புதிய குற்றப் புலனாய்வு மத்திய நிலையம்-

policeகுற்றவியல் புலனாய்வுத் தகவல் பகுப்பாய்வு மத்திய நிலையம் என்ற பெயரில் புதிய பிரிவொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக தெரியவருகிறது. மனித படுகொலை, பாலியல் துஷ்பிரயோகங்கள் போன்ற பாரிய குற்றச்செயல்கள் சம்பந்தமான தகவல்களை, அன்றாடம் பொலிஸ் நிலையங்கள் மட்டத்தில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒன்று திரட்டுவது இப் பிரிவினால் நடைபெறும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். அந்த தகவல்களை பகுப்பாய்வு செய்து, தெரிவு செய்யப்பட்ட குற்றச்செயல்கள் ஏற்படும் வழிவகைகள் மற்றும் குற்றச் செயல்களின் அதிகரிப்பு சம்பந்தமாக, விசாரணைகள் மேற்கொள்ளும் அதிகாரிகளை தெளிவுபடுத்துவது இந்த புதிய பிரிவின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. எதிர்வரும் 4ம் திகதி குற்றவியல் புலனாய்வுத் தகவல் பகுப்பாய்வு மத்திய நிலையம் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், அது குற்ற அறிக்கைகள் பிரிவில் ஸ்தாபிக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மக்களின் பாதுகாப்புக்காக பொறுப்புடன் செயற்படுவேன்-பாதுகாப்புச் செயலர்-

karunasenaசாவகச்சேரியில் தற்கொலை அங்கி உட்பட வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான தனது அறிக்கைக்கு மிகவும் தவறான அர்த்தம் வழங்கப்பட்டிருப்பதாக பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெட்டியாரச்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். பாதுகாப்பமைச்சின் செயலாளர் என்ற வகையில் நாட்டு மக்களின் பாதுகாப்பு சம்பந்தமாக தான் மிகவும் பொறுப்புடன் செயல்படுவதாக அவர் கூறியுள்ளார். இவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்களுக்கு பாதகமான தவறான செய்தியை வழங்கி தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது. சாவகச்சேரி சம்பவத்தின் மூலம் இந்நாட்டு பாதுகாப்பு தரப்பினரின் திறனை குறைத்து மதிப்பிடும் வகையில் நான் செயற்படவில்லை. அதேநேரம் இந்த நிலமையை பயன்படுத்தி சிலர் தமது உள்நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கின்றனர். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்களை தவறாக வழி நடத்தாமல் இருப்போமென்று உறுதியளிக்கின்றோம். எவ்வாறாயினும் நாட்டின் பாதுகாப்பு தரப்பினர் மற்றும் அனைத்து புலனாய்வு துறையினரும் மிகவும் சரியாகவும் கவனமாகவும் தமது கடமைகளை நிறைவேற்றுகின்றனர் என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் பெறுமதி 11,000 இலட்சம்-

5656இலங்கையின் தெற்கு கடற்பகுதியில் 11 வெளிநாட்டவர்களுடன் கைப்பற்றப்பட்ட 101 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளின் பெறுமதி 11,000 இலட்சம் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக இன்றையதினம் காலை ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர மேற்சொன்ன விடயத்தைக் கூறியுள்ளார். போதைப் பொருளை கடத்தி வந்த சிறிய படகு ஈரான் நாட்டிற்கு சொந்தமானது என்றும் இந்தக் கடத்தலை செய்திருக்கின்ற பிரதான சூத்திரதாரிகள் நீர்கொழும்பு, துங்கல்பிட்டிய பிரதேசத்தில் தங்கியிருந்த குழுவொன்று என்றும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட 11 வெளிநாட்டு பிரஜைகளும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரின் பொறுப்பில் இருப்பதாகவும் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

வவுனியா காவலரண்கள் பொலிஸ் நிலையங்களாக மாற்றம்-

vavuniyaவவுனியா பொலிஸ் பிரிவிலிருந்த நான்கு காவலரண்கள் நேற்று முதல் பொலிஸ் நிலையங்களாக இயங்க ஆரம்பித்துள்ளன.

அதிகரித்துள்ள மக்கள் சனத்தொகையை கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இதன்படி உலுக்குளம், பறயநாயன்குளம், பூவரசன்குளம், மாமடு ஆகிய காவலரண்கள் பொலிஸ் நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதுவரையான காலப்பகுதியில் இவை வெறும் காவலரண்களாக மாத்திரம் இயங்கி வந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

நீர்வேலியில் வாள்வெட்டு, 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி-

cut killed (2)யாழ். நீர்வேலி தெற்கில் வீடொன்றுக்குள் புகுந்த இளைஞர் குழுவொன்று மேற்கொண்ட வாள்வெட்டுத் தாக்குதலில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். தாக்குலினால் பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சுமார் 10பேர் கொண்ட இளைஞர் குழு குறித்த பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து வீட்டு உரிமையாளரை பொல் மற்றும் வாள்களால் ஓடஓடத் தாக்கியுள்ளது. இதனைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் உதவிக்குச் சென்றவேளை தந்தையும் 2 மகன்களும் வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பா. தயாளன், எஸ். செல்வராசா, செ.ஜெயக்குமார், செ.சிவகுமார் எஸ். பெரியதம்பி, கே. குகா ஆகியோரே வாள்வெட்டுக்கு இலக்காகி கிகிச்சை பெற்று வருகின்றனர். வாள்வெட்டுக்கு இலக்கான பா.தயாளன் என்பவருடைய வீட்டிலேயே இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுமார் அரை மணிநேரத்திற்கு மேலாக இந்த இளைஞர் குழுவின் அட்டகாசம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருட்டுச் சம்பவங்களைத் தடுக்கும் விழிப்புக் குழுவில் இவர்கள் செயற்பட்ட காரணத்துக்காவே தாக்கப்பட்டதாகப் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

காணாமற்போனதாக சந்தேகிக்கப்படும் நால்வர் மாலைத்தீவில் சிறையில்-

missingயுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் காணாமற்போனதாக சந்தேகிக்கப்படும் நால்வர் மாலைத்தீவில் சிறைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதென காணாமற்போனோர் தொடர்பான சாட்சி விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பிட்ட நால்வரின் உறவினர்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்ததாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம குறிப்பிட்டுள்ளார். உறவினர்களின் முறைப்பாட்டின் பிரகாரம் ஆணைக்குழுவினால் தனியான குழுவொன்று நியமிக்கப்பட்டு அதுகுறித்து வடக்கில் விசாரணை முன்னெடுக்கப்பட்டதாகவும், விசாரணைகளின் பின்னர் காணாமற்போன நால்வரும் மாலைத்தீவில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கான சாட்சியங்கள் கிடைத்துள்ளாகவும் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். Read more