வடக்கில் தற்கொலை அங்கி விவகாரம் இராணுவம் செய்திருந்தால் பாரதூரமானது,அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டும்-த.சித்தார்த்தன் எம்.பி-

P1360388அர­சாங்கம் நல்­லி­ணக்கம், அர­சியல் தீர்வு என எல்லா விட­யங்­களைப் பற்­றியும் பேசிக் கொண்­டி­ருக்­கி­றது. இந்­நி­லையில் வடக்கில் தற்­கொலை அங்கி கண்­டு­பி­டிக்­கப்­பட்­டிருப்­ப­தாக செய்­திகள் வெளி­யா­கின. இதனை இரா­ணுவம் செய்­தி­ருக்­கு­மானால் அது பாரதூ­ர­மா­ன விட­ய­மாகும். இவ்­வி­டயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கேள்வி எழுப்­பு­வதை விட அர­சாங்­கமே அக்­கறை காட்ட வேண்டும் என்றும் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன் தெரி­வித்தார்.

மட்­டக்­க­ளப்­புக்கு விஜயம் செய்த சித்­தார்த்தன், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வியா­ழேந்­தி­ரனின் அலு­வ­ல­கத்தில் அவ­ருடன் இணைந்து கட்சி உறுப்­பி­னர்­களைச் சந்­தித்­ததன் பின்னர் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின்போதே இந்தக் கருத்­தினை வெளி­யிட்டார். தொடர்ந்து கருத்துத் தெரி­வித்த சித்­தார்த்தன் மேலும் கூறு­கையில், வடக்கில் தற்­கொலை அங்­கிகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட விடயம் குறித்து இன்­னமும் முழு­மை­யான விசா­ர­ணைகள் முடி­வ­டை­ய­வில்லை. இருந்­தாலும் சிங்­கள ஊட­கங்கள் இதனைப் பிழை­யான வகை­களில் வெளிப்­ப­டுத்தி வரு­கி­ன்றன. இது உண்­மை­யி­லேயே நாட்­டுக்குக் கூடா­த­தொரு விடயம் என்­பது அவர்­க­ளுக்குத் தெரி­ய­வில்லை. ஆகவே இதனை நன்­றாக உணர்ந்து கொண்டு செயற்­பட வேண்டும்.

இலங்­கையில் எதுவும் நடக்­கலாம், உண்­மை­யி­லேயே என்ன நடந்தது என்­பது பற்றி பூர­ண­மாக ஆராய வேண்டும். இது ஒரு முக்­கி­ய­மா­ன­தொரு பிரச்­சினை. அதனை விடுத்து பலரும் பல­வா­றாகப் பேசு­வது சரி­யா­னது என்று சொல்ல முடி­யாது, சிவா­ஜி­லிங்கம் உள்­ளிட்ட பலர் சொல்­வது போல் வைத்­துத்தான் எடுக்­கப்­பட்­டி­ருந்தால் இது ஒரு பார­தூ­ர­மான விடயம். அர­சாங்கம் நல்­லி­ணக்கம், அர­சியல் தீர்வு என எல்­லா­வி­ட­யங்­களைப் பற்­றியும் பேசிக் கொண்­டி­ருக்­கி­றது. ஐ.நா.வில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்தில் உடன்­பாட்­டா­ள­ராக இருந்­தி­ருக்­கி­றார்கள். இவ்­வா­றான நிலையில் அர­சாங்­கத்­திற்குத் தெரி­யாமல் இரா­ணுவம் இவ்­வா­றா­ன­தொன்றைச் செய்­தி­ருக்­கு­மானால் மிகப் பாரதூ­ர­மா­ன­தொரு விட­ய­மாகும். இதனை எங்­களை விடவும் அர­சாங்கம் தான் கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதே­போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பதிவு செய்தல், தமிழ் மக்கள் பேரவை தொடர்பான விடயங்கள், தன்னுடைய மட்டக்களப்பு விஜயம், இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய சீன உறவின் நெருக்கம், முன்னாள் போராளிகளின் விடயம், அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப் பினர்களான சித்தார்த்தன் மற்றும் வியாழேந்திரன் ஆகியோர் கருத்துக்களை வெளியிட்டனர்.