களனிப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியத்தினால், முல்லைத்தீவில் குழாய் நீர் கட்டமைப்பு திறப்பு விழா, கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)-

IMG_3732களனிப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவர் ஒன்றியத்தினால் அண்மையில் கொழும்பு தமிழ் சங்கத்தில் வெளியிடப்பட்ட “சாரல்” நூலின் மூலம் கிடைக்கப்பெற்ற மேலதிக நிதியில், முல்லைத்தீவு கல்வி வலயத்துக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு கோட்டத்தில், சுதந்திரபுரம் இருட்டுமடு கிராமத்தில் அமைந்துள்ள இருட்டுமடு தமிழ் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட குழாய் நீர் கட்டமைப்பு திறப்பு விழா வெகு சிறப்பாக வித்தியாலய முதல்வர் திரு து.யோகராசா தலைமையில் 08.04.2016 அன்று நடைபெற்றது. அத்துடன் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் அனுசரணையுடன், களனி பல்கலைக்கழக தமிழ் பழைய மாணவர் ஒன்றியமும் இணைந்து பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இதன்போது களனி பல்கலைக்கழக தமிழ் பழைய மாணவர் ஒன்றியத்தினால் புதிய நூலகம் ஒன்றை அமைப்பதற்காக பெருந்தொகையான நூல்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. இவ் நிகழ்வில் வித்தியாலய ஆசிரியர்களுடன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவரும், களனிப் பல்கலைக்கழக பழைய மாணவனுமான திரு சு.காண்டீபன், களனிப் பல்கலைக்கழக மாணவர்களான திரு கி.சதீஸ், திரு க.அனோஜன், திரு இ.பிரசாந்தன், திரு எஸ். விதுசாந்த் ஆகியோருடன் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளரும், ஊவா வெல்லச பல்கலைக்கழக மாணவனுமான எஸ். கேசவன், எஸ்.கஜூரன் ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்வுகளை சிறப்பித்திருந்தனர். 1 2 3
IMG_3618
IMG_3628 IMG_3634 IMG_3636 IMG_3637 IMG_3639 IMG_3640 IMG_3641 IMG_3643 IMG_3714 IMG_3716 IMG_3718 IMG_3732 IMG_3739 IMG_3746