தமிழினத்தின் முதல் அரசியில் பெண்மணி மங்கையம்மா-

mangayatkarasi amirthalingamஅமரர் திருமதி மங்கயர்க்கரசி. அமித்தலிங்கம் அவர்களின் மறைவு இலங்கை வாழ் தமிழினத்திற்கு மட்டும் அல்ல உலக தமிழ் இனத்திற்கே பேரிழப்பாகும். எமது பிரதேசத்தை சேர்ந்த இவ் உயரிய வீர மங்கை அவர்களின் இழப்பு என்பது வெறும் வார்த்தைகளால் மட்டும் குறிப்பிட்டு விட முடியாது.

தானைத் தளபதி தமிழ் மக்களது தளபதி எதிர்கட்சித்தலைவர் போன்ற மிக முக்கியமான பதவிகளில் தன் இல்லறத்தான் பதவிகள் பல அலங்கரித்த வேளையில் நல்லதோர் மனையாளாக நல்லதோர் பக்கதுனையாக அரசியல் மேடைகளிலும் வாழ்வியலிலும் உழைத்தது மட்டுமல்ல அக்காலத்தில் பல புரட்சிப்பாடல்கள் மூலம் ஈழ விடுதலை நோக்கிய பயணத்தில் இளம் தலை முறை பயணித்திட தழிழ்தேசியம் வீறு கொண்டு எழுந்திட உழைத்த தமிழினத்தின் முதல் அரசியில் பெண்மணி திருமதி மங்கயர்க்கரசி அமிர்தலிங்கம்.கடந்த காலத்தில் நான் வலி மேற்கு பிரதேச சபையின் தலைவராக இருந்தபோது அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களிற்கு பிரதேச சபையின் வளாகத்திற்குள்ளாகவே சிலை அமைத்து அதனை திருமதி மங்கயர்க்கரசி அமித்தலிங்கம் அவர்களது கரங்களால் திரை நீக்கம் செய்திட வேண்டும் என்ற பேரவா கெரண்டு உரிய அனுமதிகள் பெற்று எமது மதிப்புக்குரிய இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ. சோ.மாவை சேனாதிராஜா, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் வடக்கு மாகாண சபை தவிசாளர் கௌரவ. க.சிவஞானம் அவர்களின் வழிகாட்டலில் குறித்த இடமும் தெரிவு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் ஒரு சில தலையீடுகளால் குறித்த காலப்பகுதியில் அவ் வேலையினை நிறைவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டமை மிக மிக வேதனையாகவே உள்ளது. அவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்பதோடு அவர்கள் விட்டுச் சென்ற விடுதலை நோக்கிய பயணம் என்றும் தொடரும்.

வலி மேற்கு பிரதேச மக்கள் சார்பில்,
திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், முன்னாள் தவிசாளர், வலி மேற்கு பிரதேச சபை.