விழிநீர் அஞ்சலி – அமரர் வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்கள்-
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் உடுப்பிட்டி மற்றும் சுவிஸ்-சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் விஜயநாதன் (இளைப்பாறிய இலங்கை நீதிமன்ற முதலியார்) அவர்கள் (20.03.2016) ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிச்சில் காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அமரர் வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்கள் கழகத்தின் சுவிஸ் கிளையின் பணிகள் சிறப்புற அறிவுரைகளும், ஊக்கமும் தந்தவர் என்பதோடு, கிளையின் செயற்பாடுகளுக்கு உறுதுணையாய் நின்று உதவிகளையும் வழங்கியவர்.
அவர்தம் பிரிவால் துயருறும் குடும்பத்தினர், நட்புக்கள், உறவுகளோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப் பெருந்துயரினைப் பகிர்ந்து கொள்வதோடு துயரத் தோய்ந்த எமது அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)