Header image alt text

எதிர்வரும் மாதங்கள் இலங்கைக்கு முக்கியமானதாக இருக்கும் – செய்யித் அல் ஹுசைன்

Zeid Raad al-Husseinநாட்டினுள்ள நிலையான சமாதானம், பொறுப்பு கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்துவதற்காக, இலங்கை அரசாங்கம் அவர்களுக்கே உரித்தான முறையில் வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் செய்யித் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

இதனுடன் தொடர்புடைய முக்கிய பல நடவடிக்கைகள் இலங்கை அரசாங்கத்தினால் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 31வது கூட்டத் தொடரில் உரையாற்றிய ஆணையாளர் இவ்வாறு கூறியுள்ளார். Read more

தமிழ்க் கைதிகள் தங்களின் போராட்டத்தைக் கைவிடத் தீர்மானித்துள்ளனர்
 
judegeஇலங்கையில் கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ்க் கைதிகள் தங்களின் போராட்டத்தைக் கைவிடத் தீர்மானித்துள்ளதாக கொழும்பு நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 13 கைதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்று சட்டமா அதிபர் கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் அறிவித்ததை அடுத்து, தாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக கைதிகள் தெரிவித்துள்ளனர். Read more