மட்டக்களப்பில் கட்சி அங்கத்தவர்களுடன் த.சித்தார்த்தன் (எம்.பி) கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில்,
சமகால அரசியல் நிலைமைகள், கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் என்பன பற்றியும், கிழக்கு மாகாணத்தில் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டதோடு, அரசியல் தீர்வு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தினைத் தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றும் இடம்பெற்றது.