சிறுநீரக மோசடி விடயத்தில் சர்வதேச பொலிஸ் உதவி பெற தீர்மானம்-

interpolஇலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் இடம்பெற்றதாக கூறப்படும் சிறுநீரக வர்த்தகம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு, சர்வதேச பொலிஸாரின் உதவியை பெற்றுக்கொள்ள இந்திய பொலிஸார் தீர்மானித்துள்ளனர். இந்த வியாபாரம் சர்வதேச அளவில் இடம்பெற்றதால், சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பை பெற்று இந்த விசாரணைகளை முன்னெடுக்க, இந்திய பொலிஸார் முடிவு செய்துள்ளனர். இந்தியாவின் பந்தோலி, மும்பாய் மற்றும் டெல்லி ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற இந்த வர்த்தகத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களைக் கைதுசெய்வதே, இதன் நோக்கமாகும். இதன்படி இவ்விடயம் தொடர்பில் இந்திய மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி, சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பை பெறும் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக, இந்தியாவின் ஆனந்த் மாவட்ட பொலிஸார் கூறியுள்ளனர். இந்தியாவின் பந்தோலி பகுதியில் இருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட சிலரிடம் பணத்துக்கு சிறுநீரகங்கள் விலைக்கு வாங்கப்பட்டதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. இதனுடன் தொடர்புடையதாக கூறப்படும் மூவர் அண்மையில் இந்தியப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்மை குறிப்பிடத்தக்கது.

தாயக உறவுகளை தலைநிமிரச் செய்வோம்-உதவித்திட்டம்-

ttyyவலிமேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் தாயக உறவுகளைத் தலை நிமிரச் செய்வோம் என்ற உதவித் திட்டத்தின்கீழ்

ஜேர்மனிய புலம்பெயர் உறவுகளால் அனுப்பி வைக்கப்பட்ட இரும்பு ஒட்டும் தொழிலுக்குரிய உபகரணங்களின் ஓரு தொகுதி 15.03.2016 அன்று

தழிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முன்னாள் உறுப்பினர் திரு.யாதவன் அவர்களால் வன்னியில் இருந்து மீளக்குடியேறிய இரும்பு ஒட்டும் தொழிலை மேற்கொண்வரும் திரு. யோ.ரவீந்திரன் என்பவருக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

dfgfg xvbc