தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை-வட மாகாண ஆளுனர்-

reginold coorayயாழ். சாவகச்சேரி பகுதியிலிருந்து தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் மிதவாத குழுக்களின் செயற்பாடுகளாக இருக்கலாம் என, வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். இன்றையதினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

நேற்றைய சம்பவம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என வெளியாகும் தகவல்களில் எந்தவொரு உண்மையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக தீவிரவாதம் தலைதூக்குவதாக வெளியான கருத்துக்கள் பொய்யானது. வௌ;வேறு ஊடகங்கள் மூலம் இந்த செய்தி திரிவுபடுத்தப்படுகின்றது என்றும் அவர் கூறியுள்ளார். யுத்த பூமியை வெற்றி கொண்டாலும் மக்களின் மனதை கடந்த அரசாங்கத்தால் வெற்றிகொள்ள முடியவில்லை என குறிப்பிட்ட ரெஜினோல்ட் குரே, தமிழ் மக்களின் மனதை வென்ற தலைவர் மைத்திரிபால சிறிசேனவே எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்துக்கும் இனவாதத்துக்கும் இனி இடமில்லை-பிரதமர்-

ranilமீண்டும் நாட்டில் பயங்கரவாதமோ அல்லது இனவாதமோ ஏற்பட ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘யுத்தமொன்று இடம்பெற்ற நாடொன்றில் ஆயுதங்களும் வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்படுவதென்பது அதிசயிக்கத்தக்க விடயமல்ல’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதக் குழுக்களோ அல்லது வேறு குழுக்களோ செயற்பட ஆரம்பித்தால், அது தொடர்பில் கண்டறிவதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றும் பிரதமர் இதன்போது கூறியுள்ளார்.

ஊவா வெல்லச பல்கலையில் தமிழ் மாணவர்கள்மீது மூர்க்கத்தனமான தாக்குதல். 7பேர் வைத்தியசாலையில் அனுமதி-

wellasa universityஊவா வெல்லச பல்கலைக்கழகத்தில் சிங்கள பெரும்பான்மை இன மாணவர்களுக்கும் தமிழ் மாணவர்களுக்கும் இடையில் சமீப காலமாக கருத்து வேறுபாடுகள் , முறுகல் நிலை தொடர்ந்தவண்ணம் இருந்துள்ளது. இந் நிலையில் 30ஃ03ஃ2016 அதாவது நேற்று இரவு 10 மணியளவில் பல்கலைக்கழகத்துக்கு வெளியில் இவ் திட்டமிடப்பட்ட தாக்குதல் சம்பவம் சிங்கள மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ் தாக்குதல் சம்பத்தினை 2ம் வருட பெரும்பான்மை இன மாணவர்கள் 150 பேருக்கு மேல் இணைந்து, தமிழ் மாணவர்கள் 07 பேர் மீதான கொடூர தாக்குதலாக மேற்கொண்டுள்ளனர். இவ் கொடூர தாக்குதலில் காயமடைந்த 07 தமிழ் மாணவர்களும் தற்போது பதுள்ள பொது வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ் தாக்குதலில் 2ஆம் வருட மாணவர்கள் 4 பேரும், 3 ஆம் வருட மாணவர்கள் இருவரும், இறுதியாண்டு மாணவன் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் திருகோணமலை வளாகத்திலும் இவ்வாறான சம்பவம் நடைபெற்ற போதிலும் பெரும்பான்மை மாணவர்கள் மீது பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமையே இவ்வாறன நல்லாட்சியின் நல்ல செயல்கள் தொடர காரணமாக அமைகின்றது. எனவே நல்லாட்சி அரசின் ஜனாதிபதியும் பிரதமரும், உயர் கல்வி அமைச்சர் ஊடாக இவ் விடயத்தில் கவனம் எடுத்து ஜனாதிபதியின் நேரடி நியமனத்தில் நியமிக்கப்பட்ட துணை வேந்தரின் கண்காணிப்பில் தாக்குதலில் ஈடுபட்ட பெரும்பான்மை மாணவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க தவறின், பெரும்பான்மை இன மாணவர்கள் சொற்ப அளவில் கல்வி பயிலும் மட்டக்களப்பு, ஒலுவில், யாழ்ப்பாண பல்கலைக்கழகங்கள் மற்றும் வவுனியா, கிளிநொச்சி வளாகங்களில் பெரும்பான்மை இன மாணவர்களின் நிலைமையும் கேள்விக்குறி ஆகும் சூழல் நிலவுவதாக கல்வியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.