Header image alt text

தமிழகத்தில் தற்கொலை செய்த அகதி தொடர்பாக ஆராய்வு இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை கொடுக்க  அழுத்தம்.

electricதமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகள் சுமார் ஒரு லட்சம் பேருக்கு, அவர்கள் விரும்பும் பட்சத்தில், இந்தியக் குடியுரிமையை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவில் உரிமைச் செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமங்கலம், உச்சம்பட்டி அகதிகள் முகாமில் அதிகாரி ஒருவரின் நடவடிக்கையால் மனமுடைந்த இலங்கை அகதி ஒருவர் உயர்-அழுத்தம் கொண்ட மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. Read more

இலங்கையின் திடீர் மின்சாரத் தடை நாசகரச் செயல் என சந்தேகம்
 
powerஇலங்கையில் நாடு தழுவிய அளவில் மின்சார விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது ஒரு நாசகாரச் செயற்படாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக மின்சக்தி பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
இரண்டு வாரங்களுக்குள், இரண்டு தடவை நாடு முழுவதிலும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. Read more

அஸ்கிரிய மகாநாயக்கர் இலங்கை சிக்கல்களுக்கு தீர்வுகாண முயன்றவர் – மைத்திரி

asgiri_thero_funeralஇலங்கையின் செல்வாக்கு மிக்க பௌத்த மதப் பீடங்களில் ஒன்றான கண்டி அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் மறைவு, நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு எனவும். 
குருநாகலிலுள்ள ஒரு விகாரையில் வைத்து கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரரை கடந்த வாரம் சந்தித்து பேசியபோது, நாட்டிலுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பது தொடர்பில் அவர் தன்னுடன் கலந்துரையாடியதாக தேரரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார். Read more

காங்கேசன்துறையில் 533 குடும்பங்களுக்கு காணிகள் திரும்ப ஒப்படைப்பு

jaffna 01யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த 700 ஏக்கர் காணியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காணி உரிமையாளர்களிடம் சனிக்கிழமை கையளித்துள்ளார்.

இதனை அடுத்து 533 குடும்பங்கள் அவர்களது சொந்த இடங்களில் குடியேற வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்தப் பகுதியில் உள்ள நடேஸ்வரா கனிஸ்ட வித்தியாலயம் மற்றும் நடேஸ்வரா கல்லூரி ஆகிய இரண்டு பள்ளிக்கூடங்களும் அவற்றின் அதிபர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. Read more

கடற்படையினருக்கு காணி வழங்குவதற்கு கடற்தொழிலாளர்கள் எதிர்ப்பு 

sulipuram1சுழிபுரம் கிழக்கு திருவடிநிலை கடற்கரைப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணிகளை கடற்படையினரினருக்கு வழங்குவதற்கு  காணி உரிமையாளர்களின் சம்மதத்துடன் நேற்று10.03.2016 காலை 9.30 மணியளவில் அளவீடு செய்யப்பட்டது. 
கடற்கரைப்பகுதியில் கடற்படை முகாம் அமைந்துள்ள சுமார் ஐந்து ஏக்கர் வரையான நிலப்பரப்பே காணி உரமையாளர்களின் பிரசன்னத்துடன் அளவீடு செய்யப்பட்டது.  காணி அளவீடு தொடர்பாக அறிந்து கொண்ட தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மீனவர்கள் கடற்படை முகாமிற்கு அருகில் திரண்டு எதிர்ப்பு நடவடிக்கiயில் ஈடுபட்டனர். Read more

வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு.

vadduhindu3முல்லைத்தீவு மாவட்ட அமரா குடும்பத் தலைமை தாங்கும் பெண்களின் ஒன்றியத்தின் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு.

முல்லைத்தீவு மாவட்ட அமரா குடும்பத் தலைமை தாங்கும் பெண்களின் ஒன்றியத்தினால் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலக பிரிவுட்குட்ப்டட Read more