Header image alt text

கூட்டமைப்பு பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு-(படங்கள் இணைப்பு)

sdfdfdதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், நிர்மலநாதன் சார்ள்ஸ், சாந்தி சிறீஸ்கந்தராஜா, வைத்தியக்கலாநிதி சிவமோகன், கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர்களான கந்தையா சிவநேசன், அன்ரனி ஜெகநாதன், துரைராசா ரவிகரன் ஆகியோர்க்கும்,

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் சமாசங்களுக்குமிடையில் மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பான விரிவான கலந்துரையாடல் ஒன்று இன்று முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட மீனவர் சமாச தலைவா மரியதாஸ் மற்றும் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் இதில் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது மீனவர்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. முக்கியமாக மீனவர்களின் வாழ்வாதாரம், கரைவலைத் தொழில், இறால் பிடித்தல், அட்டை பிடித்தல், சட்டவிரோத மீன்பிடி, வெளிப் பிரதேசங்களிலிருந்து அங்கு வருகைதந்து மீன்பிடியில் ஈடுபடுவதால் ஏற்படும் பாதிப்புகள், Read more

கொக்கிளாய் பிரதேச முன்பள்ளிகளின் அடிப்படை வசதிகள் தொடர்பில் கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)

kokkulai (2)வட மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன் (பவன்) அவர்களுக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பிரதேச மக்களுக்குமிடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலின்போது கொக்கிளாய் பிரதேச முன்பள்ளிகளின் அடிப்படை வசதிகள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக

மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் (பவன்) அவர்கள் மக்களுடன் விரிவாக கலந்துரையாடியுள்ளார். Read more

வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் சக்கர நாற்காலிகள் அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)

5e496600-b470-4e77-adaf-5e41a9cc4c11வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் புதுக்குடியிருப்பு ஒளிரும் வாழ்வு இல்ல பயனாளிகள் நான்கு பேருக்கு சக்கர நாற்காலிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாற்றுதிறானளின் வாழ்வியல் மேம்பாட்டுக்காக இயங்கி வரும் ஒளிரும் வாழ்வு என்ற அமைப்பு தமது பயனாளிகள் நான்கு பேருக்கு மிக அவசரமாக சக்கர நாற்களிகளைத் தந்துதவுமாறு கேட்டுக்கொண்டதற்கு

இணங்க தலா 9975 ரூபா பெறுமதியான நான்கு சக்கர நாற்காலிகள் (39,900 ரூபா) அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. (வட்டு. இந்து வாலிபர் சங்கம்)
Read more

கருநாட்டுக்கேணி பிரதேச முன்பள்ளிகளின் அடிப்படை வசதிகள் தொடர்பில் கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)

karunattukerny (2)வட மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன் (பவன்) அவர்களுக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தின் கருநாட்டுக்கேணி பிரதேச மக்களுக்குமிடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலின்போது கருநாட்டுக்கேணி பிரதேச முன்பள்ளிகளின் அடிப்படை வசதிகள் மற்றும் அபிவிருத்திப் பணிகள்

தொடர்பாக மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் (பவன்) அவர்கள் மக்களுடன் விரிவாக கலந்துரையாடியுள்ளார். Read more

பேரவையின் இறுதி வரைபு ஐரோப்பிய ஒன்றியத்திடம் கையளிப்பு-

peravaiதமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட இறுதிவரைபு வெளியிடப்பட்ட நிலையில், நேற்று அது உத்தியோகபூர்வமாக பிரித்தானிய அரசாங்க தரப்பிடமும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடமும் கையளிக்கப்பட்டது. பேரவையின் செயற்பாட்டுக்குழு இணைப்பாளர் அலன் சத்தியதாஸ் தலைமையில் ஐவர் கொண்ட குழு குறித்த வரைபை கையளித்துள்ளது. நேற்று முற்பகல் ஐரோப்பிய ஒன்றிய அரசியல் விவகார பொறுப்பாளர் போல் கொட்விரியும், பின்னர் பிரித்தானிய உயர்ஸ்தானிகரக அரசியல் பொறுப்பாளர் டானியல் பெயின்டரும் தீர்வு திட்ட வரைபு பிரதிகளை பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து பேரவை உறுப்பினர்களுக்கும், அரசியல் இராஜதந்திரிகளிற்கும் இடையிலான கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. இதன்போது, பேரவை உறுப்பினர்கள், இதுவரை காலமாக தமிழ் மக்கள் எதை தமக்கு தீர்வாக எதிர்பார்கிறார்கள் என்ற ஒரு தீர்க்கமான திட்டம் உருவாக்க எவரும் முன்வராதது குறித்து எடுத்துரைத்தனர். அத்துடன், தமிழ் பேசும் மக்களின் கருத்துக்களுக்கு செவிமடுக்காததாலும், தமிழ்மக்களின் இழப்பை எவரும் சரியாக கண்டுகொள்ளாததாலும், தொடர்ந்தும் ஏமாற்றப்படும் நிலை உள்ளது. இத்தருணத்தில் இதுதான் தமிழ்மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு என மக்கள் கலந்துரையாடல் மூலம் ஒரு திட்டம் உருவாக்கி அதனை சர்வதேசத்திடம் சமர்ப்பித்து, தீர்வுத்திட்டம் ஒன்று முழுமையாக பெற்றத்தரப்பட வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் மாத்திரமே தமிழ்மக்கள் தமது சுயகொளரவத்துடனும், சமஉரிமையுடனும் வாழமுடியும் எனபதை பேரவையின் செயற்பாட்டுக்குழு, ராஜதந்திரிகளிடம் தெளிபடுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தொழிலாளர் தின பாதுகாப்புக்காக 5000 பொலிஸார் கடமை-

ewewநாளை தொழிலாளர் தினத்தன்று பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 5000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

நாளை காலை முதல் இந்த பொலிஸ் அதிகாரிகளை பாதுகாப்பு பணிகளில் இணைத்துக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் தின நிகழ்வுகள் மற்றும் பேரணிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 3100 பொலிஸ் அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர். இதுதவிர போக்குவரத்து கடமைகளுக்காக 1900 பொலிஸ் அதிகாரிகள் இணைத்துக் கொள்ளகப்பட உள்ளனர்.

முச்சக்கர வண்டிகளுக்கும் ஆசனப்பட்டி-

AUTOமுச்சக்கர வண்டிகளுக்கு ஆசனப்பட்டி அணிவதை பரிந்துரை செய்வதற்கு வீதி பாதுகாப்புக்கான தேசிய சபை தீர்மானித்துள்ளது.

முச்சக்கர வண்டி விபத்துக்களால் ஏற்படுகின்ற உயிரிழப்புக்கள் குறித்து அவதானம் செலுத்தியபோது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதன் தலைவர் டாக்டர் சிசிர கோந்தகொட கூறியுள்ளார்.

முச்சக்கர வண்டிகளில் பயணிக்கும் மக்களின் பாதுகாப்பு குறித்து அவதானம் செலுத்தப்பட்டபோது மேலும் பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். குறித்த பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்குறிய சட்டம் குறுகிய காலத்தில் இடம்பெறும் என்று வீதி பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் தெரிவித்தார்.

ரயிலில் மோதுண்டு குடும்ப பெண் மரணம்-

trainமட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி இன்றுகாலை 06.10க்கு புறப்பட்டுச் சென்ற உதயதேவி புகையிரதத்தில், மாவடிவேம்பு கிராம அபிவிருத்தி சங்க வீதியைச் சேர்ந்த

நான்கு பிள்ளைகளின் தாயான கணபதிபிள்ளை ரன்சிதமலர் (வயது 35) என்பவர் தேவபுரம் பகுதியில் வைத்து மோதுண்டு உயிரிழந்துள்ளார் என ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த அப்பெண் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு உயிரிழந்துள்ளார். இது விபத்தா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரனைகளை செய்கின்றனர்.

நோர்வே விமான விபத்தில் பயணித்த அனைவரும் உயிரிழப்பு-

sasaddநோர்வேயில் விமானம் ஒன்று விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த 13 பேரும் பலியானார்கள். நோர்வேயின் இரண்டு பெரிய நகரான பெர்கானில் அமைந்துள்ள தீவில் இந்த விமானம் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

2 விமான குழுவினர் மற்றும் 11 பணியாளர்களுடன் பயணித்த ஈரோகொப்டர் ஈசி 225எல் என்ற இந்த விமானத்தின் மேற்பகுதியில் அமைந்துள்ள ரோட்டர் தனியாக கழன்று 300 மீட்டர் தூரத்தில் சென்று விழுந்துள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த விமானம் நகரில் அமைந்துள்ள தீவில் வெடித்து சிதறியிருக்கின்றது, இதில் விமானம் முழுவதும் சேதமடைந்ததில் விமானத்தில் பாதிப் பாகங்கள் தரையிலும், மீதி பாகங்கள் தண்ணீரிலும் சிதறியுள்ளன.

கல்முனை வாள்வெட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காயம்-

cut killed (2)கல்முனை மருதமுனை பகுதியில் வீடொன்றுக்குள் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இந்த வாள்வெட்டுத் தாக்குதல் இன்றுகாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு துறைமுகத்தில் பிரான்ஸ் நாட்டு யுத்த கப்பல்-

sadsdsdநட்புறவு சுற்றுபயணத்தை மேற்கொண்டு பிரான்ஸ் கடற்படைக்கு சொந்தமான எக்கோனிட் என்ற யுத்த கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது.

குறித்த கப்பலை பாரம்பரியமாக வரவேற்றதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த யுத்த கப்பல் எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதிவரை கொழும்பு துறைமுகத்தில் இருக்கவுள்ளது.

மேதினத்தில் 12 கூட்டங்கள், 16 பேரணிகள் இடம்பெற ஏற்பாடு-

weweதொழிலாளார் தினமான மே 1ஆம் திகதியன்று 12 பிரதான கூட்டங்கள் மற்றும் 16 பேரணிகளை நடத்துவதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

கொழும்பு மற்றும் காலி ஆகிய பிரதான நகரங்களிலேயே பெரும் கூட்டங்களும் பேரணிகளும் நடத்தப்படவுள்ளன.

அதற்கு அப்பால், பெருந்தோட்ட தொழிலாளர்கள் செறிந்து வாழ்கின்ற மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி நுவரெலியா, தலவாக்கலை உள்ளிட்ட நகரங்களில் கூட்டங்களும் பேரணிகளும் நடத்தப்படவுள்ளன.

Read more

புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரம், ஒஸ்கா முன்பள்ளி விளையாட்டுப் போட்டி-(படங்கள் இணைப்பு)

10 wardsமுல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள ஒஸ்கா முன்பள்ளி சிறார்களின் இல்ல விளையாட்டுப் போட்டி இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாணசபை உறுப்பினர் திரு. க.சிவநேசன் (பவன்) அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.

மேற்படி விளையாட்டுப் போட்டி நிகழ்வில் முன்பள்ளிகளுக்கான வலயக்கல்விப் பிரதிப் பணிப்பாளர், வலயக் கல்வி உதவி விளையாட்டுப் பணிப்பாளர்,

வன்னி மேம்பாட்டுக் கழகத் தலைவர், முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டிருந்தனர். Read more

முன்னாள் போராளிகளது கைது நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது-பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன்- (ரி.விரூஷன்)

D.Sithadthan M.P,.புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் மீளவும் கைது செய்யப்படுகின்ற நடவடிக்கையானது மக்கள் மத்தியில் அச்சநிலையைத் தோற்றுவித்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். முன்னாள் போராளிகள் அண்மைக் காலமாக கைதுசெய்யப்பட்டு வருகின்றமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரிடம் கேட்டபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இத்தகைய நடவடிக்கைகளானது கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்றதைப் போன்றே காணப்படுகின்றது.

புதிய நல்லாட்சி அரசாங்கத்துக்கு மக்கள் வாக்களித்ததன் காரணம், தமக்கு கடந்த ஆட்சிக் காலத்திலிருந்த நிம்மதியற்ற வாழ்க்கை நீங்கி சுமுகமான நல்வாழ்க்கை கிடைக்குமென்ற நம்பிக்கையில்தான். ஆனால் தற்போதைய அரச ஆட்சியில் இடம்பெறுகின்ற இக் கைதுகளால் மக்களிடையே பொதுவான ஓர் அச்சம் ஏற்பட்டுள்ளதுடன் இவை பழைய அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஞாபகப்படுத்துவதாகவே உள்ளன. இக் கைது நடவடிக்கைகள், கடத்தல் செயற்பாடுகள் போன்றே இடம்பெற்று வருவதைக் காணமுடிகின்றது. எனவே அரசாங்கம் மக்களுக்கு ஏன் இக் கைதுகள் இடம்பெறுகின்றன?

Read more

மாகாணசபை உறுப்பினர் க.சிவநேசன் கிராம அபிவிருத்தி திணைக்களங்கள் மற்றும் மாதர் சங்கங்களுக்கு உதவி-(படங்கள் இணைப்பு)

t6767முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துறைப்பற்று, புதுக்குடியிருப்பு மற்றும் ஒட்டிசுட்டான் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் என்பவற்றுக்கு

வடக்கு மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன்(பவன்) அவர்களின் பிரமாண அடிப்படையிலான 2015ஆம் ஆண்டின் மூலதன நன்கொடை நிதியிலிருந்து தளபாடங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன் அவர்களுடன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராமசபைத் தலைவர், செயலாளர், ஊர்ப் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். Read more

சூரிச் மாநகரில் “புளொட்” அமைப்பினர் கலந்து கொள்ளும் மாபெரும் மேதின ஊர்வலம்-

PLOTE.Swiss Maydayமே 1 தொழிலாளர் தினம் – 2016
சூரிச் மாநகரில் மாபெரும் மேதின ஊர்வலம்,
01.05.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிக்கு…
தோழமை உணர்வுள்ள சுவிஸ் வாழ் தமிழ் மக்களே! கழகத் தோழர்களே! தோழமைக் கட்சி உறுப்பினர்களே! ஆதரவாளர்களே!

சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் 2016 மே முதலாம் திகதி சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள் மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்களும் கலந்து கொள்ளும் தொழிலாளர் தினத்தில் பேதங்கள் இன்றி நாமும் கலந்து கொண்டு, இலங்கை தாயகத்தில் தமிழினத்தின் ஜனநாயக அரசியல் தீர்வை அரசு அங்கீகரிக்க சர்வதேசம் தனது நியாயமான பங்களிப்பைச் செய்யக்கோரி குரல் கொடுத்து எமதின உரிமைப் போராட்டத்தை ஜனநாயக வழியில் உறுதியான வெற்றிக்கு இட்டுச்செல்ல வலுச்சேர்ப்போமாக!

எம் ஒவ்வொருவரையும் இந்த போராட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயக் கடமையில் உள்ளோமென்பதை நாம் ஒவ்வொருவரும் நன்கு அறிவோம். அந்த வகையில் கடமையுணர்வுள்ள ஒவ்வொரு தமிழரும் தம்மாலியன்ற பங்களிப்பினை செய்ய வேண்டும் என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தோழமையுடன் கேட்டுக் கொள்ளும் அதேவேளையில், மக்களின் விடுதலைக்கு தோள் கொடுக்க விரும்பும் அனைவரையும் இவ் மேதின ஊர்வலத்திற்கு தோழமையுடன் அழைக்கின்றோம்.
Read more

பிரியங்கர ஜயரட்ன, நிஷாந்த விக்ரமசிங்க ஆகியோரிடம் விசாரணை-

janathipathi anaikuluபல்வேறு குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக சட்டம், பொது ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க ஆகிய இருவரும் பாரிய மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். கடந்த 2014ம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பகல் போசனம் வழங்குவதற்காக 330,000 ரூபா நிதி மற்றும் தன்னுடைய சொந்த வீட்டில் மற்றும் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளுக்காக பயன்படுத்தப்பட்ட 234,800 ஷரூபா நிதி ஆகியவற்றை தனது அமைச்சின் கீழ் இயங்கிய நிறுவனம் ஒன்றினூடாக செலுத்தியமை குறித்து பிரியங்கர ஜயரட்னவிடம் விசாரணைகள் இடம்பெறவிருந்தன. தனது அதிகாரத்தை பயன்படுத்தி மலேசியாவில் இருந்து கட்டுநாயக்க நோக்கி பறந்து கொண்டிருந்த பயணிகள் விமானத்தை சிங்கப்பூரினூடாக திசை திருப்பி பறக்கச் செய்தமையினூடாக பல இலட்சக்கணக்கில் நட்டம் ஏற்படுத்தியமை உள்ளிட்ட மேலும் பல குற்றச்சாட்டுக்கள் குறித்து அவரிடம் விசாரணைகள் இடம்பெறவிருந்தன.

ஜூன் மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி-

money...இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்துடன் இணக்கப்பட்டடுக்கு வந்துள்ளது. இதுதொடர்பில் இலங்கைக்கும், சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் ஓர் உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவுள்ளது. கூடுதல் வட்டிக் கடன்களைக் குறைந்த வட்டிக் கடன்களாக மாற்றுதல் உட்பட நாட்டின் நிதி நிலைமையை மேம்படுத்துவதற்காக 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி பெறும் ஒப்பந்தம் ஒன்று இலங்கை, சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துள்ளது என புளும்பேர்க் பொருளாதார அவதானிப்பு நிலையம் கூறியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் அனுமதி எதிர்வரும் ஜூன் மாதம் கிடைத்தவுடன் இந்த நிதித்தொகை வழங்கப்படவுள்ளது. இது தொடர்பாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கூறுகையில், கடன் தொகையை பெற்றுக் கொள்வதற்கான அனைத்து விடயங்களும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும், கடனை பெற்றுக்கொள்ளும் காலம் மற்றும் பெற்றுக் கொள்ளும் விதம் தொடர்பில் மாத்திரம் இணக்கப்பாட்டிற்கு வரவேண்டி இருப்பதாகவும் கூறியுள்ளார். எதிர்வரும் சில தினங்களுக்குள் நற்செய்தி ஒன்றை அறிவிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்

பரந்தன் பிரதேச காணியிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு-

weeweகிளிநொச்சி பரந்தன் பிரதேசத்திலுள்ள காணி ஒன்றிலிருந்து இன்று முற்பகல் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

பரந்தன் சந்தியிலிருந்து முல்லைத்தீவு வீதியில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான காணியின் மலசலகூட கிடங்கிலிருந்து இந்த வெடிபொருட்களை இராணுவம் கைப்பற்றியுள்ளது.

இதற்கமைய எல்.எம்.ஜே ரவைகள், மகசின் தோட்டாக்கள், துப்பாக்கியின் பாகங்கள், பழைய ஷெல் ஆகியவற்றையே இராணுவம் மீட்டுள்ளது. குறித்த காணியின் உரிமையாளரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய இந்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடக சுதந்திர தினம் – வைகாசி -2016-

mrs ainkaran (7)இன்றைய நவீன ஜனநாயக உலகின் நிலைபேறு தன்மையில் ஊடகம் என்பது மிக முக்கிய தாங்கு தூணாக செயற்பட்டு வருகின்றது. பெறப்படுகின்ற தகவல்களின் உண்மைத் தன்மையினை உறுதிசெய்து சமூகத்தில் விழிப்புணர்வையும் சமூகத்தின் பொறுப்புணர்வையும் ஏற்படுத்துவதில் ஊடகம் மற்றும் ஊடகவியலாளர்களின் பணி என்பது வெறும் வார்த்தைகளால் குறிப்பிட்டு விட முடியாத ஒன்றாகும். ஊடகம் என்பது ஒர் வழிகாட்டியாகவும் ஊடகவியலாளர்கள் சமூகத்தின் ஓர் முழுநேரப் போராளியாகவும் செயற்பட்டு என்றும் மக்களின் மனங்களில் இடம் பெற்றுள்ளனர். கடந்த காலங்களில் ஆயுதப்போராட்டங்கள் முனைப்புப் பெற்றிருந்த வேளை அதற்கு மேலும் வலுச் சேர்ப்பிக்கும் நிலையில் ஊடகங்கள் தொழிற்பட்டமை எமது தேசத்தின் பின்நோக்கிய வரலாற்றில் பதிவுகளாகவும் வரலாற்று தடயங்களாகவும் நிலைபெற்றிருக்கின்றது. இவ் காரணத்தினாலேயே பல ஊடகவியலாளர்கள் இன வஞ்சகம் கொண்ட காட்டேறிகளால் படுகொலை செய்யப்பட்டனர், தாக்கப்பட்டனர், கடத்தப்பட்டனர். இவ்வாறே ஊடகங்களுக்குள்ளும் உட்பிரவேசித்து ஆயுதங்களால் அவற்றை அழிக்க முற்பட்டனர். ஆயினும் ஊடகப்பணி சாம்பல் மேட்டிலிருந்து பறந்த பீனிக்ஸ் பறவைபோல் தனது பணியினை செவ்வனே ஆற்றி இவ் இனத்தின் இலட்சியம் நோக்கிய பாதையில் மக்களை தொடர்ந்தும் பயணிக்க வைத்ததற்கு மேலாக தொடர்ந்தும் பயணிக்கச் செய்து கொண்டே இருக்கின்றது. இதேவேளை இவ் இனத்தின் இலட்சிய கனவுகளை சர்வதேச அரங்கிற்கும் வெளிப்படுத்தியது. எமது இனத்தின் விடிவிற்காய் பேனா முனைப் போராளியாக புறப்பட்டவர்களில் நயவஞ்சகர்களால் அழிக்கப்பட்டவர்களுக்கும் அழிக்கப்பட்ட ஊடகங்களுக்குமாக இவ் புனிதமான சர்வதேச ஊடக சுதந்திர தினத்தில் ஒரு நிமிடம் மௌனிப்பதோடு ஊடகப் போராளிகளையும் ஊடகங்களையும் நினைவு கூறுவது எம் ஒவ்வோர்வருடைய கடமையாகும். இதேவேளை இல்லாது ஒழிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு ஒர் நினைவிடம் அமைத்து அவர்களது புனித பணியினை போற்றுவோம்.
என்றும் ஊடகங்களுகக்காய்,
தமிழ் அன்னையின் புதல்வியாய்,
திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன்,
முன்னாள் தவிசாளர்,
வலி மேற்கு பிரதேச சபை.

இலங்கையுடனான உறவுக்கு அமெரிக்கா முக்கியத்துவம்-

samanthaஇலங்கையுடனான உறவுக்கு ஜனாதிபதி பராக் ஒபாமா கூடுதல் முக்கியத்துவம் வழங்குவதாக ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதி சமந்தா பவர் கூறினார். அமெரிக்க – இலங்கை வர்த்தக மற்றும் முதலீட்டு பேரவையில் உரையாற்றிய போதே இவர் இவ்வாறு கூறினார். இலங்கைக்கும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் உதவிகளை வழங்குவதில் அமெரிக்கா, மிகுந்த அக்கறையுடன் இருப்பதாகவும் தேர்தல் நடந்த 16 மாதங்களில் ஜனாதிபதி மைத்திரியின் அரசாங்கம் பெரும் முன்னேற்றங்களைக் கண்டிருப்பதாகம் அவர் கூறினார். நவம்பரில் நான் இலங்கை சென்றிருந்தபோது பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. பொதுமக்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் பயமின்றி செயற்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாக என்னிடம் கூறினர். அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். மக்களின் காணிகள் திருப்பிக் கொடுக்கப்படுகின்றன. பல மக்கள் மீள்குடியேறி வருகின்றனர். இவ்வாறு குறுகிய காலத்தில் பெரும் முன்னேற்றம் கண்ட, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாட்டை நான் முன்னொருபோதும் கண்டதில்ல எனவும் அவர் புகழ்ந்தார். Read more