யா/புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில், புங்குடுதீவு அனைத்து பாடசாலை மாணவ, மாணவிகளுக்கான பொதுஅறிவுப் போட்டிகள்..! (அறிவித்தல்)-

002bnஎதிர்வரும் 18.04.2016 அன்று “தாயகம் சமூக சேவை அகம்” அமைப்பினால் “நூலகம்” புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயத்துக்கு முன்னாள் உள்ள கடைத் தொகுதியில் திறக்கப்பட உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இதனை முன்னிட்டு புங்குடுதீவு “தாயகம்” நூலகத்தால், புங்குடுதீவு அனைத்து பாடசாலைகளில் தரம் 1 முதல் 8 வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு, 09.04.2016 சனிக்கிழமை அன்று காலை 08.30 மணி முதல் யா/புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் பின்வரும் போட்டிகள் நடைபெறவுள்ளன.

தரம் 1 அச்சுப்பதித்தல்
தரம் 2 படம் வரைதல்
தரம் 3 ஒட்டுச்சித்திரம்
தரம் 4 சுரண்டல் சித்திரம்
தரம் 5 – 8 பொதுஅறிவுப் போட்டி

போட்டிகள் யாவும் 09.04.2016 அன்று காலை 08.30 மணி முதல் யா/புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் நடைபெறும்.

(தரம் ஒன்று முதல் நான்கு வரையான மாணவ மாணவிகளுக்கு காலை 09.00 மணி முதல் காலை 10.00 மணி வரையும்..,

தரம் ஐந்து முதல் எட்டு வரையான மாணவ மாணவிகளுக்கு காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரையும்.., போட்டிகள் நடைபெறும்.
***தரம் ஒன்று முதல் நான்கு வரையான மாணவ மாணவிகள் சித்திரப் போட்டிக்கு உரிய பொருட்களை, மாணவர்களே கொண்டுவர வேண்டும்.)

ஒவ்வொரு ஆண்டுப் பிரிவிலும், முதல் 3 இடங்களை பெறும் மாணவர்களுக்கு சிறப்பு பரிசில்களும், 5 ஆறுதல் பரிசில்களும் “தாயகம் நூலகத் திறப்பு விழா”வின் போது வழங்கப்படும்.

**புங்குடுதீவு அனைத்து பாடசாலை மாணவ, மாணவிகளுக்கான பொதுஅறிவுப் போட்டிகள்..
**இடம்: யாஃபுங்குடுதீவு மகா வித்தியாலயம்..
**காலம்: 09.04.2016 சனிக்கிழமை அன்று காலை 08.30 மணி முதல்..

இதனை புங்குடுதீவின் அனைத்துப் பாடசாலை பொறுப்பாசிரியர்களும் கவனத்தில் கொண்டு, மாணவ மாணவிகளுக்கு “ஆக்கமும், ஊக்கமும்” அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

திருமதி. த. சுலோசனாம்பிகை,
“தாயகம் சமூக சேவை அகம்”
புங்குடுதீவு.