Header image alt text

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை-வட மாகாண ஆளுனர்-

reginold coorayயாழ். சாவகச்சேரி பகுதியிலிருந்து தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் மிதவாத குழுக்களின் செயற்பாடுகளாக இருக்கலாம் என, வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். இன்றையதினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

நேற்றைய சம்பவம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என வெளியாகும் தகவல்களில் எந்தவொரு உண்மையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக தீவிரவாதம் தலைதூக்குவதாக வெளியான கருத்துக்கள் பொய்யானது. வௌ;வேறு ஊடகங்கள் மூலம் இந்த செய்தி திரிவுபடுத்தப்படுகின்றது என்றும் அவர் கூறியுள்ளார். யுத்த பூமியை வெற்றி கொண்டாலும் மக்களின் மனதை கடந்த அரசாங்கத்தால் வெற்றிகொள்ள முடியவில்லை என குறிப்பிட்ட ரெஜினோல்ட் குரே, தமிழ் மக்களின் மனதை வென்ற தலைவர் மைத்திரிபால சிறிசேனவே எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்துக்கும் இனவாதத்துக்கும் இனி இடமில்லை-பிரதமர்-

ranilமீண்டும் நாட்டில் பயங்கரவாதமோ அல்லது இனவாதமோ ஏற்பட ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘யுத்தமொன்று இடம்பெற்ற நாடொன்றில் ஆயுதங்களும் வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்படுவதென்பது அதிசயிக்கத்தக்க விடயமல்ல’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதக் குழுக்களோ அல்லது வேறு குழுக்களோ செயற்பட ஆரம்பித்தால், அது தொடர்பில் கண்டறிவதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றும் பிரதமர் இதன்போது கூறியுள்ளார்.

ஊவா வெல்லச பல்கலையில் தமிழ் மாணவர்கள்மீது மூர்க்கத்தனமான தாக்குதல். 7பேர் வைத்தியசாலையில் அனுமதி-

wellasa universityஊவா வெல்லச பல்கலைக்கழகத்தில் சிங்கள பெரும்பான்மை இன மாணவர்களுக்கும் தமிழ் மாணவர்களுக்கும் இடையில் சமீப காலமாக கருத்து வேறுபாடுகள் , முறுகல் நிலை தொடர்ந்தவண்ணம் இருந்துள்ளது. இந் நிலையில் 30ஃ03ஃ2016 அதாவது நேற்று இரவு 10 மணியளவில் பல்கலைக்கழகத்துக்கு வெளியில் இவ் திட்டமிடப்பட்ட தாக்குதல் சம்பவம் சிங்கள மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ் தாக்குதல் சம்பத்தினை 2ம் வருட பெரும்பான்மை இன மாணவர்கள் 150 பேருக்கு மேல் இணைந்து, தமிழ் மாணவர்கள் 07 பேர் மீதான கொடூர தாக்குதலாக மேற்கொண்டுள்ளனர். இவ் கொடூர தாக்குதலில் காயமடைந்த 07 தமிழ் மாணவர்களும் தற்போது பதுள்ள பொது வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ் தாக்குதலில் 2ஆம் வருட மாணவர்கள் 4 பேரும், 3 ஆம் வருட மாணவர்கள் இருவரும், இறுதியாண்டு மாணவன் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Read more

வேலையற்ற பட்டதாரிகள் தொழில் உரிமைப் போராட்டம்-

3343வேலையற்ற பட்டதாரிகளுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை அரசாங்கம் பெற்றுத் தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் தொழில் உரிமைப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அகில இலங்கை ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த போராட்டம் இன்றுகாலை 10.30 அளவில் மட்டக்களப்பு – காந்திப் பூங்கா முன்பாக இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் “அரசே! ஊடனடியாக வேலை வாய்ப்பை வழங்கு, தொழில் உரிமை எமது சுதந்திரம், நாங்கள் பெற்ற பட்டம் காற்றில் பறக்கவிடும் பட்டமா?, பட்டதாரிகளுக்கான தேசிய கொள்கையை தயாரி, நல்லாட்சி அரசில் பட்டதாரிகள் தொடர்ந்தும் ஏமாறுவதுதான் நிலையா? உள்ளிட்ட வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் அகில இலங்கை ஒண்றிணைந்த பட்டதாரிகள் சங்கத் தலைவர் தம்மிக முணசிங்க, மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் தெ.கிஷாந்த், மதகுருமார்கள், ஆசிரியர் சங்கங்கள், மாதர் சங்கங்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஒண்றிணைந்த பட்டதாரிகள் சங்க உறுப்பினர்கள், மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதன்போது, வேலையற்ற பட்டதாரிகளுக்கு நிரந்தர வேலை வாய்ப்பை வழங்குமாறு வலியுறுத்தப்பட்டதுடன், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதாக கிழக்கு மாகாண முதலமைச்சரினால் வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படாமை தொடர்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதை துரிதப்படுத்துவதுடன், அதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டு ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ரி.கிஷாந்த் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மட்டக்களப்புக்கு விஜயம்-

maithriஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். இதற்கான சகல பூர்வாங்க ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சரின் அழைப்பின் பேரில் ஏறாவூருக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏறாவூர் ஐயங்கேனி ஜின்னா வீதியில் அமைக்கப்பட்டுள்ள பாரிய கிழக்கு ஆடைத்தொழிற்சாலை மற்றும் கைத்தறி உற்பத்தி தொழிற்சாலை என்பவற்றை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கவுள்ளார். பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகும் இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாக ஜனாதிபதியும், ஏனைய அதிதிகளாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண ஆளுனர், பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சின் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். குறித்த கைத்தொழில் பேட்டையின்மூலம் கிழக்கில் சுமார் 5000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தந்தை செல்வாவின் 118ஆவது ஜனனதினம்-

thanthaiமூதறிஞர் தந்தை செல்வாவின் 118ஆவது ஜனனதின வைபவம் தந்தை செல்வா அறங்காவலர் குழுவின் ஏற்பாட்டில் இன்றுகாலை 9.30அளவில் யாழ்; நகரிலுள்ள தந்தை செல்வாவின் நினைவுச் சதுக்கத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. தந்தை செல்வா அறங்காவலர் குழுவின் தலைவர் ஜெபநேசன் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர்மாலை அனுவிக்கப்பட்டு மலராஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வட மாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், முன்னாள் பேராயர் ஜெபநேசன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர். வவுனியாவில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் ஜனனதின நிகழ்விலே வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் வட மாகாணசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சாவகச்சேரி சம்பவ விசாரணை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைப்பு-

rererசாவகச்சேரி பகுதியில் தற்கொலை அங்கிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் நேற்று மீட்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.விக்ரமசிங்கவினால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கண்காணிப்பின்கீழ் பயங்கரவாத புலானய்வுப் பிரிவினரால் குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, ருவன் குணசேகர கூறியுள்ளார். கைதான சந்தேகநபர், மன்னார் முருங்கன் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவருக்கு இரண்டு மனைவிகள் என்றும், முதல் மனைவி இறந்துவிட்டதாகவும், அவர்களுக்குப் பிறந்த பிள்ளையே தற்போது உள்ள பிள்ளையென்றும் தெரியவந்துள்ளது. இந்நிலையிலேயே, சாவகச்சேரி மறவன்புலவில் இரண்டாவது தடவையாக திருமணம் செய்துள்ளார். Read more