அஸ்கிரிய மகாநாயக்கர் இலங்கை சிக்கல்களுக்கு தீர்வுகாண முயன்றவர் – மைத்திரி

asgiri_thero_funeralஇலங்கையின் செல்வாக்கு மிக்க பௌத்த மதப் பீடங்களில் ஒன்றான கண்டி அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் மறைவு, நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு எனவும். 
குருநாகலிலுள்ள ஒரு விகாரையில் வைத்து கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரரை கடந்த வாரம் சந்தித்து பேசியபோது, நாட்டிலுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பது தொடர்பில் அவர் தன்னுடன் கலந்துரையாடியதாக தேரரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார்.இதனிடையே, கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரர், இலங்கையின் வரலாற்றை நன்கு அறிந்திருந்தவர் எனவும், அவரது ஆலோசனைகள் நாட்டுக்கு உதவியதாகவும் அவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் தெரிவித்தார்.

உடல் நலக்குறைவால் கண்டி போதனா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரர், 94 வயதில் கடந்த புதன்கிழமை காலமானார்.
கண்டி பொலிஸ் மைதானத்தில் அவரது இறுதிச் சடங்கு நடைபெற்றது. இன்றைய தினத்தை தேசிய துக்க தினமாக அரசு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது