Header image alt text

வடக்கில் தற்கொலை அங்கி விவகாரம் இராணுவம் செய்திருந்தால் பாரதூரமானது,அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டும்-த.சித்தார்த்தன் எம்.பி-

P1360388அர­சாங்கம் நல்­லி­ணக்கம், அர­சியல் தீர்வு என எல்லா விட­யங்­களைப் பற்­றியும் பேசிக் கொண்­டி­ருக்­கி­றது. இந்­நி­லையில் வடக்கில் தற்­கொலை அங்கி கண்­டு­பி­டிக்­கப்­பட்­டிருப்­ப­தாக செய்­திகள் வெளி­யா­கின. இதனை இரா­ணுவம் செய்­தி­ருக்­கு­மானால் அது பாரதூ­ர­மா­ன விட­ய­மாகும். இவ்­வி­டயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கேள்வி எழுப்­பு­வதை விட அர­சாங்­கமே அக்­கறை காட்ட வேண்டும் என்றும் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன் தெரி­வித்தார்.

மட்­டக்­க­ளப்­புக்கு விஜயம் செய்த சித்­தார்த்தன், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வியா­ழேந்­தி­ரனின் அலு­வ­ல­கத்தில் அவ­ருடன் இணைந்து கட்சி உறுப்­பி­னர்­களைச் சந்­தித்­ததன் பின்னர் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின்போதே இந்தக் கருத்­தினை வெளி­யிட்டார். தொடர்ந்து கருத்துத் தெரி­வித்த சித்­தார்த்தன் மேலும் கூறு­கையில், வடக்கில் தற்­கொலை அங்­கிகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட விடயம் குறித்து இன்­னமும் முழு­மை­யான விசா­ர­ணைகள் முடி­வ­டை­ய­வில்லை. இருந்­தாலும் சிங்­கள ஊட­கங்கள் இதனைப் பிழை­யான வகை­களில் வெளிப்­ப­டுத்தி வரு­கி­ன்றன. இது உண்­மை­யி­லேயே நாட்­டுக்குக் கூடா­த­தொரு விடயம் என்­பது அவர்­க­ளுக்குத் தெரி­ய­வில்லை. ஆகவே இதனை நன்­றாக உணர்ந்து கொண்டு செயற்­பட வேண்டும். Read more

மட்டு மாவட்டத்தில் தமிழ் பெண் சாதனை-(படங்கள் இணைப்பு)-

sfdfdfdfdfdமட்டக்களப்பு கிரான் பிரதேசத்தைச் சேர்ந்த இராசா கஜேந்தினி (வயது 19) என்ற பெண் தேசிய கபடி அணிக்கு தெரிவாகி சாதனை படைத்துள்ளார். மேலும் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே பெண்கள் கபடி அணியில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் பெண் ஆவார். கிரான் மத்திய கல்லூரியின் மாணவியான இவர், 12 பேர் கொண்ட கபடி அணியில் 11 சிங்கள பெண்களுக்கு மத்தியில் ஒரே ஒரு தமிழ் பெண்ணாக தெரிவாகியுள்ளார். Read more

யா/புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில், புங்குடுதீவு அனைத்து பாடசாலை மாணவ, மாணவிகளுக்கான பொதுஅறிவுப் போட்டிகள்..! (அறிவித்தல்)-

002bnஎதிர்வரும் 18.04.2016 அன்று “தாயகம் சமூக சேவை அகம்” அமைப்பினால் “நூலகம்” புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயத்துக்கு முன்னாள் உள்ள கடைத் தொகுதியில் திறக்கப்பட உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இதனை முன்னிட்டு புங்குடுதீவு “தாயகம்” நூலகத்தால், புங்குடுதீவு அனைத்து பாடசாலைகளில் தரம் 1 முதல் 8 வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு, 09.04.2016 சனிக்கிழமை அன்று காலை 08.30 மணி முதல் யா/புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் பின்வரும் போட்டிகள் நடைபெறவுள்ளன.

தரம் 1 அச்சுப்பதித்தல்
தரம் 2 படம் வரைதல்
தரம் 3 ஒட்டுச்சித்திரம்
தரம் 4 சுரண்டல் சித்திரம்
தரம் 5 – 8 பொதுஅறிவுப் போட்டி
Read more

பிரதமர் ரணில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த சந்திப்பு-

ranil mahindaபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நேற்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் உள்ள பிரதமர் காரியாலத்திலேயே இந்தச் சந்திப்பு, சுமார் 20 நிமிடங்கள் இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின் போது, நாட்டின் பாதுகாப்பு மற்றும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாகப் பொலிஸாரை பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகின்றது. மஹிந்த ராஜபக்ஷவுடன், நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன சென்றிருந்ததுடன்; பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம இருந்துள்ளார். இதேவேளை, இராணுவத்துக்குப் பொறுப்பாக ஜனாதிபதியும் பொலிஸ{க்கு பொறுப்பாக பிரதமரும் இருக்கின்றனர். இந்நிலையில், பாதுகாப்புச் சபை எடுத்த முடிவுக்கு அமையவே, மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு அகற்றப்பட்டுள்ளது. அவருக்கு மட்டுமன்றி, ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவப் பாதுகாப்பும் அகற்றப்படவுள்ளதாக தெரியவருகின்றது. முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவப் பாதுகாப்பை அகற்றிக்கொள்வதற்கு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுக்கே, பாதுகாப்பு கவுன்சில் அங்கிகாரமளித்துள்ளதாக தெரியவருகின்றது.

யாழ். கொழும்பு சொகுசு பஸ்ஸில் முதிரைக் குற்றிகள் கடத்தல்-

fdfdfdfயாழ்ப்பாணம் கொழும்பு சொகுசு பஸ்ஸில் முதிரை மரக்குற்றிகள் கடத்தப்பட்ட சம்பவம் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசத்தின் சிறாட்டிக்குளம் பகுதியில் வைத்து யாழ்ப்பாணம் – கொழும்பு சேவையில் ஈடுபடும் சொகுசு பஸ்ஸில் சட்டவிரோதமான முறையில் முதிரை மரக் குற்றிகள் கடத்தி வரப்பட்டபோது பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் இயங்கும் விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டது. நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் சாரதி கைதாகியதுடன், வாகன உரிமையாளர் மற்றும் உதவியாளர்கள் அவ்விடத்தில் இருந்து தப்பியுள்ளனர். குறித்த பஸ் தற்போது மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இதன்போது நான்கு இலட்சம் ரூபாய் பெறுமதியான முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. பயணிகள் பஸ்ஸின் உட்கட்டமைப்பானது பயணிகள் இருக்கைகள் அனைத்தும் அகற்றப்பட்டு மரக்குற்றிகள் கடத்தலுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டிருந்துள்ளது. குறித்த பஸ்ஸில் இதற்கு முன்னரும் பல தடவைகள் சில உள்ளுர் பொலிசாரின் ஒத்தாசையுடன் நடைபெற்று வந்துள்ளது எனவும், அப்பகுதி மக்கள் இது தொடர்பில் பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் முறையிட்டு அவரின் தலைமையில் கீழ் செயற்படும் விசேட குற்றத் தடுப்புப் பிரிவினரே மேற்படி பஸ்ஸினை மரக் குற்றிகளுடன் பிடித்துள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக யாழ் – கொழும்பு சொகுசு பஸ்களில் கஞ்சா கடத்துவது உள்ளிட்ட பல்வேறு மனித குலத்துக்கு தீங்கு விளைவிக்கும் சட்டவிரோதமான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

அதிவேக வீதிகளில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கூடுதல் அதிகாரம்-

highwayஅதிவேக நெடுஞ்சாலைகளில் அனுமதி பத்திரம் இன்றி பயணிக்கும் பயணிகள் பஸ் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அவ் வீதிகளில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமசந்தர தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் எதிர்காலத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி பயணிக்கும் பஸ்களுக்கு எதிராகவும் அதிக பயணிகளை ஏற்றி செல்லும் பஸ்களுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்வதற்கு நெடுஞ்சாலைகளில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அதிக பயணிகளை ஏற்றி செல்லும் பஸ் சாரதிகளுக்கு அபராதம் விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்-

7y68787வடமாகாண தொழில்நுட்பச் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில்நுட்பக் கற்கை நெறியைக் கற்று வெளியேறிய மாணவர்கள், தமக்கு அரசாங்க வேலையைப் பெற்றுத்தருமாறு கோரி வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

வடமாகாண தொழில்நுட்பச் சங்கத்தில் மொத்தம் 350பேர் இருப்பதாகவும் தங்களுக்கு நிபந்தனைகள் இல்லாமல் நேரடியாக உள்வாங்கும் படியும் அவர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

இவர்களின் ஆர்ப்பாட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில், கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் தற்போது கல்வி கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களும் தொழில்நுட்பக் கல்லூரி முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கு விஜயம்-

ranil wickramaஉத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று பிற்பகல் 1.30 மணியளவில் சீனாவுக்குப் பயணமாகியுள்ளார்.

சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் பிரதமர் அங்கு செல்கின்றார். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட 15பேர் இந்த விஜயத்தில் பங்கேற்றுள்ளனர்.

இவ்விஜயத்தின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீன ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அந்த நாட்டின் முக்கிய பிரமுகர்களுடன் இணைந்து கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளதோடு, இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கான சீனாவின் முதலீடுகள் தொடர்பில், இந்த விஜயத்தின்போது விசேடமாக அவதானம் செலுத்தப்படவுள்ளது.

இன்றும் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு-

parliamentஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் மூன்று அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்துள்ளனர்.

லக்ஸ்மன் செனவிரத்ன (ஐ.ம.சு.மு.) விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி இராஜாங்க அமைச்சராகவும்,

பாலித தேவரப்பெரும (ஐ.தே.க) உள்விவகாரம், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார பிரதி அமைச்சராகவும், மனுஷ நாணயக்கார (ஐ.ம.சு.மு) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சராகவும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.