அமரர் மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் அவர்களின் இறுதி நிகழ்வில் பங்கேற்க புளொட் தலைவர் த.சித்தார்த்தன்(எம்.பி) லண்டன் பயணம்-

அமரர் மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் அவர்களின் இறுதிக் கிரியைகள் மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் நாளை (20.03.2016) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 8.00 மணிமுதல் பிற்பகல் 12.00 மணிவரையில் லண்டனின் Richard Challoner School, Manor Drive North, New Malden, KT3 5PE, United Kingdom என்ற முகவரியில் இடம்பெற்று நாளை பிற்பகல் 1.20மணியளவில் North East Surrey Crematorium, Lower Morden Lane, Morden, SM4 4NU, United Kingdom என்னுமிடத்தில் தகனக்கிரியைகள் இடம்பெறவுள்ளன.