Header image alt text

அமரர் மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் அவர்களின் இறுதி நிகழ்வுகள்-(படங்கள் இணைப்பு)

funeral 20.03.2016 (10)09-03-2016 புதன்கிழமை அன்று லண்டனில் காலமான அமரர் மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் அவர்களின் இறுதிக் கிரியைகள் மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் இன்று (20.03.2016) லண்டனில் இடம்பெற்றன.

இந்நிகழ்வுகளில் புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ஆலய நிர்வாகிகள்,

சமூகத் தொண்டர்கள், கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்தனர்.  Read more

தற்போதைய அரசை 5 வருடங்களுக்கு எவராலும் மாற்ற முடியாது-ஜனாதிபதி-

maithriநாட்டில் உறுதிசெய்யப்பட்டுள்ள சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் என்பன காரணமாக கூட்டங்கள் நடாத்துவதற்கும் ஊர்வலங்களை மேற்கொள்வதற்கும் அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது. அதனை வழிநடாத்தும் தலைவர்கள் வெள்ளை வான்களை அனுப்பி ஆட்களை காணாமல் செய்ததைப் போன்று செய்வது தற்போதைய அரசின் கொள்கையல்ல. எவ்வாறான கோஷங்களை முன்வைத்தாலும் எதிர்வரும் 5 ஆண்டுகள் நிறைவடையும் வரை இந்த அரசை மாற்றுவதற்கு எவராலும் முடியாது. தோல்வியடைந்த அரசியல் சக்திகள் மேலும் தோல்விகளைத் தழுவி அரசியலில் இருந்து ஒதுங்கும் விதமாக எதிர்வரும் 5 ஆண்டுகளுக்குள் இந்நாட்டுக்குத் தேவையான சமூக, பொருளாதார மாற்றத்தை மேற்கொள்வதற்குப் பாடுபடுவோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அம்பாறையில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19ஆவது தேசிய மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். Read more

சித்தன்கேணி பாலர் பாடசாலைக்கு விளையாட்டு பொருட்கள் வழங்கிவைப்பு-

ertrtவலிமேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் புலம்பெயர் தாயக உறவுகளின் உதவியோடு மேற்கொள்ளப்பட்டு வரும் தாயக உறவுகளைத் தலைநிமிரச் செய்வோம் என்ற நிகழ்சித்திட்டத்தின் கீழ்

சித்தன்கேணியில் இயங்கிவரும் பாலர்பாடசாலையின் சிறார்களுக்கு ஜேர்மன் நாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட விளையாட்டுப் பொருட்கள்

குறித்த முன்பள்ளியின் பிரதம ஆசிரியரான செல்வி. லீலாவதி மாரிமுத்து அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

மின்தடை தொடர்பில் ஆராய விஷேட ஜேர்மன் நிபுணர்கள்-

dfdffஇலங்கை மின்சார சபைக்கு சொந்தமான உப மின் விநியோக நிலையத்தில் ஏற்பட்ட சேதம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள

ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த விஷேட நிபுணர்கள் இருவர் நாளை இலங்கை வரவுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பியகம பகுதியிலுள்ள உப மின் நிலைய மின்மாற்றிகளில் சேதம் ஏற்பட்டதோடு வெள்ளிக்கிழமை ஜா-எல கடுகொட பிரதேசத்திலுள்ள மின்மாற்றிகளில் சேதம் ஏற்பட்டிருந்தது.

க.பொ.த சாதாரணதர பரீட்சையில் சிறந்த பெறுபேறுபெற்ற மாணவிக்கு பாராட்டு-

wererஎமது கல்வித்திட்டத்தில் 2013 ஆண்டு ஒக்டோபர் மாதம் உள்வாங்கபட்ட கிளிநொச்சி சென்ற் திரேசா மகளிர் கல்லூரி மாணவி அ.குணலீசா நடந்து முடிந்த க.பொ.த பரீட்சையில் 8 A, B எடுத்து சித்தியெய்தியுள்ளார்.

இவரின் தந்தை கடந்த யுத்தத்தின் போது இறந்து விட்டார். இவரின் குடும்ப சூழ்நிலையிலும் தனது கல்வியில் ஆர்வம் கொண்டு பாடசாலையில் சிறந்த பெறுபேற்றை பெற்று சித்தியெய்திய இவருக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவிப்பதுடன் 

இத்தருணத்தில் தொடர்ந்தும் இவருக்கான கல்வி நடவடிக்கைகளை பொறுப்பேற்று மாதந்தோறும் எம் ஊடாக பண உதவிசெய்து வரும் ஜேர்மனி நாட்டை சேர்நத JOYCESHOP இனருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.  (வட்டு இந்து வாலிபர் சங்கம்) Read more

சிறுநீரக மோசடி விடயத்தில் சர்வதேச பொலிஸ் உதவி பெற தீர்மானம்-

interpolஇலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் இடம்பெற்றதாக கூறப்படும் சிறுநீரக வர்த்தகம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு, சர்வதேச பொலிஸாரின் உதவியை பெற்றுக்கொள்ள இந்திய பொலிஸார் தீர்மானித்துள்ளனர். இந்த வியாபாரம் சர்வதேச அளவில் இடம்பெற்றதால், சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பை பெற்று இந்த விசாரணைகளை முன்னெடுக்க, இந்திய பொலிஸார் முடிவு செய்துள்ளனர். இந்தியாவின் பந்தோலி, மும்பாய் மற்றும் டெல்லி ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற இந்த வர்த்தகத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களைக் கைதுசெய்வதே, இதன் நோக்கமாகும். இதன்படி இவ்விடயம் தொடர்பில் இந்திய மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி, சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பை பெறும் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக, இந்தியாவின் ஆனந்த் மாவட்ட பொலிஸார் கூறியுள்ளனர். இந்தியாவின் பந்தோலி பகுதியில் இருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட சிலரிடம் பணத்துக்கு சிறுநீரகங்கள் விலைக்கு வாங்கப்பட்டதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. இதனுடன் தொடர்புடையதாக கூறப்படும் மூவர் அண்மையில் இந்தியப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்மை குறிப்பிடத்தக்கது.

தாயக உறவுகளை தலைநிமிரச் செய்வோம்-உதவித்திட்டம்-

ttyyவலிமேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் தாயக உறவுகளைத் தலை நிமிரச் செய்வோம் என்ற உதவித் திட்டத்தின்கீழ்

ஜேர்மனிய புலம்பெயர் உறவுகளால் அனுப்பி வைக்கப்பட்ட இரும்பு ஒட்டும் தொழிலுக்குரிய உபகரணங்களின் ஓரு தொகுதி 15.03.2016 அன்று

தழிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முன்னாள் உறுப்பினர் திரு.யாதவன் அவர்களால் வன்னியில் இருந்து மீளக்குடியேறிய இரும்பு ஒட்டும் தொழிலை மேற்கொண்வரும் திரு. யோ.ரவீந்திரன் என்பவருக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more