சிறப்பாக நடைபெற்ற புங்குடுதீவு அனைத்து பாடசாலை மாணவ, மாணவயியர்க்கான பொதுஅறிவுப் போட்டிகள்-(படங்கள் இணைப்பு)-

013எதிர்வரும் 18.04.2016 அன்று தாயகம் சமூக சேவையகம் அமைப்பினால் புங்குடுதீவு ஸ்ரீகணேச மகாவித்தியாலயத்திற்கு முன்பாகவுள்ள கடைத் தொகுதியில் நூலகம் ஒன்று திறந்து வைக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு புங்குடுதீவு தாயகம் சமூக சேவையகத்தினால்; புங்குடுதீவு அனைத்துப் பாடசாலைகளிலும் தரம் ஒன்றுமுதல் தரம் எட்டுவரையில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்க்கு நேற்று யாழ். புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் அச்சுப்பதித்தல், படம் வரைதல், ஒட்டுச் சித்திரம், சுரண்டல் சித்திரம், பொதுஅறிவுப் போட்டிகள் போன்ற பல்வேறு போட்டி நிகழ்வுகள் நடைபெற்றன. மேற்படி போட்டிகளிலே புங்குடுதீவிலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் சேர்ந்த சுமார் 150ற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்தப் போட்டிகளுக்கு ஆசிரியர்களாகவும் நடுவர்களாகவும் பின்வருவோர் செயற்பட்டிருந்தனர்…
திருமதி சுலோசனம்பிகை தனபாலன் (புங்குடுதீவு தாயகம் கல்வி நிலையம் பிரதம போஷகர்)

செல்வி. ஜெகநந்தினி முத்துக்குமாரு (யாழ். வசாவிளான் மத்திய கல்லூரி)
திரு.திலீபன் (சித்தி விநாயகர் வித்தியாலய அதிபர்)
திருமதி. மகாராணி (சேர் துரைச்சுவாமி வித்தியாலயம்)
திருமதி. பாலேஸ்வரி (புங்குடுதீவு மகா வித்தியாலயம் ஆசிரியை)
செல்வி. கே.மாதுரி. (புங்குடுதீவு ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம்)
செல்வி மீனா உதயதர்சினி (புங்குடுதீவு ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம்)
செல்வி. மீனா செல்வின் புஷ்ப டெனின்சில்டா (புங்குடுதீவு தாயகம் கல்வி நிலையம்)
செல்வி. ட.பதுர்சனா (புங்குடுதீவு தாயகம் கல்வி நிலையம்)

இப் போட்டிகள் நேற்றுக்காலை 9.00மணிமுதல் 12.00மணிவரை சிறப்பாக நடைபெற்றது.
மேற்படி போட்டிகளிலே 150ற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் மாத்திரமல்லாது அவர்களின் பெற்றோர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

நடைபெற்ற போட்டிகளில் மேற்படி மாணவ, மாணவிகளிலே முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கான சிறப்பு பரிசில்களும் போட்டிகளில் கலந்து கொண்டிருந்த மாணவ, மாணவியர்கான 5 ஆறுதல் பரிசில்களும் எதிர்வரும் 18.04.2016 திங்கட்கிழமை அன்று தாயகம் சமூக சேவையகத்தினால் ஸ்ரீகணேச மகாவித்தியாலயத்திற்கு முன்பாகவுள்ள கடைத்தொகுதியில் புங்குடுதீவு ஸ்ரீகணேச மகா வித்தியாலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட நூலகத் திறப்பு விழாவின் போது வழங்கப்படவுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி,
திருமதி. சுலோசனாம்பிகை,
பிரதம போசகர்,
தாயகம் சமூக சேவையகம்,
புங்குடுதீவு.

001 003 008 013 019 022