Header image alt text

அமைச்சர் சரத் பொன்சேகா தலதாமாளிகைக்கு விஜயம்-

fonseka ministerபிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் முதற்தடவையாக கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்றையதினம் சனிக்கிழமை முற்பகல் தலதா மாளிகைக்கு விஜயம் செய்து அங்கு இடம்பெற்ற வழிபாடுகளிலும் கலந்துகொண்டார்.

அமைச்சருடன் அவரது பாரியார் அனோமா பொன்சேகாவும் இந்த விஜயத்தில் கலந்துகொண்டார். தலதா மாளிகைக்கான விஜயத்தை முடித்துக்கொண்ட பீல்ட் மார்ஷல் பொன்சேகா, மல்வத்துப்பீட மகாநாயக தேரரை சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டுள்ளார்.

கிளிநொச்சி செல்வா நகர் பெண்ணுக்கு வாழ்வாதார உதவி-

gகிளிநொச்சி செல்வாநகரைச் சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பமான வனசுதர் அன்னலட்சுமி தமக்கு ஏற்கனவே வேள்ட்விசன் நிறுவனத்தினால் மாடு வழங்கப்பட்டுள்ளது எனவும் இதற்கான மாட்டுக் கொட்டகையை அமைத்துத் தருமாறும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் கோரியிருந்தார்.

இதற்கிணங்க எமது சங்கத்தின் கோரிக்கையை ஏற்ற புலம்பெயர் உறவான லண்டனைச் சேர்ந்த திரு. சு.ரவிராஐன் 20,000ரூபா நிதி உதவியினை வழங்கியிருந்தார். இவ் நல்லுள்ளம் கொண்ட ரவிராஐனின் உதவியினால் வனசுதர் அன்னலட்சுமி தனது வாழ்வாதரத்தினை முன்னேற்றுவதற்கான வழியினை ஏற்படுத்தியுள்ளார்.

எமது சங்கத்தின் ஊடாக ஏற்கனவே இவ் குடும்பத்தினருக்கு அவர்களின் வாழ்வாதரத்தினை முன்னேற்றுவதற்காக கோழி வளர்ப்புக்கு என சுமார் 33,000ரூபா நிதி மூன்று கட்டங்களாக வழங்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. (வட்டு. இந்து வாலிபர் சங்கம்)

வரலாறு பெற்ற மகளீர் போற்றப்பட வேண்டும்-திருமதி நாகரஞ்சினி ஐங்கரன்-

mrs ainkaran (7)அனைத்துலக மகளிர் நாள் பங்குனி 8 என்பது மகளிரின் வெற்றி நாளாகவே கொள்ளப்பட வேண்டும். இவ் உலகில் பெண்களுக்கு எதிரான அனைத்து வன்முறைகட்கும் அச்சம் அழிக்கின்ற நாளாக இது அமைந்திட வேண்டும். இவ் நாளில் இவ் தரணிதனில் மாந்தர்கள் தமக்கு பெருமையையும் புகழினையும் அளிக்கின்ற நாளாக அமையட்டும். இன்று உலகின் பல்துறைசார் ஒழுங்கிலும் பெண்கள் தமக்கு தனித்துவமான நிலையினை உருவாக்கியுள்ளனர். இதற்கும் மேலாக எமது தாய் நிலத்தில் அடுப்பங்கரை மட்டுமே உரிமையாகிக் கிடந்த நிலைக்கு அப்பால் தரணியில் தமிழ் வென்றிட களமாடி உரமாகி தமிழ் பெண்களின் வீர வரலாற்றை இலக்கியங்களுக்கும் அப்பால் சென்று நிகழ்வுகளால் நிஜமாக்கிய மங்கையரின் வரலாறு பூசிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இவ்வாறான வரலாறினை நிகழ்த்திய புனித மங்கையரைக் கொண்டிருந்த இவ் செந்நிலத்தில் அனைவரும் மங்கையரை இவ் திரு நன்நாளில் போற்றி அவர்களின் பெருமையினை பறைசாற்றிட வேண்டும். கடந்து விட்ட பல நாட்களில் நாம் பெற்றுவிட்ட வரலாற்றினை அழித்திட எதிரிகள் மட்டும் அல்ல துரோகிகளும் வஞ்சகர்களும் எமை சூழ்ந்து சூழ்ச்சிகள் பல செய்து ஏதிலிகளாக்க பல முயற்சிளும் பல கோணங்களில் ஏற்படுத்திய வண்ணமே உள்ளனர். இவர்கட்கு இதுதான் தழிழ் பெண்ணின் வீரம் விளைந்திட்ட வரலாறு என காண்பிப்பதற்கு வெகுவிரைவில் காலம் மலர்ந்திட வழிபிறக்கும். சுட்டெரிக்கும் சூரியனின் அனல் காற்றாகி வெகுவிரைவில் பெண் கொடுமைக்கு விடை கிடைத்திடும்.

என்றும் தமிழ் அன்னையின் புதல்வியாய்
திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், முன்னாள் தவிசாளர், வலிமேற்கு பிரதேசசபை.

சூளைமேடு கொலை வழக்கு, வீடியோ மூலம் டக்ளஸ் எம்.பி சாட்சியம்-

douglas MPதமிழ்நாடு சூளைமேட்டில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பிலான வழக்கில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம், பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா இன்று சாட்சியமளித்தார். இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்திலிருந்து வீடியோ கொன்பரன்ஸ் மூலம் அவர் இன்று முற்பகல் சாட்சியமளித்தார். 1986ஆம் ஆண்டு சென்னையிலுள்ள சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக 1990ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் திகதிவரை நீதிமன்றத்தில் ஆஜரான டக்ளஸ் தேவானந்தா பின்னர் ஆஜராகவில்லை. இதற்கமைய, அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டதுடன் அவரை தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்றும் அறிவித்து சென்னை நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா மனு தாக்கல் செய்ததை அடுத்து, தலைமறைவு குற்றவாளி என்று அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மட்டும் உயர் நீதிமன்றம் இரத்து செய்தது. Read more

சுவிஸில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அனுப்புவதற்கு எதிர்ப்பு-

swissசுவிச்சர்லாந்தில் உள்ள இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்புவதற்கான சரியான தருணம் இதுவல்ல என்று சுவிட்சர்லாந்தில் உள்ள சில அரச சார்பற்ற நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சுவிச்சர்லாந்திற்கு விஜயம் செய்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அங்கிருக்கும் இலங்கையர்களை மீண்டும் நாடு திரும்புமாறு அழைப்பு விடுத்திருந்தார். மீண்டும் நாட்டிற்கு திரும்பி நாட்டின் மறுசீரமைப்பு பணிகளுக்கு ஒத்துழைக்குமாறும், அவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிப்பதாகவும் வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர அங்கிருக்கும் இலங்கையர்களிடம் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்து தலைநகர் பேர்னில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறு அழைப்பு விடுத்திருந்த நிலையிலேயே சுவிட்சர்லாந்து அரச சார்பற்ற நிறுவனங்கள் இவ்வாறு தெரிவித்துள்ளன. கடந்த 2015ம் ஆண்டு நாடு திரும்பியவர்கள் தொடர்பான தகவல்கள் தமக்கு கிடைத்துள்ளதாகவும், அவ்வாறு மீண்டும் நாடு திரும்பியவர்கள் கைது செய்யப்பட்டு அல்லது கடத்தப்பட்டுள்ளதாக அந்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. சுவிச்சர்லாந்தில் தற்போது சுமார் 50,000 இலங்கையர்கள் வசித்து வருவதாகவும் இவர்களில் பெரும்பாலானவர்கள் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த தமிழர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளின் மருத்துவ சிகிச்சையை புறக்கணிக்க தீர்மானம்-

welikada jailதமிழ் அரசியல் கைதிகள் 14பேர் தொடர்ச்சியாக 12ஆவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களின் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளன. இந்நிலையில் மருத்துவ சிகிச்சைகளை முழுமையாக புறக்கணிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் தமக்கான முடிவொன்று கிடைக்கும் வரையில் உண்ணாவிரதத்தை கைவிடப்போவதில்லையென உறவினர்கள் ஊடாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் தொடர்ந்தும் இவ்வாறு தமது குடும்ப அங்கத்தவர்கள் சிறைகளில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை அனுமதிக்க முடியாது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட அனைத்து தரப்பினரும் உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு தமிழ் அரசியல் கைதிகள் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான அறிக்கை ஒன்றினை எதிர்வரும் 8ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் கூறியுள்ளார். Read more

மன்னார் மனிதப் புதைகுழி விசாரணைகளில் அசமந்தப்போக்கு-

puthaikuliமன்னார் மனிதப் புதைகுழி விசாரணைகளில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அசமந்தப்போக்கை கடைப்பிடிப்பதால், அரச சட்டத்தரணி ஒருவரை நியமிக்குமாறு மன்னார் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 2013 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் மன்னார் மாந்தையிலுள்ள திருக்கேதீஸ்வர ஆலயப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி வழக்கு மன்னார் நீதவான் ஏ.ஜீ. அலெக்ஸ் ராஜா முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனிதப் புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 87 மனித மண்டையோடுகள் மற்றும் எச்சங்களின் கால எல்லையை வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து பரிசோதிக்க முயற்சிப்பதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஏற்கனவே நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தனர். இந்நிலையில், பெய்ஷரூட், ஆர்ஜன்டீனா மற்றும் குவாத்தமாலா ஆகிய நாடுகளின் நிறுவனங்களின் தூதரகங்கள் இலங்கையில் இல்லாதபடியால், அந்த நாடுகளிலுள்ள நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்ததோடு, அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்குமாறும் நீதிமன்றத்திடம் அனுமதி கோரினர். Read more

முள்ளியவளை மக்களின் கோரிக்கைக்கு அமைய பொது கிணறு அமைப்பு-(படங்கள் இணைப்பு)

aa (1)முள்ளியவளை மத்தி மக்களின் பொதுக் கிணற்றுக்கான கோரிக்கைக்கு அமைய ரிசி தொண்டுநாத சுவாமி(அமெரிக்கா) அவர்களால் பொதுக்கிணறு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளியவளை மத்தி கிராம உத்தியோகத்தர் பிரிவில் புதிதாக அமைக்கப்பட்ட 30 வீட்டுத்திட்டத்தை சேர்ந்த மக்கள் குடிப்பதற்குக்கூட தண்ணீர் வசதியின்றி அவதிப்படுவதாகவும் தங்களின் பிரதேசத்தில் ஒரு கிணறுகூட இல்லை என்றும் தமக்கான குடிநீரை பணம் செலுத்தி கொள்வனவு செய்யவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் உள்ளதாக கூறியிருந்தனர். இதனைக் கருத்தில் எடுத்த வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினர் ரிசி தொண்டுநாத சுவாமியின்(அமெரிக்கா) கவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் 27.12.2015 அன்று கொண்டு சென்றதையடுத்து சுவாமி உடனடியாக அம்மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளை கவனத்தில் எடுத்தார். தொடர்ந்து அப்பிரதேசத்தில் பல லட்சம் ரூபா செலவில் புதிதாக கிணறு அமைக்கும் பணி தொடக்கிவைக்கபட்டு தற்போது முடிவுறும் நிலைக்கு வந்துள்ளதுடன் மக்களுக்கான தண்ணீர் பிரச்சினையும் முடிவுக்கு வந்துள்ளது. வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் வேண்டுகொளை ஏற்று ரிசி தொண்டுநாத சுவாமிகளால் மக்களின் தண்ணீர் பிரச்சனை முடிவுக்கு கொண்டு வந்ததையொட்டி சங்கத்தின் சார்பில் கோடான கோடி நன்றிகளை சுவாமிக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்)
Read more