வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)-

ec15dbab-8e87-4934-967b-226c23426fa0வள்ளிபுனம் இனிய வாழ்வு இல்ல மண்டபத்தில் வைத்து முல்லைத்தீவு மாவட்ட. அமரா குடும்பத்தலைமை தாங்கும் பெண்கள் ஒன்றியத்தின் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக லண்டனைச் சேர்ந்த ஓம் சரவணபாகவ சேவா அறக்கட்டளை நிதியத்தின் அன்பளிப்பின் மூலம் நேற்று பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. இவ் நிகழ்வு தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு மாவட்ட. அமரா குடும்பததலைமை தாங்கும் பெண்கள் ஒன்றியத்தினால் அவர்களின் பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளினை மேம்படுத்துவதற்காக கற்றல் உபகரணங்களை தந்துதவுமாறு வட்டு இந்து வாலிபர் சங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனார். இவ் கோரிக்கையினை லண்டனைச் சேர்ந்த ஓம் சரவணபகவா சேவா அறக்கட்டளை நிதியத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றமையினையிட்டு ஒன்றியத்தின் அங்கத்தவர்களின் பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி இன்று முதற் கட்டமாக தெரிவுசெய்யப்பட்ட 40 பிள்ளைகளுக்கு புத்தக பைகள் மற்றும் அப்பியாச கொப்பிகளை வழங்கியிருந்தனர் இவ் நிகழ்வானது முல்லைத்தீவு மாவட்ட. அமரா குடும்பத்தலைமை தாங்கும் பெண்கள் ஒன்றியத்தின் தலைமையில் நடைபெற்றிருந்தது.

1aa67a12-6f40-4fe1-8606-11035413bc79 2f3ddc4b-e5d1-46b8-978f-6f240335ba5f 42ae7113-316d-48e3-b93f-e90ccfcb121f 92baab3b-263b-48b3-b721-dcc13dd376b3 5359aff5-4963-4e77-b2bd-fe8931c52e43 23764a55-a70e-4bf7-b232-de00a2c1fdc8 84587a14-7f9e-4edf-afa7-056e9f0ff293 10469957-1ef9-426a-84a8-d96b8c64d176 96904096-d72a-488e-87be-5145cd069130