Header image alt text

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை-வட மாகாண ஆளுனர்-

reginold coorayயாழ். சாவகச்சேரி பகுதியிலிருந்து தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் மிதவாத குழுக்களின் செயற்பாடுகளாக இருக்கலாம் என, வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். இன்றையதினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

நேற்றைய சம்பவம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என வெளியாகும் தகவல்களில் எந்தவொரு உண்மையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக தீவிரவாதம் தலைதூக்குவதாக வெளியான கருத்துக்கள் பொய்யானது. வௌ;வேறு ஊடகங்கள் மூலம் இந்த செய்தி திரிவுபடுத்தப்படுகின்றது என்றும் அவர் கூறியுள்ளார். யுத்த பூமியை வெற்றி கொண்டாலும் மக்களின் மனதை கடந்த அரசாங்கத்தால் வெற்றிகொள்ள முடியவில்லை என குறிப்பிட்ட ரெஜினோல்ட் குரே, தமிழ் மக்களின் மனதை வென்ற தலைவர் மைத்திரிபால சிறிசேனவே எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்துக்கும் இனவாதத்துக்கும் இனி இடமில்லை-பிரதமர்-

ranilமீண்டும் நாட்டில் பயங்கரவாதமோ அல்லது இனவாதமோ ஏற்பட ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘யுத்தமொன்று இடம்பெற்ற நாடொன்றில் ஆயுதங்களும் வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்படுவதென்பது அதிசயிக்கத்தக்க விடயமல்ல’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதக் குழுக்களோ அல்லது வேறு குழுக்களோ செயற்பட ஆரம்பித்தால், அது தொடர்பில் கண்டறிவதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றும் பிரதமர் இதன்போது கூறியுள்ளார்.

ஊவா வெல்லச பல்கலையில் தமிழ் மாணவர்கள்மீது மூர்க்கத்தனமான தாக்குதல். 7பேர் வைத்தியசாலையில் அனுமதி-

wellasa universityஊவா வெல்லச பல்கலைக்கழகத்தில் சிங்கள பெரும்பான்மை இன மாணவர்களுக்கும் தமிழ் மாணவர்களுக்கும் இடையில் சமீப காலமாக கருத்து வேறுபாடுகள் , முறுகல் நிலை தொடர்ந்தவண்ணம் இருந்துள்ளது. இந் நிலையில் 30ஃ03ஃ2016 அதாவது நேற்று இரவு 10 மணியளவில் பல்கலைக்கழகத்துக்கு வெளியில் இவ் திட்டமிடப்பட்ட தாக்குதல் சம்பவம் சிங்கள மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ் தாக்குதல் சம்பத்தினை 2ம் வருட பெரும்பான்மை இன மாணவர்கள் 150 பேருக்கு மேல் இணைந்து, தமிழ் மாணவர்கள் 07 பேர் மீதான கொடூர தாக்குதலாக மேற்கொண்டுள்ளனர். இவ் கொடூர தாக்குதலில் காயமடைந்த 07 தமிழ் மாணவர்களும் தற்போது பதுள்ள பொது வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ் தாக்குதலில் 2ஆம் வருட மாணவர்கள் 4 பேரும், 3 ஆம் வருட மாணவர்கள் இருவரும், இறுதியாண்டு மாணவன் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Read more

வேலையற்ற பட்டதாரிகள் தொழில் உரிமைப் போராட்டம்-

3343வேலையற்ற பட்டதாரிகளுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை அரசாங்கம் பெற்றுத் தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் தொழில் உரிமைப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அகில இலங்கை ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த போராட்டம் இன்றுகாலை 10.30 அளவில் மட்டக்களப்பு – காந்திப் பூங்கா முன்பாக இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் “அரசே! ஊடனடியாக வேலை வாய்ப்பை வழங்கு, தொழில் உரிமை எமது சுதந்திரம், நாங்கள் பெற்ற பட்டம் காற்றில் பறக்கவிடும் பட்டமா?, பட்டதாரிகளுக்கான தேசிய கொள்கையை தயாரி, நல்லாட்சி அரசில் பட்டதாரிகள் தொடர்ந்தும் ஏமாறுவதுதான் நிலையா? உள்ளிட்ட வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் அகில இலங்கை ஒண்றிணைந்த பட்டதாரிகள் சங்கத் தலைவர் தம்மிக முணசிங்க, மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் தெ.கிஷாந்த், மதகுருமார்கள், ஆசிரியர் சங்கங்கள், மாதர் சங்கங்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஒண்றிணைந்த பட்டதாரிகள் சங்க உறுப்பினர்கள், மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதன்போது, வேலையற்ற பட்டதாரிகளுக்கு நிரந்தர வேலை வாய்ப்பை வழங்குமாறு வலியுறுத்தப்பட்டதுடன், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதாக கிழக்கு மாகாண முதலமைச்சரினால் வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படாமை தொடர்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதை துரிதப்படுத்துவதுடன், அதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டு ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ரி.கிஷாந்த் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மட்டக்களப்புக்கு விஜயம்-

maithriஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். இதற்கான சகல பூர்வாங்க ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சரின் அழைப்பின் பேரில் ஏறாவூருக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏறாவூர் ஐயங்கேனி ஜின்னா வீதியில் அமைக்கப்பட்டுள்ள பாரிய கிழக்கு ஆடைத்தொழிற்சாலை மற்றும் கைத்தறி உற்பத்தி தொழிற்சாலை என்பவற்றை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கவுள்ளார். பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகும் இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாக ஜனாதிபதியும், ஏனைய அதிதிகளாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண ஆளுனர், பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சின் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். குறித்த கைத்தொழில் பேட்டையின்மூலம் கிழக்கில் சுமார் 5000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தந்தை செல்வாவின் 118ஆவது ஜனனதினம்-

thanthaiமூதறிஞர் தந்தை செல்வாவின் 118ஆவது ஜனனதின வைபவம் தந்தை செல்வா அறங்காவலர் குழுவின் ஏற்பாட்டில் இன்றுகாலை 9.30அளவில் யாழ்; நகரிலுள்ள தந்தை செல்வாவின் நினைவுச் சதுக்கத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. தந்தை செல்வா அறங்காவலர் குழுவின் தலைவர் ஜெபநேசன் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர்மாலை அனுவிக்கப்பட்டு மலராஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வட மாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், முன்னாள் பேராயர் ஜெபநேசன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர். வவுனியாவில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் ஜனனதின நிகழ்விலே வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் வட மாகாணசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சாவகச்சேரி சம்பவ விசாரணை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைப்பு-

rererசாவகச்சேரி பகுதியில் தற்கொலை அங்கிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் நேற்று மீட்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.விக்ரமசிங்கவினால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கண்காணிப்பின்கீழ் பயங்கரவாத புலானய்வுப் பிரிவினரால் குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, ருவன் குணசேகர கூறியுள்ளார். கைதான சந்தேகநபர், மன்னார் முருங்கன் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவருக்கு இரண்டு மனைவிகள் என்றும், முதல் மனைவி இறந்துவிட்டதாகவும், அவர்களுக்குப் பிறந்த பிள்ளையே தற்போது உள்ள பிள்ளையென்றும் தெரியவந்துள்ளது. இந்நிலையிலேயே, சாவகச்சேரி மறவன்புலவில் இரண்டாவது தடவையாக திருமணம் செய்துள்ளார். Read more

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய, “புதிய நிர்வாகசபை”

புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்,
சுவிஸ்லாந்து.

010நேற்றையதினம் (28.03.2016) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் பொதுச்சபைக் கூட்டமும், நிர்வாகசபையின் கலந்துரையாடலும், “புதிய நிர்வாகசபையின் தெரிவும்” சூரிச் வரசித்தி மஹால் மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வழமையை விடவும் பெருமளவிலானோர் குறிப்பாக பெண்கள் மற்றும் இளையோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

முதலில் கடந்த நிர்வாக சபையின் உறுப்பினர்களான தலைவர் இ.இரவீந்திரன், செயலாளர் த.தங்கராஜா, பொருளாளர் ச.றமணதாஸ், உபசெயலாளர் து.சுவேந்திரன், உபதலைவர் எஸ்.ரஞ்சன் ஆகியோரின் உரைகளைத் தொடர்ந்து பொதுமக்களின் கேள்வி பதில்களும், அதனைத் தொடர்ந்து விரிவான கலந்துரையாடலும் என கூட்டம் மிகவும் ஆரோக்கியமான முறையில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து 2016 – 2018 க்கான “புதியதோர் நிர்வாகசபை” தெரிவு நடைபெற்றது.

Read more

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலில்லை-பாதுகாப்பு அமைச்சின் செயலர்-

karunasenaசாவகச்சேரியில் கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிப்பொருட்களால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படப்போவது இல்லையென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். தேசிய பாதுகாப்பிற்கும் சில இடங்களில் கண்டுப்பிடிக்கப்படும் பொருட்களுக்கும் நிறைய இடைவெளி காணப்படுவதாக குறிப்பிட்ட அவர், இதற்கு முன்னரும் இவ்வாறான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். கடந்த பல வருடங்களாக தினமும் இவ்வாறான பொருட்கள் கண்டெடுக்கப்படுவது, சிலர் கைது செய்யப்படுவது தொடர்பில் அறிக்கைகள் கிடைக்கப்பெறுவதாகவும், அது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கான முழு பொறுப்பும் பொலிஸாருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் அறிவித்ததன் பின்னர் அது பாரதூரமான விடயமாக இருக்கும் பட்சத்தில் பாதுகாப்பு அமைச்சு அது தொடர்பில் கவனம் செலுத்தும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆயுதங்களை ஒப்படைக்க பொது மன்னிப்புக் காலம், துப்பாக்கியுடன் ஒருவர் கைது-

karunasenaசட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கிகளை வைத்திருப்போர், அவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்காக பொது மன்னிப்புக் காலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி கூறியுள்ளார். அத்துடன், இந்த ஆயுதங்களைக் கையளிப்போருக்கு பணம் வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அதனால், உடனடியாக அனுமதிப்பத்திரமற்ற ஆயுதங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோரியுள்ளார். இதேவேளை தன்னியக்கத் துப்பாக்கி வைத்திருந்த ஒருவரை வெள்ளவத்தை ரயில் நிலையத்துக்கு அருகாமையில் வைத்து நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸார் கூறினர். கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது நீர்கொழும்பைச் சேர்ந்த 31வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேநபர், கடந்த டிசம்பர் 28ஆம் திகதி மினுவாங்கொடை பிரதேச சபை உறுப்பினர் இந்திக ஜயசிங்கவை கடத்திச் சென்று கொலைசெய்த சம்பவத்துடன் தொடர்புடையதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதென பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வவுனியா தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு-

676777வவுனியா மாவட்ட தனியார் பஸ் ஊழியர்கள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வவுனியாவில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சேவைக்கான நேர அட்டவணை போன்று தனியார் பஸ் சேவைக்கும் உகந்த நேர் அட்டவணை வழங்குமாறு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகள் சீரான முறையில் சேவையில் ஈடுபடாமையினால் தாம் பாதிக்கப்படுவதாகவும் தனியார் பஸ் ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்னர். இ.போ.ச பஸ் வேகமாக பயணித்த சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தனியார் பஸ் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், அவரை விடுவிக்குமாறும் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறியுள்ளனர். இந்த பணிபகிஸ்கரிப்பினால் கிராம பகுதகளுக்கான போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

1,132 அடி ஆழத்தில் அரச சுரங்க ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்-

கணக்காய்வாளர் தமக்கு 2 தடவைகள் தொலைநகல் மூலம்55656குருநாகல் தொடம்கஸ்லந்த கஹட்டகஹ பகுதியில் அரச சுரங்க ஊழியர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலதிக கொடுப்பனவை கோரியே 70 க்கும் அதிக ஊழியர்கள் 1,132 அடி ஆழத்தில் இருந்து ஊழியர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படும் என நிறுவன அறியத்தந்ததாக கஹட்டகஹ சுரங்க தொழிலாளர்கள் சங்கத்தின் சுசந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

எனினும் வாக்குறுதிகளுக்கு அமைய கொடுப்பனவுகள் வழங்காததை அடுத்தே இரண்டாவது நாளாகவும் இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவற்கு தலைவரை தொடர்புகொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததாகவும் அவரின் கையடக்க தொலைபேசி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுசந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதபட்சத்தில் 2 ஆயிரம் அடி ஆழத்தில் இருந்து தமது உண்ணாவிரதத்தை மேற்கொள்ளவுள்ளதாவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையின் மாற்றங்களை அமெரிக்கா வரவேற்கின்றது-நிசா பிஸ்வால்-

nisha thesai biswalஇலங்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென தென் மற்றும் மத்திய ஆசிய பிராந்திய வலயத்திற்கான அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் நிசா பிஸ்வால் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு தேர்தல்களிலும் இலங்கையில் ஜனநாயக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இலங்கை நல்லிணக்கத்தை நோக்கி நகர்வதாகவும் குறிப்பிட்ட அவர், இலங்கையில் ஏற்படும் மாற்றங்களை அமெரிக்கா வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இலங்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் இலங்கையில் பல்வேறு விடயங்கள் ஆற்றப்பட வேண்டியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் மீட்பு-

werererrerயாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A32 வீதியில் அமைந்துள்ள மறவன்புலோ பிரதேச வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கியும், வெடிகுண்டுகளும், துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய அங்கு சோதனை நடவடிக்கைக்கு சாவகச்சேரி பொலிஸார் சென்றபோதே மேற்படி வெடிபொருட்களை மீட்டுள்ளனர். இதன்போது தற்கொலை அங்கியொன்று, 4 கிளேமோர் குண்டுகள், கிளேமோர் பெட்டரி 2, 12 கிலோ வெடிமருந்து, 100 துப்பாக்கி ரவைகள், மற்றும் 5 சிம்கார்ட்கள என்பன மீட்கப்பட்டுள்ளன. அந்த வீட்டில் இருந்த சந்தேகநபர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றிருந்த நிலையில் பொலிஸார் தேடுதல் மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் சந்தேகநபர் கிளிநொச்சி, அக்கராயன் பகுதியில் வைத்து இன்றுநண்பகல் 12மணியளவில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு பிள்ளையின் தந்தையான எட்வேட் ஜூட் (வயது 31) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வெடிபொருட்கள் மீட்கப்பட்ட வீட்டில் இருந்த பெண் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது பெண்ணுக்கு திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரியவருகின்றது. Read more

மட்டக்களப்பில் வைத்தியர்கள் ஆர்பாட்டம்-

677மாலபேயில் அமைக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவக் கல்லூரியை அரசு பொறுப்பேற்குமாறு கோரி இன்று நண்பகல் மட்டக்களப்பில் வைத்தியர்களினால் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன பேரணிகள் என்பன நடாத்தப்பட்டன. மட்டக்களப்பு வைத்தியதிகாரிகள் சங்கம் ஏற்பாடு செய்த இப்போராட்டம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை முன்பாக பேரணியாக ஆரம்பித்து மட்டக்களப்பு மஹாத்மா காந்தி பூங்காவில் நிறைவடைந்து அங்கு ஆர்பாட்டம் நடைபெற்றது. பெரும் எண்ணிக்கையிலான வைத்தியதிகாரிகள் இதில் பங்கு கொண்டிருந்தனர். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்படவுள்ள எட்கா ஒப்பந்தத்தினை நிறுத்துமாறு கோரியும் மாலேபே தனியார் பல்கலைக்கழகத்தினை அரசு பொறுப்பேற்குமாறு வலிறுத்தியுமே இந்த ஆர்ப்பாட்டமும் பேரணியும் முன்னெடுக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பம்பலப்பிட்டி மின் பிறப்பாக்கியில் தீ விபத்து-

trnasformer blastகொழும்பு பம்பலபிட்டிய லோரிஸ் வீதி பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் பிறப்பாக்கியில் இன்றுகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதிக்கு தீயணைப்பு வாகனம் இரண்டு அனுப்பட்ட போதிலும் அந்நேரத்தில் பிரதேச மக்கள் தீயை அணைத்துள்ளதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது. தீயிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. குறுகிய காலப்பகுதியில் இலங்கையில் மின் பிறப்பாக்கியில் விபத்து இடம்பெற்ற மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும். மின்பிறப்பாக்கிகளை இலக்கு வைத்து, நாசகார கும்பல் ஒன்று தாக்குதலை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியுள்ளன. இந்நிலையில் இன்றையதினமும் பம்பலப்பிட்டியில் மின்பிறப்பாக்கி தீ பற்றிக் கொண்டமையால் மக்கள் மத்தியில் பலத்த சந்தேக நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

செங்கலடி பிரதேசசபை செயலாளரை இடமாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்-

dertrமட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று – செங்கலடி பிரதேசசபை செயலாளரின் நிர்வாக மந்தநிலை மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்து இன்று பிரதேச சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. உள்ளூராட்சி நிர்வாகத்தினால் செய்து முடிக்கப்பட வேண்டிய பல கருமங்களை குறித்த செயலாளர் செய்து முடிக்காது வினைத்திறனற்ற முறையில் காலங்கடத்துவதாகவும், அதனால் இப் பிரதேச சபைப்பிரிவில் பலவகையான நிர்வாகச் சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த செயலாளரை உடன் இடமாற்றம் செய்து வினைத்திறனுள்ள ஒருவரை செயலாளராக நியமிக்குமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியுள்ளனர். இங்கு சமூகமளித்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், குறித்த பிரச்சினை குறித்து தான் அக்கறை கொண்டுள்ளதாகவும் மக்களின் கோரிக்கைக்கிணங்க வினைத்திறனுள்ள செயலாளர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அத்துடன், அங்கு சமூகமளித்திருந்த மட்டக்களப்பு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல், நிர்வாக ரீதியிலான நடைமுறைகளுக்கேற்ப பொதுமக்களின் கோரிக்கை கவனத்திற்கொள்ளப்படும். பிரதேச சபைச் செயலாளருக்கு இடமாற்றக் கடிதம் கிடைத்துள்ளபோதும், நிர்வாக ரீதியான நடைமுறைகளுக்கேற்ப அவர் மேன்முறையீடு செய்துள்ளார். அதன்படி நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 14 இலங்கையர்கள் உண்ணாவிரதப் போராட்டம்-

ertrtrtதமிழகத்தின் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழர்கள் 14 பேர் காலவரையரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த முகாமில் தற்போது 16 இலங்கைத் தமிழர்கள், ஒரு நைஜீரியர் என 17 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மகேந்திரன் என்ற இலங்கைத் தமிழர், தன்னை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி காலவரையரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். 3-வது நாளாக நேற்றும் அவரது போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில், பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரி, இதே முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் 13பேர் நேற்றுக்காலை முதல் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளனர். Read more

சம்பூர் அனல் மின் நிலையத் திட்டத்திற்கு எதிர்ப்பு-

ereeeதிருகோணமலை மாவட்டம் சம்பூர் பகுதியில் இந்திய உதவியுடனான அனல் மின் நிலையத்திற்கு உள்ளுர் மக்களின் எதிர்ப்பு தொடர்ந்தும் வலுப்பெற்று வருகின்றது. அனல் மின் நிலையத்தின் தாக்கம் பற்றி நேரில் அறிந்து கொள்வதற்காக ஏற்கனவே அனல் மின் நிலையம் அமைந்துள்ள புத்தளம் மாவட்டம் நுரைச்சோலை பகுதிக்கு மூதூர் கிழக்கு பிரதேச சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவொன்று திங்கட்கிழமை அங்கு சென்று திரும்பியுள்ளது. அனல் மின் நிலையத்தை உள்ளே சென்று பார்வையிடுவதற்கான வாய்ப்பு இக்குழுவினருக்கு கிடைக்கவில்லை. அவர்களால் சுற்றுப்புற பகுதியை மட்டுமே அவதானிக்க முடிந்துள்ளது. திருகோணமலை பசுமை இயக்கத்தினால் அழைத்துச் செல்லப்பட்ட இவர்கள் உள்ளுர் மக்கள் உட்பட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து அதன் தாக்கம் பற்றி கேட்டறிந்துள்ளனர். போர்க் காலத்தில் சம்பூர் பிரதேச மக்கள் அந்த பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்திருந்த போது, அந்த பகுதியில் அனல் மின் நிலையத்திற்கு என சுமார் 500 ஏக்கர் காணி அடையாளமிடப்பட்டு அதற்கான ஆரம்ப வேலைகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. Read more

பயணிகள் விமானம் கடத்தப்பட்டு சைப்ரஸில் தரையிறக்கம்-

ewrerererஎகிப்து நாட்டின் பயணிகள் விமானம் ஒன்று தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருப்பதாகவும், அது சைப்ரஸ் நாட்டில் தரையிறக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. பயணிகள் விமானத்தை பயங்கரவாதிகள் கடத்தியிருக்கலாம் எனவும், விமானத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது. குறித்த விமானம் எகிப்தின் அலெக்சாண்ட்ரியாவில் இருந்து கெய்ரோ நகர் நோக்கி புறப்பட்டிருந்தது. இதேவேளை, கடத்தப்பட்ட விமானம் சைப்ரஸ் நாட்டின் லார்நக்கா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது எனவும் இதில் 80 பயணிகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடத்தப்பட்ட எகிப்து விமானத்தில் இருந்த நான்கு வெளிநாட்டு பிரஜைகள் மற்றும் 11 ஊழியர்கள் தவிர்த்து பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட ஏனைய அணைவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. எகிப்தின் அலெக்சாண்ட்ரியாவில் இருந்து தலைநகர் கெய்ரோ நோக்கி சென்ற குறித்த விமானத்தை, அதில் இருந்த பயணி ஒருவரே கடத்தியதாக விமானி கூறியுள்ளார் என ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. Read more

சம்பூர் மகா வித்தியாலயத்தில் 10 வருடங்களின் பின் கற்றல் நடவடிக்கை-

uyuyதிருகோணமலை, சம்பூர் பிரதேசத்தில் கடற்படையினரின்; வசமிருந்து கடந்த வெள்ளிக்கிழமை (25) விடுவிக்கப்பட்ட 177ஏக்கர் காணியில் அமைந்திருந்த சம்பூர் மகா வித்தியாலயம் 10 வருடங்களின் பின்னர் இன்று முதல் மீளவும் செயற்படத் தொடங்கியுள்ளதாக கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்க பொதுச் செயலாளர் எஸ்.ஜெயராஜா தெரிவித்தார். சம்பூர் பிரதேசத்தில் அமைந்துள்ள காளி கோவிலில் பூஜை வழிபாடுகள் நடைபெற்று, பின்னர் இவ்வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆண்டு ஒன்று தொடக்கம் ஆண்டு 13வரை கற்கின்ற 411 மாணவர்களுடன் 21 ஆசிரியர்களும் இவ்வித்தியாலயத்துக்கு சமூகமளித்துள்ளனர். அத்துடன், இவ்வித்தியாலயத்தில் முதலாம் தவணைப் பரீட்சையும் இன்றையதினம்; ஆரம்பமாகியுள்ளது. மேலும், மீள்குடியேறிய குடும்பங்களைச் சேர்ந்த புதிய மாணவர்கள் 11 பேர் இவ்வித்தியாலயத்தில் சேர்ந்துள்ளதாகவும் அவ்வித்தியாலய அதிபர் எஸ்.பாக்கியசீலன் தெரிவித்தார். படையினரின் பராமரிப்பிலிருந்த இவ்வித்தியாலயமும் அதன் வளாகமும் நல்ல நிலையிலிருப்பதாகத் தெரிவித்த அதிபர், இவ்வித்தியாலயத்துக்கு மின்சார வசதி இல்லையெனவும் கூறினார். கட்டடம் சேதமடைந்து காணப்படும்; சம்பூர் ஸ்ரீ முருகன் வித்தியாலய ஆரம்பப்பிரிவு மாணவர்கள் சுமார் 75 பேரும் சம்பூர் மகா வித்தியாலயத்தின்; ஒருபகுதியில் தமது கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். 2006ஆம் ஆண்டு மூதூர் கிழக்குப் பிரதேசத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக, சம்பூர் பிரதேச மக்கள் இடம்பெயர்ந்திருந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

திருப்பெருந்துறையில் யுவதியின் சடலம் மீட்பு-

dead.bodyமட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருப்பெருந்துறைப் பகுதியில் பெண்ணொருவர் நீர்க்குழியிலிருந்து சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளார். களுவாஞ்சிக்குடி, எருவில் பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் சுலோக்ஸனா (வயது 17) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. மேற்படி பகுதியிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்து தொழில் பயிற்சிநெறியை மேற்கொண்டுவந்த இந்தப் பெண் காணாமையைத் தொடர்ந்து, அவ்விடுதியிலுள்ள ஏனையோர் தேடியுள்ளனர். இதன்போது, இவரது சடலம் அருகிலுள்ள நீர்க்குழியில் கிடந்ததை அவதானித்துள்ளனர். இது தொடர்பில் மட்டக்களப்பு தமக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர

இலங்கை அகதிகளில் ஒரு தொகுதியினர் நாடு திரும்பல்-

srilanka refugeesதமிழகத்தில் தஞ்சமடைந்த இலங்கை அகதிகளில் ஒரு குழுவினர் தாயகம் திரும்பியுள்ளனர் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையால் தமிழகத்தில் தஞ்சமடைந்த இலங்கை அகதிகளில் ஒரு குழுவினரே இன்று தாயகம் திரும்பியுள்ளனர். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஊயர்ஸ்தானிகராலயத்தின் வசதிப்படுத்தலின் கீழ், இன்று நண்பகல் 18 பேர் நாடு திரும்பியதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நாடு திரும்பிய அகதிகள் 18 பேரில் 08 பெண்களும் 10 ஆண்களும் உள்ளடங்குவதாகவும் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானஜோதி தெரிவிக்கின்றார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலிருந்து தமிழகத்திற்கு இடம்பெயர்ந்தவர்களில் சிலரே இன்று நாடு திரும்பியுள்ளனர். இவர்களுக்கான இலவச விமானச் சீட்டு வழங்கப்பட்டுள்ளதுடன், மீள்குடியேற்றத்திற்கான ஒரு தொகை பணமும் நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாகவும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானஜோதி குறிப்பிட்டுள்ளார்.

வித்தியா கொலைச் சந்தேகநபர்களை விசேட அனுமதியுடனே சந்திக்கலாம்-

vithyaபுங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களில், 5ஆம் மற்றும் 6ஆம் சந்தேகநபர்களை, நீதிமன்றத்தில் விசேட அனுமதியைப் பெற்றுச் சந்திக்க முடியும் என்றும் சாதாரணமாகச் சந்திக்க முடியாது எனவும் ஊர்காவற்றுறை நீதவான் ஏம்.எம்.எம்.றியால் தெரிவித்தார். புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு இன்று நீதிவான் றியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கதைக்க வேண்டும் என்ற கோரிக்கையை குறித்த சந்தேகநபர்கள் சார்பாக மன்றில் ஆஜராகிய சட்டத்தரணி கோரினார்.இதன்போதே, ஊர்காவற்றுறை நீதவான் ஏம்.எம்.எம்.றியால் இவ்வாறு தெரிவித்தார். டி.என்.ஏ அறிக்கை மற்றும் சான்று பொருட்களின் பகுப்பாய்வு அறிக்கைள் என்பன குற்றப்புலனாய்வு பொலிஸாரால் இன்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. மேலும், இவ்வழக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்துள்ளார்.

இலங்கையின் முதலாவது சபாரி பூங்கா திறந்து வைப்பு-

7687இலங்கையின் முதலாவது சபாரி பூங்கா இன்று ஹம்பாந்தோட்டை, ரிதிகம பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள செய்திகள் குறிப்பிடுகின்றன.

500 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள இச் சபாரி பூங்காவில் சிங்க வலயம், உலக விலங்கு வலயம் மற்றும் ஆசிய யானைகள் வலயம் என மூன்று வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

இப் பூங்காவில் 22 வகையான 200 இற்கும் மேற்பட்ட விலங்குகளை காணக்கூடியதாக உள்ளது.

அமெரிக்க புலு ரிச் கப்பலை பார்வையிட்ட ஜனாதிபதி-

6t5767ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான புலு ரிச் கப்பலை பார்வையிட்டுள்ளார்.

இதன்போது, அமெரிக்க கடற்படையினரால் ஜனாதிபதி கௌரவத்துடன் வரவேற்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

900 அமெரிக்க கடற்படை வீரர்களுடன் ஐந்து நாள் விஜயமாக புலு ரிச் கப்பல் கொழும்பை வந்தடைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இலங்கை சாரணர் சங்க தலைவரின் அஞ்சலி நிகழ்வு.!(படங்கள் இணைப்பு)

scout1இலங்கை சாரணர் சங்கத்தின் முன்னாள் பிரதம ஆணையாளரும், ஆசிய பசுபிக் சாரண வலயத்தின் முகாமைத்துவ உப குழுவின் முன்னாள் பணிப்பாளரும், 2014-2016ஆம் ஆண்டுக்கான சாரணர் சங்கத்தின் தலைவருமான கௌரவ ஊ.பட்டுவன்கல அவர்கள் கடந்த 25.03.2016 அன்று கொழும்பில் காலமானார். இவரின் இறுதி நிகழ்வுகள் இன்றையதினம் கொழும்பில் சாரண மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டதுடன், இலங்கை சாரணர் சங்கத்தினால் கடந்த மூன்று தினங்கள் சாரண தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டு, மாவட்டங்கள் தோறும் சாரண கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டதுடன், அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வவுனியா திரி சாரணர், ஜனாதிபதி சாரணர் மன்றத்தின் ஒழுங்கமைப்பில் இன்றையதினம் அஞ்சலி கூட்டம் வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தில் உதவி மாவட்ட ஆணையாளர் திரு சு.காண்டீபன் தலைமையில் நடைபெற்றது. இவ் அஞ்சலி நிகழ்வில் கௌரவ மாவட்ட ஆணையாளர் எம்.எஸ்.பத்மநாதன், உதவி மாவட்ட ஆணையாளர் திரு.கு.கமலகுமார், பெண் சாரண தலைவி திருமதி மோ.சுதர்ஷினி, திரி சாரணர்கள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Read more