சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்துள்ள பேரணில் ஐதேக உறுப்பினர்கள் 500 பேர்

UNP PAஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஏற்பாட்டில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் தலைமையில் எதிர்வரும் 17ம் திகதி இடம்பெறவுள்ள, மக்கள் பேரணியில் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த 500 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக, கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போதே பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.

மேலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுபடுத்தும் எந்த தேவையும் தமக்கு இல்லை எனவும், கட்சியை பாதுகாப்பதே தமது தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்கியதாக ஊடகங்களில் பொய்யான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது என, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த யோசனையானது அரசாங்கத்தினால், கொண்டு வரப்பட்டு அரசாங்கத்தினாலேயே நிறைவேற்றப்பட்டது எனவும், இதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எந்த சம்பந்தமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறித்த விடயம் தொடர்பில் கட்சியின் தலைவர் மூலமே தாங்கள் அறிந்து கொண்டதாக குறிப்பிட்ட தினேஷ் குணவர்த்தன, பின்னர் அதற்கு தாம் இணங்கவில்லை எனவும் கூறியுள்ளனர்.