கொள்வோரிடமிருந்தே தொலைபேசி மூலமாகவும் இனந்தெரியாத நபர்களிடமிருந்து நேரடியாகவும் தங்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக 50பேர் வரையான பெண்கள் நல்லிணக்கம் மற்றும் தேசிய கலந்துரையாடல்களுக்கான அமைச்சர் மனோ கணேசனை சந்தித்து முறையிட்டுள்ளனர். வடக்கு, கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் கண்ணீருடன் தங்களின் கதைகளை சொல்லி அழுதார்கள் என்று அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார். காணாமல் போனவர்களின் உறவினர்களை தேடி ஆர்ப்பாட்டம் செய்யாதே, ஊர்வலம் நடத்தாதே என்ற நேரடி அச்சுறுத்தல்கள், அகாலவேளை தொலைபேசி அழைப்புகள், இரவுநேர கதவு தட்டல்கள், தங்கள் வீடுகளில் உள்ள பெண்பிள்ளைகளின் பாதுகாப்பு போன்ற பிரச்சனைகளை இவர்கள் என்னிடம் சொல்லி அழுதார்கள் என அமைச்சர் மனோ கணேசன் தனது அறிக்கையில் கூறியுள்ளார். வடக்கு, கிழக்கு பிராந்தியங்களுக்கு பொறுப்பான பொலிஸ் உயரதிகாரிகளிடமும் பிரதமரிடமும் இது தொடர்பில் பேச்சு நடத்தியுள்ளதாக கூறிய அமைச்சர் மனோ கணேசன், இனிமேல் இப்படியான சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் கூறினார்.

வாகன நெரிசலை குறைக்க புதிய மேம்பாலங்களை அமைக்கத் தீர்மானம்-

flo overகொழும்பில் நிலவும் வாகன நெரிசலை குறைக்கும் நோக்கில் புதிய மேம்பாலங்களை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பேஹெலியகொட தொடக்கம் கொழும்பு கோட்டை மற்றும் இராஜகிரியவரை இந்த மேம்பாலத்தை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பெருந்தெருக்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சின் செயலாளர் டீ.சீ திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மேம்பாலத்தை நிர்மாணிப்பதற்கான சூழல் ஆய்வறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், மேம்பாலத்தினூடாக பெறக்கூடிய நன்மைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த புதிய மேம்பாலத்தை நிர்மானிக்கும் பொருட்டு பொதுமக்களின் காணிகள் கையகப்படுத்தப்படாது எனவும் பெருந்தெருக்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.

காணி,பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது-குணதாச அமரசேகர-

gunadasa amarasekaraகாணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டால் நாட்டில் பாரிய பிரச்சினை ஏற்படும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்திற்கு அமைவாக மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என அண்மையில் அமைச்சர் டிலான் பெரேரா குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையிலே குணதாச அமரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, சர்வதேசத்தில் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே டிலான் போன்றோர் செயற்பட்டு வருகின்றனர். புலிகள் இயக்கம் ஆயுத ரீதியாக தோற்கடிக்கப்பட்டாலும், அவர்களது ஈழக் கனவு இன்னும் ஓயவில்லை. மாறாக சர்வதே மட்டத்தில் அவை மிகவும் சூட்சுமமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஜனநாயகம், சமாதானம் எனக் கூறிக்கொண்டு இன்று சர்வதேசம் இலங்கைக்குள் காலடி எடுத்து வைப்பது, உண்மையான நல்லிணக்க செயற்பாட்டிற்காக அல்ல. மாறாக சர்வதேசத்தின் விருப்பிற்கு அமைய நாட்டை ஆட்டிப்படைக்கவே. இந்நிலையில், சர்வதேசத்தின் எண்ணத்தை தெளிவாக புரிந்துகொண்டு தூரநோக்கு சிறந்தனையுடன் செயற்பட வேண்டும் என்றார் அவர்.

குப்பைக்கு தீ வைத்த பெண் மரணம்-

death (4)குப்பைக்கு வைத்த தீயில் தவறுதலாக மயக்கமடைந்து வீழ்ந்த பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த 12 நாட்களின் பின்னர் சிகிச்சை பயலனளிக்காத நிலையில் மரணத்தை தழுவிக் கொண்டுள்ளார்.

இவ்வாறு மரணத்தை தழுவிக்கொண்டவர் புதுக்குடியிருப்பு கோம்பாவிலைச் சேர்ந்த பிரபாகரன் சுதர்சினி (27) என்பவராகும். கடந்த 8ம் திகதி பிற்பகல் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டு, உடனடியாக புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, யாழ்.போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

குறித்த பெண் சிகிச்சைக்கு பலனின்றி உயிரிழந்துள்ளார். நீதிமன்ற பணிப்புரையின்படி மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம் குமாரினால் விசாரணை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து சடலம் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.