அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் உள்ளிட்ட குழு யாழில்
 
Australiayaஅவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பிரைஸ் ஹட்டக்சன் மற்றும் அவரது குழுவினர் இன்று புதன்கிழமை யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.

இன்று புதன்கிழமை காலை 11.00 மணியளவில் வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை சந்தித்து கலந்துரையாடினர்.
அதன்பின்னர் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை யாழ். மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். அந்த சந்திப்பின் போது, இறுதி யுத்தத்தின் போது பொது மக்களின் இழப்பீடுகள் உட்பட வடமாகாண மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் பற்றியும் ஆராய்ந்துள்ளனர்.

நாளை வியாழக்கிழமை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர்.

மன்னாரில் ஒரு கோடி 87 இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா மீட்பு

Ganjaமன்னார் – முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சிலாபத்துறை பகுதியில் 56 வீட்டு திட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள. கடற்கரையை அண்டிய சிறு ஓடையில் நிலத்துக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 187 கிலோ கிராம் எடையுள்ள கேரளா கஞ்சாப் பொதிகள் நேற்று செவ்வாய்கிழமை காலை அதிகாரிகள் மீட்டுள்ளனர். இதன் பெறுமதி இலங்கை ரூபாய்களில் ஒரு கோடி 87 லட்சமம் ரூபாவாகும் 

மன்னார் மாவட்ட மதுவரி திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, பொறுப்பதிகாரி பிரதம பரிசோதகர் எஸ்.ரஞ்சன் தலைமையிலான உத்தியோகத்தர்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து சிலாவத்துறை பகுதியில் தேடுதலை நடத்தி இக்கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர். எனினும் குறித்த கஞ்சா தொடர்பாக சந்தேகத்தின்பேரில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை.

மட்டக்களப்பு சித்தாண்டியில் மாணவர்களும் பெற்றோர்களும் ஆர்ப்பாட்டம்

studentமட்டக்களப்பு சித்தாண்டி சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் புதிய அதிபரை நியமிக்குமாறு கோரி பாடசாலை நுழைவாயிலை மூடி இன்று புதன்கிழமை மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பாடசாலையின் அதிபர் கடந்த மூன்று மாதங்களாக சுகவீன விடுமுறையில் இருப்பதால் அவருக்கு பதிலாக புதிய ஆண் அதிபர் ஒருவரை நியமிக்குமாறு கோரி பிரதேச மக்களினால் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இவ்விடயம் தொடர்பாக கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா கூறும்போது ´சித்தாண்டி சித்தி விநாயகர் வித்தியாலயத்தின் அதிபர் சுகவீனம் காரணமாக விடுமுறையில் உள்ளார். அவருக்குப் பதிலாக புதிய அதிபராக நியமிக்குமாறு ஒருவரின் பெயர் பெற்றோர்களால் முன்மொழியப்பட்டது. குறித்த நபர் இப்பாடசாலைக்கு நியமிக்க கூடிய அதிபர் தரத்தினைப் பெற்றிருக்கவில்லை. அதிபர்கள் வெற்றிடம் தொடர்பாக நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களுக்குள் இப்பாடசாலைக்கு புதிய ஆண் அதிபர் நியமிக்கப்படுவார்´ எனக் கூறினார்.

இவ் ஆர்ப்பாட்டத்தின் போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் கலந்து கொண்டு மக்களுடன் கலந்துரையாடி விரைவில் தீர்வினைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.

தெஹிவளையில் மீட்கப்பட்ட சடலங்கள்; உயிரிழப்பிற்கான காரணம் வெளியானது

dead.bodyதெஹிவளை, கவுடான வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட நான்கு பேரின் சடலங்கள் குறித்த பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.

வீட்டிற்குள் நச்சு வாயுவை சுவாசித்ததன் காரணமாகவே குறித்த நான்கு பேரும் உயிரிழந்திருப்பதாக களுபோவில போதனா வைத்தியசாலையில் இன்று மாலை மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more