கேரள ஆலய வெடிப்புச் சம்பவத்தில் 100ற்கும் அதிகமானோர் உயிரிழப்பு-

xzczxcஇந்தியாவின் கேரளாவில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 102பேர் உயிரிழந்ததோடு 350ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். கேரளாவின் கொல்லம் மாவட்டத்தின் பராவூர் பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று அதிகாலை 3 மணியளவில் 10,000 முதல் 15,000 பேர் வரையில் கலந்துகொண்ட மத பண்டிகை ஒன்றின்போதே வெடிப்பு இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் திருவனந்தபுரம் அரச மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தாம் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் உயிரிழந்த மக்களுக்கு தனது அனுதாபத்தை தெரிவிப்பதோடு காயமடைந்தோருக்காக பிரார்த்திப்பதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குறித்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவுக்காக பட்டாசுப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

பிரதமர் உள்ளிட்ட குழுவினர் நாடு திரும்பினர்-

ranilசீனாவுக்கு சென்றிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் இன்று அதிகாலை 12.15 அளவில் நாடு திரும்பியுள்ளனர். இதேவேளை, தனது சீன விஜயத்தின்போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்த நாட்டு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்துள்ளார்.

மேலும், சீனாவின் வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்ட அவர், இலங்கையில் முதலீடு செய்வது குறித்து அந்த நாட்டு முதலீட்டாளர்களுக்கு ஊக்குவிப்பை வழங்கியுள்ளதாகவும், பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை மீள ஆரம்பித்தமை, அதன் அருகில் விஷேட பொருளாதார வலயத்தை நிறுவுதல் போன்ற தீர்மானங்களுக்கு, சீனப் பிரதமர் மற்றும் ஜனாதிபதி இந்த சந்தர்ப்பத்தில் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.