மட்டு மாவட்டத்தில் தமிழ் பெண் சாதனை-(படங்கள் இணைப்பு)-

sfdfdfdfdfdமட்டக்களப்பு கிரான் பிரதேசத்தைச் சேர்ந்த இராசா கஜேந்தினி (வயது 19) என்ற பெண் தேசிய கபடி அணிக்கு தெரிவாகி சாதனை படைத்துள்ளார். மேலும் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே பெண்கள் கபடி அணியில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் பெண் ஆவார். கிரான் மத்திய கல்லூரியின் மாணவியான இவர், 12 பேர் கொண்ட கபடி அணியில் 11 சிங்கள பெண்களுக்கு மத்தியில் ஒரே ஒரு தமிழ் பெண்ணாக தெரிவாகியுள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் தனது முதலாவது கபடி போட்டியில் பங்குபெறுவதற்காக ஈரான் பயணமாகவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரை நேரில் சென்று பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன்(அமல்) இவரை வாழ்த்தியதோடு, ஊக்குவிக்கும் முகமாக சிறு தொகை பண உதவியையும் வழங்கியுள்ளார். செல்வி.கஜேந்தினி தனது வறுமையின் மத்தியிலும் வெற்றியைப் பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், கிரான் ஐக்கிய விளையாட்டுக் களகத்திற்கும், பயிற்சிவிப்பாளருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

etrtrtertrtrtrt