வவுனியா கோவில்குளம் றொக்கட் விளையாட்டுக் கழகத்தின் 40ம் ஆண்டு நிறைவு மற்றும் புதுவருட நிகழ்வுகளுக்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் நிதியுதவி-(படங்கள் இணைப்பு)-

IMG_5622வவுனியா கோவில்குளம் றொக்கட் விளையாட்டுக் கழகத்தின் 40ஆவது ஆண்மு நிறைவு விழாவும், சித்திரை புதுவருட விழாவும் எதிர்வரும் 13,14ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இவ் நிகழ்வுகளுக்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் சார்பில் பரிசுப்பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக ஒருதொகை பணம் கையளிக்கப்பட்டது. இவ் நிகழ்வு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன் தலைமையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மாவட்ட தலைமைக் காரியாலயத்தில் இன்றையதினம் (10.04.2016) காலை நடைபெற்றது. இவ் நிகழ்வில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மாவட்ட இணைப்பாளருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் அதிதியாக கலந்துகொண்டு இவ் நிதியுதவியினை றொக்கட் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் திரு க.பார்த்தீபனிடம் வழங்கியிருந்தார். இவ் நிகழ்வில் றொக்கட் விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் ப.ஆதிசன் மற்றும் றொக்கட் விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினர்களான ராஜசேகர், பிரசாத், குணசீலன், அருட்செல்வன், குமார், கோபிநாத் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. புது வருட நிகழ்வுகளில் 13.04.2016 அன்று துவிச்சக்கரவண்டி ஓட்ட நிகழ்வும், மரதனும் நடைபெறும். அத்துடன் 14.04.2016 அன்று மைதான நிகழ்வுகள் நடைபெற உள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. IMG_5616 IMG_5617 IMG_5618 IMG_5619 IMG_5622