கடற்படையினருக்கு காணி வழங்குவதற்கு கடற்தொழிலாளர்கள் எதிர்ப்பு 

sulipuram1சுழிபுரம் கிழக்கு திருவடிநிலை கடற்கரைப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணிகளை கடற்படையினரினருக்கு வழங்குவதற்கு  காணி உரிமையாளர்களின் சம்மதத்துடன் நேற்று10.03.2016 காலை 9.30 மணியளவில் அளவீடு செய்யப்பட்டது. 
கடற்கரைப்பகுதியில் கடற்படை முகாம் அமைந்துள்ள சுமார் ஐந்து ஏக்கர் வரையான நிலப்பரப்பே காணி உரமையாளர்களின் பிரசன்னத்துடன் அளவீடு செய்யப்பட்டது.  காணி அளவீடு தொடர்பாக அறிந்து கொண்ட தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மீனவர்கள் கடற்படை முகாமிற்கு அருகில் திரண்டு எதிர்ப்பு நடவடிக்கiயில் ஈடுபட்டனர்.sulipuram3sulipuram2கடற்படைக்கு காணி வழங்குவதால் இப்பகுதியில் பாரம்பரியமாக கடற்தொழிலில் ஈடுபடும் தாம் பெரும் பாதிப்பிற்குட்பட வேண்டிவரும்.  ஏற்கனவே கடற்கரைப் பகுதியில் சுமார் இரண்டு கிலோமீற்றர் வரையான பகுதியில் தொழிலில் ஈடுபடுவதற்கு கடற்படையினர் தடை விதித்துள்ளனர்.  இதனால் நாம் சுதந்திரமாக தொழில் செய்யமுடியாதுள்ளது.  இவ்வாறான ஒரு சூழ்நிலையில் கடற்படைக்கு நிரந்திரமாக காணியை வழங்குவதால் காலங்காலமாக பரம்பரையாக இப்பகுதியில் கடற்தொழிலில் ஈடுபாடும் நாம் பல்வேறு சிரமங்களை முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.  இந்த பகுதியில் வசிக்காமல் வெளியிடங்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழ்வோர் சொந்த மண்ணில் வாழும் எங்களின் வாழ்வாதாரத்தை கருத்திலெடுக்காமல்  மேற்கொள்ளும் இவ்வாறான செயற்பாடு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.   குறித்த காணிகளின் உரிமையாளர்கள் அதனை எங்களிடம் வழங்கட்டும்.  காணிகளுக்கு உரிய பெறுமதியை கொடுத்து கடற்தொழில் சங்கம் சார்பாக வாங்குவதற்கு நாம் தயாராக இருக்கிறோம் எனவும் அங்கு திரண்ட மீனவர்கள் தெரிவித்தனர்.  மீனவர்களுடன் வடக்கு மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஐங்கரன் நாகரஞ்சனி மற்றும் சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் ஆகியோர் அப்பகுதியில் பிரசன்னமாகியிருந்தனர்  இவ்விடயம் தொடர்பாக மாகாணசபை உறுப்பினர் கஜதீபன் தெரிவிக்கையில் குறித்த காணிகளின் உரிமையாளர்களுடன் கலந்துரையாடி அவர்கள் கடற்படைக்கு வழங்குவது தொடர்பான எண்ணத்தை மாற்றுவதற்கு முயற்சிகளை மீனவர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் என்றார்.