தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலில்லை-பாதுகாப்பு அமைச்சின் செயலர்-

karunasenaசாவகச்சேரியில் கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிப்பொருட்களால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படப்போவது இல்லையென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். தேசிய பாதுகாப்பிற்கும் சில இடங்களில் கண்டுப்பிடிக்கப்படும் பொருட்களுக்கும் நிறைய இடைவெளி காணப்படுவதாக குறிப்பிட்ட அவர், இதற்கு முன்னரும் இவ்வாறான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். கடந்த பல வருடங்களாக தினமும் இவ்வாறான பொருட்கள் கண்டெடுக்கப்படுவது, சிலர் கைது செய்யப்படுவது தொடர்பில் அறிக்கைகள் கிடைக்கப்பெறுவதாகவும், அது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கான முழு பொறுப்பும் பொலிஸாருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் அறிவித்ததன் பின்னர் அது பாரதூரமான விடயமாக இருக்கும் பட்சத்தில் பாதுகாப்பு அமைச்சு அது தொடர்பில் கவனம் செலுத்தும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆயுதங்களை ஒப்படைக்க பொது மன்னிப்புக் காலம், துப்பாக்கியுடன் ஒருவர் கைது-

karunasenaசட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கிகளை வைத்திருப்போர், அவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்காக பொது மன்னிப்புக் காலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி கூறியுள்ளார். அத்துடன், இந்த ஆயுதங்களைக் கையளிப்போருக்கு பணம் வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அதனால், உடனடியாக அனுமதிப்பத்திரமற்ற ஆயுதங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோரியுள்ளார். இதேவேளை தன்னியக்கத் துப்பாக்கி வைத்திருந்த ஒருவரை வெள்ளவத்தை ரயில் நிலையத்துக்கு அருகாமையில் வைத்து நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸார் கூறினர். கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது நீர்கொழும்பைச் சேர்ந்த 31வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேநபர், கடந்த டிசம்பர் 28ஆம் திகதி மினுவாங்கொடை பிரதேச சபை உறுப்பினர் இந்திக ஜயசிங்கவை கடத்திச் சென்று கொலைசெய்த சம்பவத்துடன் தொடர்புடையதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதென பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வவுனியா தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு-

676777வவுனியா மாவட்ட தனியார் பஸ் ஊழியர்கள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வவுனியாவில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சேவைக்கான நேர அட்டவணை போன்று தனியார் பஸ் சேவைக்கும் உகந்த நேர் அட்டவணை வழங்குமாறு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகள் சீரான முறையில் சேவையில் ஈடுபடாமையினால் தாம் பாதிக்கப்படுவதாகவும் தனியார் பஸ் ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்னர். இ.போ.ச பஸ் வேகமாக பயணித்த சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தனியார் பஸ் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், அவரை விடுவிக்குமாறும் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறியுள்ளனர். இந்த பணிபகிஸ்கரிப்பினால் கிராம பகுதகளுக்கான போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

1,132 அடி ஆழத்தில் அரச சுரங்க ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்-

கணக்காய்வாளர் தமக்கு 2 தடவைகள் தொலைநகல் மூலம்55656குருநாகல் தொடம்கஸ்லந்த கஹட்டகஹ பகுதியில் அரச சுரங்க ஊழியர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலதிக கொடுப்பனவை கோரியே 70 க்கும் அதிக ஊழியர்கள் 1,132 அடி ஆழத்தில் இருந்து ஊழியர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படும் என நிறுவன அறியத்தந்ததாக கஹட்டகஹ சுரங்க தொழிலாளர்கள் சங்கத்தின் சுசந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

எனினும் வாக்குறுதிகளுக்கு அமைய கொடுப்பனவுகள் வழங்காததை அடுத்தே இரண்டாவது நாளாகவும் இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவற்கு தலைவரை தொடர்புகொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததாகவும் அவரின் கையடக்க தொலைபேசி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுசந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதபட்சத்தில் 2 ஆயிரம் அடி ஆழத்தில் இருந்து தமது உண்ணாவிரதத்தை மேற்கொள்ளவுள்ளதாவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையின் மாற்றங்களை அமெரிக்கா வரவேற்கின்றது-நிசா பிஸ்வால்-

nisha thesai biswalஇலங்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென தென் மற்றும் மத்திய ஆசிய பிராந்திய வலயத்திற்கான அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் நிசா பிஸ்வால் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு தேர்தல்களிலும் இலங்கையில் ஜனநாயக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இலங்கை நல்லிணக்கத்தை நோக்கி நகர்வதாகவும் குறிப்பிட்ட அவர், இலங்கையில் ஏற்படும் மாற்றங்களை அமெரிக்கா வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இலங்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் இலங்கையில் பல்வேறு விடயங்கள் ஆற்றப்பட வேண்டியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.