Header image alt text

இலங்கை சீனாவிற்கிடையே ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்து-

ewewewஇலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில், நேற்று ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சீனப் பிரதமர் லீ கெகுயாங் ஆகியோர் இந்த ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டதாக பிரதமர் காரியாலயம் கூறியுள்ளது. வர்த்தக மற்றும் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம், தொழில்நுட்ப புரிந்துணர்வு ஒப்பந்தம், சிறுநீரக நோய் பரிசோதனை தொடர்பான ஒப்பந்தம், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் பாகத்தை முன்னெடுப்பதற்கான ஒப்பந்தம் ஆகியன உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதுதவிர 500 மில்லியன் யுவான் நிதியை இலங்கைக்கு வழங்குவதற்கு சீனா இணங்கியுள்ளது. இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது சீனப் பிரதமர் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார். சீனாவின் பீஜிங் நகரில் அமைந்துள்ள மக்கள் மண்டபத்தில் இடம்பெற்ற சந்திப்பில் இலங்கையின் அபிவிருத்தி முன்னெடுப்புகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க, சீன அரசாங்கம் தயாராக உள்ளது என்று சீன பிரதமர் கூறியுள்ளார். சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்றை விரைவில் ஏற்படுத்திக் கொள்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான உயர்மட்டக் குழுவினர், இன்று முற்பகல், சீனாவின் முதலீட்டாளர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.இதில் சீன வர்த்தக சங்கத்தின் தலைவர் உட்பட 400 இற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் கலந்துகொண்டிருந்துள்ளனர்.

காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்-

ertrtttயாழ். தீவகத்தில் மூன்று பகுதிகளில் இராணுவம் மற்றும் கடற்படையினருக்கு முகாம் அமைப்பதற்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ். பிரதேச நிலவை அலுவலகம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. தீவகத்தில் மூன்று பகுதிகளில் இராணுவம் மற்றும் கடற்படையினருக்கு முகாம் அமைப்பதற்காக பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படும் எனவும், இதற்கான நில அளவை இன்று இடம்பெறும் எனவும் அறிவித்தல் விடுக்கபட்டிருந்தது. இதற்கமைய இன்று காலை நில அளவை அலுவலகத்துக்கு முன் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், நில அளவை திணைக்கள அதிகாரிகளை அலுவலகத்தை விட்டு வெளியே செல்லவிடாது ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். சம்பவத்தின்போது ஆர்ப்பாட்;டக்காரர்களுடன் உரையாடிய நில அளவை அதிகாரிகள், ‘இச்சுவீகரிப்பை முற்றாக நிறுத்துவதற்கு எமக்கு அதிகாரம் இல்லை. எனினும், இன்றைய தினம் அளவை செய்யச் செல்லவில்லை. எமது மேலதிகாரிகள் தெரிவித்தால் மாத்திரமே எம்மால் அளவை செய்வதை நிறுத்தமுடியும்’ என தெரிவித்தனர். இவ் ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன், வடமாகாணசபை உறுப்பினர்களான க.சிவாஜிலிங்கம், விந்தன் கனகரத்தினம், பா.கஜதீபன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கின் முதலாவது சித்த ஆயுள்வேத வைத்தியசாலை திறந்துவைப்பு-

sfdfdfdfdfdfffகிழக்கு மாகாணத்தில் மாநகர சபையினால் திறக்கப்படும் முதலாவது சித்த ஆயுள்வேத வைத்தியசாலை இன்று மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது. சுதேச வைத்தியத்துறை அமைச்சின் அனுசரணையுடன் ஆயுள்வேத திணைக்களத்தின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாநகர சபை இதனை திறந்து வைத்துள்ளது. கிழக்கில் திறக்கப்பட்டுள்ள முதலாவது சித்த ஆயுள்வேத வைத்தியசாலை இதுவாகும்.

மாநகர ஆணையாளர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் இடம்பெற்ற திறப்புவிழா வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமுக தலைவர் எம்.மாமாங்கராசா பிரதம அதிதியாக கலந்து கொண்டார். சித்த ஆயுள்வேத வைத்தியதிகாரி திருமதி பார்த்திபன் உட்பட ஆயுள்வேத திணைக்கள அதிகாரிகள் மாநகர சபை அதிகாரிகள் பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு இவ்வைத்தியசாலை மூலமாக இலவச சித்த ஆயுள்வேத வைத்தியவசதிகளை வழங்கவுள்ளதாக இங்கு உரையாற்றிய மாநகர ஆணையாளர் கூறினார்.

சாவகச்சேரி வெடிபொருள் தொடர்பில் மேலும் ஐவர் கைது-

werererrerயாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிப்பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் ஐவர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரதான சந்தேகநபரின் அலைபேசிக்கு உள்வந்த மற்றும் அலைபேசியிலிருந்து வெளிச்சென்ற அழைப்புகளின் ஊடாக மிகநெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தனர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இந்த ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், நெல்லியடி மற்றும் சாவக்கச்சேரி ஆகிய இடங்களை வதிவிடமாக கொண்டவர்கள் என கூறப்படுகிறது.

இலங்கையின் சிறைச்சாலைகளில் அதிக இட நெருக்கடி-

jailநாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் அதிக இடநெருக்கடி காணப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலைகளில் அதிகப்படியாக 8000 பேர்வரை மட்டுமே இருக்கலாம் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நிஷாந்த தனசிங்க கூறியுள்ளார்.

ஆனால் தற்போது சிறைச்சாலைகளில் 18,000 பேர் வரை உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவர்களுள் அதிகமானவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் எனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நிஷாந்த தனசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட வேண்டும்-வடக்கு முதல்வர்-

vigneswaranஇலங்கை இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது. அதில் வடக்கு, கிழக்கில் முஸ்லிம் தன்னாட்சி அலகும், தென்னிலங்கையில் மலையக மக்கள் ஓர் அலகாகவும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என வட மாகாண சபை முன்மொழிகளை சமர்ப்பித்துள்ளது. இலங்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் நிலையில் அதற்கான முன்மொழிவாக இந்த பிரதான விடயம் இன்று வடக்கு மாகாண சபையில் முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனால் முன்வைக்கப்பட்டது. இதனைத்தவிர ஒற்றையாட்சிக்கு பதிலாக சமஷ்டி முறை அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் வட மாகாண சபையின் முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை பிரஜை ஒருவர் மற்றுமொருவருக்கு கீழானவர் என்ற முறைமை மாற்றப்பட வேண்டும். எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருக்ககூடிய ஒரு இனம் மற்றைய இனத்தை விட கூடிய பயனை கோர கூடாது. வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்கும் போது முஸ்லிம் தன்னாட்சி பிராந்திய சபை உருவாக்கப்படும். இந்த தன்னாட்சி பிராந்தியத்தின் நிலை பரிமாணம் மற்றும் நியாயாதிக்கம் என்பன தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளால் கலந்துரையாடப்பட்டு முடிவெடுக்கப்படும். மொழி ரீதியிலான தமிழ் பேசும் வடக்கு கிழக்கு மாநிலமானது மாநில நாடாளுமன்றம் ஒன்றை கொண்டிருக்கும். Read more

வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)-

ec15dbab-8e87-4934-967b-226c23426fa0வள்ளிபுனம் இனிய வாழ்வு இல்ல மண்டபத்தில் வைத்து முல்லைத்தீவு மாவட்ட. அமரா குடும்பத்தலைமை தாங்கும் பெண்கள் ஒன்றியத்தின் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக லண்டனைச் சேர்ந்த ஓம் சரவணபாகவ சேவா அறக்கட்டளை நிதியத்தின் அன்பளிப்பின் மூலம் நேற்று பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. இவ் நிகழ்வு தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு மாவட்ட. அமரா குடும்பததலைமை தாங்கும் பெண்கள் ஒன்றியத்தினால் அவர்களின் பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளினை மேம்படுத்துவதற்காக கற்றல் உபகரணங்களை தந்துதவுமாறு வட்டு இந்து வாலிபர் சங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனார். இவ் கோரிக்கையினை லண்டனைச் சேர்ந்த ஓம் சரவணபகவா சேவா அறக்கட்டளை நிதியத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றமையினையிட்டு ஒன்றியத்தின் அங்கத்தவர்களின் பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி இன்று முதற் கட்டமாக தெரிவுசெய்யப்பட்ட 40 பிள்ளைகளுக்கு புத்தக பைகள் மற்றும் அப்பியாச கொப்பிகளை வழங்கியிருந்தனர் இவ் நிகழ்வானது முல்லைத்தீவு மாவட்ட. அமரா குடும்பத்தலைமை தாங்கும் பெண்கள் ஒன்றியத்தின் தலைமையில் நடைபெற்றிருந்தது. Read more