யாழ் புதிய ஹோட்டல் திறப்புவிழாவில் ஜனாதிபதி பங்கேற்பு-

4344யாழ். நகரப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ஹோட்டலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார். அத்துடன் இதன்போது, யாழ். கரைநகர் பகுதியில் உள்ள சுற்றுலா மற்றும் ஹோட்டல் கற்கை நெறியினை பூர்த்திசெய்த மாணவர்கள் ஐவருக்கு ஜனாதிபதி சான்றிதழ்களை வழங்கி வைத்ததுடன், அம் மாணவர்களுடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இந்த நிகழ்வில் அமைச்சர்களான ஜோன் அமரதுங்க, முஸ்தபா, விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், இலங்கைக்காக இந்திய துணைத் தூதுவர் ஆ.நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். யுத்தத்தின் பின்னர் யாழ். மாவட்டத்தில் பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சுற்றுலா அமைச்சின் அனுசரணையுடன், ஜேர்மன் நாட்டின் தனியார் நிறுவனம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக (மணிக்கூட்டு வீதி) குறித்த பிரமாண்டமான ஹோட்டலை நிர்மாணித்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும். 

விரைவில் நீதியைப் பெற்றுத்தாருங்கள்-ஜனாதிபதியிடம் வித்தியாவின் தாயார்-

dsddsஎனது மகளின் படுகொலை விசாரணையை விரைவுபடுத்தி விரைவில் நீதியை பெற்றுத்தாருங்கள் என வித்தியாவின் தாயார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வவுனியா நகர்ப்பகுதியில் வித்தியாவின் குடும்பத்தினருக்கு வீடு கையளிக்கும் நிகழ்வு இன்றுபகல் இடம்பெற்றபோதே வித்தியாவின் தாயார் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார். யாழ்ப்பாணம் புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் தாயாரை ஜனாதிபதி யாழ்ப்பணத்தில் முன்பு சந்தித்திருந்தபோத தனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு கருத்தி வவுனியாவில் வீடொன்றை பெற்றுத்தருமாறு கோரியிருந்தார். இந்நிலையில் வவுனியா காமினி மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில் வீடொன்று நிர்மாணிக்கப்பட்டிருந்தது. இதனை ஜனாதிபதி கையளிக்கும் நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றபோதே வித்தியாவின் தாயார் இக்கோரிக்கையை முன்வைத்ததுடன் மகளின் கொலை தொடர்பான விசாரணையை விரைவுபடுத்தி குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கைதான 14 வெளிநாட்டவர்களும் தடுத்துவைப்பு-

5656ஹெரோயின் 110 கிலோகிராமுடன் கைதுசெய்யப்பட்ட வெளிநாட்டுப் பிரஜைகள் 14 பேரையும் ஏழு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதியளித்துள்ளது. சந்தேகநபர்களை நேற்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியவேளை, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இதன்படி, பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் குறித்து தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, குறித்த வெளிநாட்டுப் பிரஜைகளின் கைது குறித்து இலங்கையிலுள்ள தூதுவராலயங்கள் மூலம் அந்தந்த நாடுகளுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ருவன் குணசேகர கூறியுள்ளார். கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் அண்மையில் இலங்கையின் தெற்கு கடற்பகுதியில் வைத்து படகொன்றிலிருந்து 110 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது. இதேவேளை, அப் படகில் இருந்த ஈரான் பிரஜைகள் 10பேர், பாகிஸ்தான் பிரஜைகள் இருவர், இந்திய மற்றும் சிங்கப்பூர் பிரஜைகள் இருவர் என 14பேர் இதன்போது, கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

திருக்கோவில் தங்கவேலாயுதபுரத்தில் குண்டுகள் மீட்பு-

motorஅம்பாறை மாவட்டம் திருக்கோவில் – தங்கவேலாயுதபுரம் பிரதேச காட்டுப் பகுதியிலிருந்து மூன்று மோட்டார் குண்டுகள் இன்று மீட்டகப்பட்டுள்ளன.

அம்பாறை விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து பொலிசாருடன் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து அந்த காட்டுப் பகுதியில் சோதனை நடத்தினர். இதன்போது, நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று மோட்டார் குண்டுகளை இன்று காலை 11.00 மணியளவில் மீட்டனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட குண்டுகளை நீதிமன்ற உத்தரவைப் பெற்று பொத்துவில் அறுகம்பை விசேட அதிரடிப் படையினரை வரவழைத்து அவ் இடத்தில் வெடிக்கவைத்து அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இது கடந்த காலத்தில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தகுதிகாண் வைத்திய நிபுணர்கள் தொழிற்சங்க போராட்டம்-

hospital nnவடக்கு, கிழக்கு மாகாணங்களில் தகுதிகாண் வைத்திய நிபுணர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலதிக கொடுப்பனவிற்கான நேரம் மாதத்திற்கு 80மணித்தியாலங்களாக மட்டுப்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தகுதிகாண் வைத்திய நிபுணர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தின் செயலாளர் தர்மகீர்த்தி தெரிவித்துள்ளார். இதன்பிரகாரம் மாலை 4மணிக்கு பின்னர் பணிகளில் ஈடுபடுவதிலிருந்து விலகியிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண சுகாதார திணைக்கள அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும் உரிய தீர்வு எட்டப்படவில்லை என சம்மேளனத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார். ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு கால அவகாசம் கோரியதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் வடக்கு சுகாதார திணைக்கள பணிப்பாளருடன் நாளைய தினத்தில் பேச்சுவார்த்தையொன்று நடைபெறவுள்ளதாக சம்மேளனத்தின் செயலாளர் தர்மகீர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

மூன்று புதிய மேம்பாலங்களை நிர்மாணிப்பதற்கு தீர்மானம்-

WEEWEEEWEமூன்று புதிய மேம்பாலங்களை நிர்மாணிப்பதற்கு நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் டி.சி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கனேமுல்ல ரயில் கடவை பகுதியிலும் பொல்கஹவல ரயில் கடவைக்கு மேலாகவும், மற்றும் ராஜகிரிய – நாவல பகுதியிலும் மேம்பாலங்களை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நிதியுதவின் கீழ் 53 மில்லியன் யூரோ இந்த நிர்மாணத்திட்டங்களுக்காக செலவிடப்படவுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

குமார் குணரட்னத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்-

kumar gunaratnamமுன்னிலை சோசலிசக்கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரட்னத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுவதோடு அரசியல் பழிவாங்கள் அடிபடையில் திட்டமிட்டே அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதா முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது.

எவ்வாறாயின் அரசாங்கமானது குமார் குணரட்னத்தின் குடியுரிமையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுருத்தியுள்ளது.

முன்னிலை சோசலிச கட்சியினரினால் இன்றைய தினம் கொழும்பில்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அக்கட்சியின் ஏற்பாட்டாளர் புபுது ஜெயகொட மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.