யாழ்.பொலிஸ் தலைமையக புதிய பொறுப்பதிகாரியாக டி.டி.ரி வீரசிங்க

police ...யாழில் இடம்பெறும் வன்செயல்கள் அல்லது குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு அல்லது தகவல்கள் தந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும்´ என யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.டி.பி.வீரசிங்க தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்துக்கு புதிதாக கடமையை பொறுப்பேற்றுள்ள தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேர ரோந்து, விசேட குழு அமைப்பின் செயற்பாடுகள் என்பன மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் இதனையும் மீறி வன்செயல்கள் யாழில் இடம்பெறுகின்றன.

இவை தொடர்பில் பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல்களை வழங்கி ஒத்துழைப்பு தந்தால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியும். நேரடியாக தகவல்களை வழங்க தயங்குபவர்கள், 071-4456499 என்ற அலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தகவல்களை வழங்கலாம் என்றார்.

முன்னதாக யாழ்.பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரியாக வூட்லர் கடமையாற்றியிருந்தார். அவரின் இடத்திற்கு புதிதாக யாழ்.மாவட்ட சோகோ பிரிவு பொறுப்பதிகாரியாக நீண்ட காலம் பணியாற்றிய டி.டி.ரி வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

நிரந்தர நியமனம் வழங்கக்கோரி உண்ணாவிரதம்
 
theli2theli01நிரந்தர நியமனம் வழங்கப்படும் என எங்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றார்கள் என்றும் எங்களுக்கு நிரந்தர நியமனம் கிடைக்கும் வரை உண்ணாவிரதத்தை தொடரவுள்ளதாகவும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 34 சுகாதாரத் தொண்டர்களும் தெரிவிக்கின்றனர்.

நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் எனக்கோரி பண்ணையில் அமைந்துள்ள வடமாகாண சுகாதாரத் திணைக்கள அலுவலகம் முன்பாக இன்று தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 34 சுகாதாரத் தொண்டர்களுடன் கிராமிய சுகாதார உதவியாளர்கள் 22பேர், மாநகர சபை சுகாதார தொண்டர்கள் 28 பேரும் இணைந்து உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளனர்.

மேலும் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என எங்களை ஏமாற்றிக் கொண்டு இருக்காது உடனடியாக எமக்கான நிரந்தர நியமனம் கிடைக்க வேண்டும். இல்லையேல் உண்ணாவிரதத்தை தொடருவோம் என அவர்கள் தெரிவித்தனர்.

மியான்மரின் புதிய ஜனாதிபதியாக ஆங்சான் சூகியின் ஆதரவாளர்
 
ஆங் சான் சூகியின் ஆதரவு பெற்ற ஹிதின் கியாவ்(67) மியான்மர் நாட்டின் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Miyanmarமியான்மரில் கடந்த நவம்பர் 8ம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் ஆங் சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய கட்சி (என்.எல்.டி.) இரு சபைகளிலும் 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

மியான்மார் நாட்டு சட்டப்படி ஜனாதிபதியை பாராளுமன்ற உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்படி 657 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் இன்று காலை புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நடந்தது.

இதன்படி ஜனாதிபதி வேட்பாளராக ஆங் சான் சூகி தனது ஆதரவாளரும் நம்பிக்கைக்குரியவருமான ஹிதின் கியாவ் என்பவரை களம் இறக்கியுள்ளார். இதையடுத்து, நடைபெற்ற வாக்குப்பதிவில் ஹிதின் கியாவ் அமோக வெற்றி பெற்றார். மொத்தம் பதிவான 652 வாக்குகளில் 360 வாக்குகளை பெற்ற ஹிதின் கியாவ் மியான்மரின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆங் சான் சூகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் அவரது தொண்டு நிறுவனங்கள் தொடர்பான நிதிபரிவர்த்தனைகளை இவர் மிக நேர்மையாக கையாண்டு வந்ததால், தனக்கு பதிலாக இவரை ஜனாதிபதி பதவியில் நியமிக்க ஆங் சான் சூகி விரும்பியதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.