அதிவேக வீதியில் வாகனங்களுக்கு நிரந்தர அனுமதிப்பத்திரம்-

highwayஅதிவேக வீதியில் வாகனத்தை செலுத்துவதற்காக தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக நிரந்தர அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் மாதம் தொடக்கம் இந்த நிரந்தர அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார். இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார். ஏப்ரல் மாதம் தொடக்கம் விநியோகிக்கப்படவுள்ள நிரந்தர அனுமதிப்பத்திரங்கள் 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். மேலும் குறித்த ஐந்து ஆண்டுகளுக்குள் அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்ளும் உரிமையாளர் குறித்து எவ்வித முறைப்பாடுகளோ அல்லது குற்றச்சாட்டுக்களோ காணப்படாவிடின் வழங்கப்படும் அனுமதிப்பத்திரத்திற்கான கால எல்லை தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கப்படும். தற்போது வழங்கப்பட்டுள்ள தற்காலிக போக்குவரத்து அனுமதிப்பத்திரம் 2 வாரங்களுக்கு ஒரு தடவை புதுப்பிக்க வேண்டியுள்ளது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ,பி.ஹேமச்சந்திர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாவிதன்வெளி பகுதியில் குடிநீருக்குத் தட்டுப்பாடு-

waterஅம்பாறை நாவிதன்வெளி குடியிருப்புமுனைக் கிராமத்தில் குடிநீருக்குத் தட்டுப்பாடு நிலவுவதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகக் கவலை வெளியிட்டுள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக கிணறுகளில் நீர் வற்றியுள்ளதுடன், நீரைப் பெற்றுக்கொள்வதற்காக அயல்கிராமங்களான நாவிதன்வெளி, 7 ஆம் கிராமம், அன்னமலை போன்ற கிராமங்களை நாடி செல்வதாக அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை அயலிலுள்ள ஆற்றிலே தமது அன்றாடத் தேவைகள் மற்றும் குளிப்பதற்கு பயன்படுத்துவதாகவும், அந்த ஆற்றில் கழிவுப் பொருட்கள் வீசப்பட்டு வருவதனால் தொற்று நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும் அக்கிராம மக்கள் குறிப்பிடுகின்றனர். நாவிதன்வெளிப் பகுதிக்கு நீர்வழங்கல் வடிகாலமைப்பினால் குழாய் நீர் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடும் மக்கள், அதற்கான வேலைகளை விரைவில் துரிதப்படுத்தி குடியிருப்பு முனைக்கிராமத்திற்கு நீர் வழங்கவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனர். குறிப்பாக இந்தக் கிராமத்திலுள்ள மக்களின் பிரதான தொழிலாக விவசாயமே காணப்படுகின்றதாகவும் வறட்சி காரணமாக விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். வறட்சியினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை நல்லாட்சி அரசாங்கம் கருத்தில் கொள்ளவேண்டும் என பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பிள்ளையானுக்கு நீதிமன்றம் பிணை மறுப்பு-

pillaiyanமுன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் ஏப்ரல் 1ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிபதி உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2005.12.25ம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக

கடந்த 09.10.2015 அன்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பிள்ளையான் தொடர்ந்து விளக்கமறியலில் இருந்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன நாடு திரும்பினார்-

rajithaசுகயீனம் காரணமாக சிகிச்சைகளுக்காக சிங்கப்பூர் சென்று அங்க சிகிச்சை பெற்றுவந்த சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன நேற்றிரவு மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

சிங்கப்பூர் மவுன்ட் லெவன்யா வைத்தியசாலையில் அவர் சிகிச்சை பெற்றுவந்தார். நேற்றிரவு 9.30 மணியளவில் யூ.எல். 309 என்ற இலங்கை விமான சேவைகள் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றில் அவர் நாடு திரும்பியுள்ளார்.

திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அமைச்சர் ராஜித சேனாரட்ன கடந்த பெப்ரவரி 16ம் திகதி சிங்கப்பூர் மௌன்ட் எலிசபத் வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

துறைமுக அதிகாரசபையின் தலைவர் வாக்குமூலம்-

harbourஇலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் தம்மிக ரணதுங்க வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்தார்.

தனது சட்டத்தரணியுடன் அங்கு சென்றிருந்த அவர் எதிர்வரும் 24ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாவதாக வாக்குமூலம் அளித்துவிட்டு அங்கிருந்து சென்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

துறைமுக அதிகாரசபையின் தலைவர், அண்மையில் மேல் நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்தி தனது தொலைபேசியில் படம் பிடித்திருந்தார். அது சம்பந்தமாக குறித்த ஊடகவியலாளர் வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

விமல் வீரவன்ஸ உள்ளிட்ட 07 பேருக்கு பிணை-

vimalகொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ உட்பட 7 பேரை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராத் அல் ஹ_சைனின் இலங்கை விஜயத்தின் போது இவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி விமல் வீரவன்ச, ஜயந்த சமரவீர, வீரகுமார திசாநாயக்க, ரே?ஜர் செனவிரத்ன, மொஹமட் முசம்மில், பியசிறி விஜேயநாயக்க உள்ளிட்ட 07 பேர் இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர். இதன்போது அவர்களை ஒரு லட்சம் ஷரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார்.