Header image alt text

சம்பூர் சிறுவன் கொலையில் நான்  குற்றமிழைக்கவில்லை-கைதான சிறுவன்-

sfdfdfdதிருகோணமலை சம்பூரில் கல்லில் கட்டப்பட்ட நிலையில் சிறுவனொருவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான சிறுவன் தான் குற்றமிழைக்கவில்லை என நீதவான் முன்னிலையில் தெரிவித்துள்ளார். இந்த கொலையுடன் ஏனைய இருவருக்கு தொடர்புள்ளதாகவும், அவர்களே குற்றத்தை ஒப்புக்கொள்ள கூறியதாகவும் சந்தேகபரான சிறுவன் நீதவானிடம் இன்று வாக்குமூலம் அளித்துள்ளார். சம்பவம் தொடர்பான வழங்கு விசாரணை மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றது.

சந்தேகநபரான சிறுவனின் வாக்குமூலத்தை அடுத்து வழக்கு விசாரணையை எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய சந்தேகநபரான சிறுவனை எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் மாவட்ட நீதிபதியும் நீதவானுமாகிய ஐ.ரிஸ்வான் உத்தரவிட்டுள்ளார். Read more

வவுனியாவில் சாரணர் இயக்க ஸ்தாபகர் தின நிகழ்வுகள்-(படங்கள் இணைப்பு)-

IMG_3161சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவல் பிரபுவின் 159ஆவது பிறந்த தின நிகழ்வுகள், மாவட்ட ஜனாதிபதி சாரணர் மன்றத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு த.நிகேதன் தலைமையில் வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தில் அண்மையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக மத வழிபாடுகளும், அதனைத் தொடர்ந்து சாரண மாணவர்கள் பங்குபற்றிய துவிச்சக்கர வண்டி விழிப்புணர்வு பயணமும் வவுனியா நகரெங்கும் வெகு சிறப்பாக நடைபெற்றதுடன். தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தில் சாரணர்களின் கலை நிகழ்வுகளும், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 9ஆவது தேசிய சாரணர் ஜம்போறியில் பங்குபற்றிய மாவட்ட சாரணர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இலங்கை சாரணர் சங்கத்தின் புலமைப்பரிசில் பெற்று இலங்கையின் பிரதிநிதியாக மொரோக்கோ மற்றும் சார்ஜா சென்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த திரி சாரணர்களான திரு சு.காண்டீபன், திரு ஸ்ரீ.கேசவன் ஆகியோர் இதன்போது கௌரவிக்கப்பட்டதுடன், மாவட்டத்தில் தரு சின்னம் பெற்றவர்களான திரு அ.அனந்தன், வி.அனோஜன் ஆகியோரும் இங்கு கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. Read more

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் துவிசக்கரவண்டிகள் அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)

aவட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் அளவெட்டி அருணாசலம் வித்தியாலய மாணவர்கள் 6பேருக்கும் வட்டு இந்துக்கல்லூரி மாணவி ஒருவருக்குமாக 93,000 பெறுமதியான 7 துவிச்சக்கர வண்டிகள் இன்று வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க தலைமை காரியாலத்தில் வைத்து வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க போசகரும் ஓய்வுபெற்ற மின்சார சபை பொறியியலாளருமான வி.வேலுப்பிள்ளை மற்றும் ஓய்வுபெற்ற சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி அதிபர் திருமதி.வேலுப்பிள்ளை அவர்களால் மாணவர்களுக்கு கையளிக்கபட்டன. மேற்படி மாணவர்கள் அயலில் உள்ள கல்லூரிகளால் ஒதுக்கபட்டு நான்கு கிலோமீற்றர் நடந்து பாடசாலைக்கு தாமதமாக வருவதால் அவர்கள் தங்களது கல்வி நடவடிக்கைகளை தொடர துவிசக்கர வண்டிகள் இல்லாது சிரமப்படுகின்றனர் எனும் விண்ணப்பம் பாடசாலை அதிபர்களினால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் முன்வைத்ததை அடுத்து இம் மாணவர்களும் தமது கல்வி நடவடிக்கைகளை ஏனைய மாணவர்களை போன்று கல்வியில் பாரபட்சமின்றி தொடர வேண்டும் எனும் நல்நோக்கோடு எமது புலம்பெயர் உறவுகளான Read more

வடமாகாண ஆளுனருக்கும் ஜப்பான் தூதுவருக்குமிடையே சந்திப்பு-

alunar japanஇலங்கைக்கான ஜப்பான் தூதுவர் எச்.ஈ. கீனிச்சி சுகனுமா மற்றும் மூவர் அடங்கிய குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தனர். இவர்கள் யாழில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவகத்திற்கு விஜயம் செய்து வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவை சந்தித்துள்ளனர். வடக்கில் இடம்பெற்றுவரும் அபிவிருத்தி பணிகள் மற்றும் ஜப்பான் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் கல்வி, சுகாதாரம், கண்ணிவெடி அகற்றல் பணிகள், மற்றும் பாடசாலைகளுக்கான புனர்நிர்மாணப் பணிகள், கடல்வளங்களின் மேம்பாடு, நன்னீர் மீன் பிடிகளை மேம்படுத்தல் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையிலான ஒற்றுமை தொடர்ந்து விரிவுபடுத்தப்படும் எனவும், இதனால் பல செயற்பாடுகளை மக்களுக்கு கொண்டு செல்லுவதற்கு உதவியாக அமையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் வடக்கில் ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புனர்நிர்மாணம் செய்யப்படாது காணப்படும் பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் எச்.ஈ. கீனிச்சி சுகனுமா இணக்கம் தெரிவித்தாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கூறியுள்ளார்.

யாழில் அரசியல் கைதிகளின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்-

oioiசிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறுக் கோரி, அவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, 6 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்து, கடந்த திங்கட்கிழமை (29) வவுனியா நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட, முன்னாள் யாழ். மாநகர சபை உறுப்பினர் முருகையா கோமகனின் விடுதலைக்காக செயற்பட்ட அமைப்பு, இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது, ‘உயிரை அடகு வைத்து உண்ணா நோன்பிருக்கும் உறவுகளின் உயிருக்கு விலைபேசாதே’, ‘நாட்டில் நல்லாட்சி, நாம் வீதியில் கண்ணீரும், கம்பலையுமாய், நீதி தேவதையே கண் திற’ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், முருகையா கோமகன் கலந்துகொண்டு, அரசியல் கைதிகளின் உறவினர்களுடன் கலந்துரையாடியிருந்தமை இங்கு குறிப்பிடக்கூடியது.

எந்தவொரு தேர்தலும் 2016ஆம் ஆண்டில் இல்லை-

election.....இவ்வருடத்தில் எந்தவொரு தேர்தலும் நடத்தப்பட மாட்டாது என அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாடொன்று, கொழும்பில் இன்று இடம்பெற்றது. இதன்போது கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அமைச்சர், ‘எல்லை நிர்ணய சபையின் பணிகள் பூர்த்தியாகாமல் உள்ளமையினால், உள்ளூராட்சிமன்றம் தேர்தலை நடத்த முடியாதுள்ளது’ என்றார். உள்ளுராட்சி மன்றங்கள் பலவற்றின் ஆயுட்காலம், இம்மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது. இந்நிலையில், உள்ளூராட்சிமன்றங்களுக்கான தேர்தலை உடனடியாக நடத்துமாறு, கூட்டு எதிரணியினர் வலியுறுத்தி வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.

ஆஸியிலிருந்து நாடுகடத்தப்பட்டவர் கட்டுநாயக்கவில் வைத்து கைது-

airportசட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்று அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கட்டுநாயக்க பிரிவு அதிகாரிகள் குழுவினரால் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளதோடு, அந்த நாட்டு அதிகாரிகளால் தடுக்கப்பட்டு பின்னர் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இவர் அம்பகதவில பகுதியைச் சேர்ந்த 26வயதான ஒருவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகநபரை நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

சம்பூரில் அனல்மின் நிலையத்திற்கு எதிர்ப்பு-

ioioதிருகோணமலை சம்பூரில் அனல்மின் நிலையமொன்றை அமைக்க வேண்டாம் என வலியுறுத்தி மக்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கட்டைபறிச்சான் பாலையூர் பிள்ளையார் கோயிலுக்கு முன்பாக இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

கூனித்தீவு, கட்டைப்பறிச்சான், சேனையூர், சூடக்குடா, கடற்கரைசேனை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். சம்பூர் அனல் மின் நிலையத்தினால் தமது அன்றாட செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

ஜோன் அமரதுங்க காணி அமைச்சராக சத்தியப்பிரமாணம்-

t5yt5அமைச்சர் ஜோன் அமரதுங்க, காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சராக இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

தற்போது இவர் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சராக இருக்கும் நிலையில், அதற்கும் மேலதிக இந்த பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளார்.

மறைந்த, காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்தனவின் வெற்றிடத்துக்கே இவர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

செய்தி வலைத்தளங்களை பதிவு செய்யுமாறு அறிவிப்பு-

websitesஇம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து செய்தி வலைத்தளங்களையும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் பதிவு செய்துகொள்ளுமாறு, குறித்த அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

இவ்வாறு அமைச்சின் கீழ் பதிவு செய்துகொள்வதன் மூலம், அனைத்து செய்தி வலைத்தளங்களும் எந்தவொரு குறுக்கீடும் இல்லாமல் நெறிமுறைக்கமைய அங்கிகாரத்தை பெற்று செயற்பட முடியும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

காணாமற்போனோரைக் கண்டறியும் அமைச்சு உருவாகும்-பரணகம-

maxwel paranagamaகாணாமற்போனோரைக் கண்டறியும் அமைச்சு ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தெரிவித்தார். சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் காணாமற்போனவர்கள் தொடர்பில் அவர்களின் உறவினர்கள் சாட்சியமளிக்கும் அமர்வு, பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போது, பரணகம மேற்கண்டவாறு கூறினார். இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், ‘உறவினர்களின் சாட்சிய விசாரணை அறிக்கையை நாடாளுமன்றத்தில் கையளிப்பேன். அங்கு அதற்கான அமைச்சு ஒன்று உருவாக்கப்பட்டு, மேலதிக நடவடிக்கைகளை அவ்வமைச்சு முன்னெடுக்கும்’ என்று கூறியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்கிறது-

welikada jailபயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ், கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்தும் 8 ஆவது நாளாக இன்றும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 13 தமிழ் கைதிகள் தொடர்ந்தும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை மெகசின் சிறைச்சாலைளில் 63பேர் நேற்று இவர்களுக்கு ஆதரவு வழங்கும் முகமாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை நேற்று பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 2 கைதிகள் கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஸ்தாபிக்கப்பட்ட கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தினால் கைதிகள் முதல் முறையாக இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

யோசித்த உள்ளிட்ட நால்வர் மனுத் தாக்கல்-

yosithaமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வர் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளனர். தம்மைக் கைதுசெய்தமை மற்றும் விளக்கமறியலில் வைத்துள்ளமை போன்றவற்றுக்கு எதிராகவே அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த மனுவில் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளும் பெயரிடப்பட்டுள்ளனர். சீ.எஸ்.என் தொலைக்காட்சியில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் அண்மையில் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் யோசித்த உள்ளிட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்பதால், இக் குற்றச்சாட்டுக்களில் இருந்து தம்மை விடுவிக்குமாறும், தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் உத்தரவிட வேண்டும் என, அவர்கள் குறித்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

லசந்த படுகொலை தொடர்பில் புலனாய்வு அதிகாரிகளிடம் விசாரணை-

lasanthaசண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பொலிஸார் இதுவரை இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் 40 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்களுள் கேர்ணல், மேஜர், கப்டன், சார்ஜண்ட், கோப்ரல் மற்றும் சாதாரண சிப்பாய்கள் உட்பட பல்வேறு தரப்பினர் உள்ளடங்குகின்றனர் என்றும், அவர்கள் அனைவரும் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் பணிபுரிபவர்கள் எனவும் கூறப்படுகின்றது. லசந்தவின் கொலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த தொலைபேசி அழைப்புகளின் அடிப்படையிலேயே மேற்கூறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருகின்றன எனவும், இவர்களிடமிருந்து கிடைத்த மிக முக்கிய தகவல்களின் அடிப்படையில் முன்னாள் இராணுவப் பிரதானியொருவரிடமும் சிரேஷ்ட இராணுவ அதிகாரியொருவரிடமும் விரைவில் விசாரணை நடத்தப்படவுள்ளதுடன் பிரதான சூத்திரதாரி கைதாவார் எனவும் கூறப்படுகிறது.

மாணவி வித்தியா படுகொலை தொடர்பில் மேலும் இருவர் கைது-

vithyaபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மேலும் இரு சந்தேகநபர்களை கொழும்பிலிருந்த யாழ் சென்ற குற்றப்புலனாய்வு பொலிஸார் நேற்று கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது. புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களுடன், தொடர்புகளைப் பேணியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2015ஆம் ஆண்டு மே 13ஆம் திகதி மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு தொடர்பில் இதுவரை 10 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேலும் இரு சந்தேகநபர்கள் தற்போது கைதாகியுள்ளனர்.

கொழும்பில் திறந்த பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்-

zxcxxகொழும்பு திறந்த பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர். பல்கலைக்கழக வளாகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில், பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டும். வகுப்பு தடைக்குள்ளான மாணவர்களின் வகுப்புத் தடையை நீக்கி அவர்களுக்கும், கல்வி கற்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இதேவேளை, பல்கலைக்கழகமானது இராணுவ மயப்படுத்தப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறான கோரிக்கைகளை நாம் முன்வைக்கின்றோம். எமது கோரிக்கைகளை உடனடியாக பல்கலைக்கழக நிர்வாகம் தீர்த்து வைக்காவிடின், நாடளாவிய ரீதியில் இந்த போராட்டம் தொடரும் என கூறியுள்ளனர்.

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய “பொதுச்சபைக் கூட்டம்”.. 28.03.2016″ அறிவித்தல்..!

grtrtrtrtttrசுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் 2016 – 2018 ஆம் ஆண்டிற்கான நிர்வாகசபைத் தெரிவும் பொதுச்சபைக் கூட்டமும் எதிர்வரும் 28.03.2016 திங்கட் கிழமை 15:30 மணி தொடக்கம் 19:00 மணிவரை நடைபெற இருப்பதால், ஊரின் வளர்ச்சி மீது அக்கறை கொண்ட “அனைத்து சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்கள்” அனைவரையும் கலந்து சிறப்பித்து 2016 – 2018 ஆம் ஆண்டின் நிர்வாக சபைக்கான உறுப்பினரைத் தெரிவு செய்து ஒன்றியத்தின் வளர்ச்சிக்கும், அதனூடாக ஊர் நோக்கிய செயற்பாட்டிற்கும் ஆதரவு தருமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
மேற்படி புதிய நிர்வாக சபையில் புங்குடுதீவின் பன்னிரெண்டு வட்டாரத்தையும் உள்ளடக்கிய பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்பட இருப்பதால், அனைத்து சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களும், கலந்து கொண்டு “ஊர் நோக்கிய வளர்ச்சி குறித்த” தங்களின் கருத்துக்களையும் தெரிவித்து, பிரதிநிதித்துவத்தையும் உறுதிப்படுத்துமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

Read more

ஊடகவியலாளர் மாத்தியூ லீயிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்-

fdfdfdffஐ.நா. அமைப்பின் இன்னர்சிட்டி பிரேஸ் என்ற இணையத்தின் சர்வதேச ஊடகவியாளர் மாத்தியூ லீ ஐ.நா அலுவலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டமையை கண்டித்து இன்று யாழ் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வடமாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் தலைமையில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. காணாமல் போனோரின் உறவினர்கள் ஒன்றிணைந்து இவ் ஆர்ப்பாட்டத்தினை நடாத்தியுள்ளனர். இதன்போது ஐ.நா.சபையின் பொதுச்செயலாளருக்கு பான்கீ மூனிடம் கையளிக்கும் வகையிலான மகஜர் ஒன்று சமர்ப்பிக்கப்பட்ட போதும் ஐ.நா அலுவலக அதிகாரிகாரிகள் அந்த மகஜரை பெற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தனர். ஐ.நா யாழ் அலுவலகம் தற்போது இயங்குவதில்லை என்றும் அந்த மகஜரை கொழும்பு அலுவலகத்தில் கையளிக்குமாறும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், இயங்காத நிலையில் அலுவலகம் ஒன்று இங்கு தேவையில்லை என கோஷமிட்டுள்ளனர். Read more