வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் துவிசக்கரவண்டிகள் அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)
வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் அளவெட்டி அருணாசலம் வித்தியாலய மாணவர்கள் 6பேருக்கும் வட்டு இந்துக்கல்லூரி மாணவி ஒருவருக்குமாக 93,000 பெறுமதியான 7 துவிச்சக்கர வண்டிகள் இன்று வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க தலைமை காரியாலத்தில் வைத்து வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க போசகரும் ஓய்வுபெற்ற மின்சார சபை பொறியியலாளருமான வி.வேலுப்பிள்ளை மற்றும் ஓய்வுபெற்ற சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி அதிபர் திருமதி.வேலுப்பிள்ளை அவர்களால் மாணவர்களுக்கு கையளிக்கபட்டன. மேற்படி மாணவர்கள் அயலில் உள்ள கல்லூரிகளால் ஒதுக்கபட்டு நான்கு கிலோமீற்றர் நடந்து பாடசாலைக்கு தாமதமாக வருவதால் அவர்கள் தங்களது கல்வி நடவடிக்கைகளை தொடர துவிசக்கர வண்டிகள் இல்லாது சிரமப்படுகின்றனர் எனும் விண்ணப்பம் பாடசாலை அதிபர்களினால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் முன்வைத்ததை அடுத்து இம் மாணவர்களும் தமது கல்வி நடவடிக்கைகளை ஏனைய மாணவர்களை போன்று கல்வியில் பாரபட்சமின்றி தொடர வேண்டும் எனும் நல்நோக்கோடு எமது புலம்பெயர் உறவுகளான அருள்குமரன்(பிரான்ஸ்) 24,000 ரூபாவும் பிரணவன்(பிரானஸ்) 8,000 ரூபாவும் பார்ரின் நாட்டைச் சேர்ந்த சஞ்சை தனது பிறந்த நாளையொட்டி 20,000 ரூபாவும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூரியகாந்தி அவர்களால் தனது தாயாரின் நினைவு தினத்தையொட்டி 25,000 ரூபாவும் தொல்புரத்தைச் சேர்நத பாலா என்பவரால் 5,000 ரூபாவுமாக வழங்கப்பட்ட நிதியிலிருந்து இம் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் இன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டன. மேற்படி மாணவர்களின் விபரங்களாவன, அளவெட்டி அருணாசலம் வித்தியாலயம் பாடசாலை மாணவர்களான த.கலைவாணி ச.நிரோசினி சி.சிவகரன் ச.கோகிலா ம.கீர்த்தனா சு.சர்மிலன் மற்றும் வட்டு இந்துக்கல்லூரி மாணவி சு.உஜேந்தினி ஆகியோருக்கு இவ் துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. மேற்படி மாணவர்களுக்கான துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பாக வழங்குவதற்க்கு நிதி அனுசரனை வழங்கிய நல்லுள்ளங்களுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். “தானத்தில் சிறந்த தானம் கல்விதானம்” (வட்டு இந்து வாலிபர் சங்கம்)